புதன் 08 2014

ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

20140107_110523.jpg ஐக் காட்டுகிறது
மனித உரிமை பாதுகாப்பு மையம்

தில்லை நடராஜன் கோயிலை திட்சதனுக்கு சொந்தமாக்கி தீர்ப்பு கூறிய நீதிபதிகளான சௌஹான், போப்டே இருவரும்.................

தில்லியிருந்து சென்னைக்கு  புஷ்பக விமானத்தில் வந்தால் வான்வழியாகத்தான் வரவேண்டும் .புகை வண்டியில் வந்தால்  இரு தண்டவாளத்தில்தான் வரவேண்டும். டீலகஸ் பஸ.கார்களில் வந்தால் நான்கு வழிச் சாலை மற்றும் அதற்க்கான சாலைகளில்தான் வரவேண்டும், இது அனைவருக்கும் தெரிந்த  முறை வழிகள்.

இந்த முறை வழிகளில் இல்லாமல்  புகை வண்டி  நான்கு வழிச்சாலைகளிலும் ஆகாய விமானம் தண்டவாளத்திலும் பஸ்சும் காரும்  வான் வழியில் வந்தால் அது முறை கேடான வழி......

இந்த முறைவழியை பின்பற்றாமல் முறைகேடான வழியை பின்பற்றித்தான் தில்லை நடராஜன் கோயில் வழக்கில் இந்தியாவின் உச்சி குடுமி மன்ற இரு நீபதிகளும் அள்ளி தள்ளியுள்ள தீர்ப்புதான் தில்லை கோயில் திட்சதனுக்கே சொந்தம். அரசு சொத்தை தனியாருக்கு கொடுத்தது மாதிரி

இந்த முறை கேடுடான வழிகள் இன்று நேற்று அல்ல........பிரிட்டீஷ் காரன் “ நாயை கொல்வதென்றாலும் தீர விசாரித்தே கொல்லுவோம் ” என்று சொல்லி, அநீதி மன்றத்தைகொண்டு வந்த காலத்திலிருந்தே இந்த முறை கேடான வழியைத்தான் பின்பற்றுவது மரபாக  இன்னி வரைக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது மேலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த முறைகேடான வழிகளை நுனிக்கி ஆராய்ந்து   கண்டு பிடித்து வாதாடும்  சுனா.....சாமி போன்ற வழக்குரைஞர்கள் எல்லாம் வழக்கு அறிஞர்களாக மாறியது இப்படித்தான்.

எப்போதாவது தப்பித்தவறி முறை வழியில் தீர்ப்பு ஒன்று வந்துவிட்டால். ....

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்.கொட்டப்பாக்குக்கு விலை சொல்லும்  உச்சி குடுமி நீதிமன்ற நீதிபதிகள் வழி வழியாக பின்பற்றப்படும் மரபு வழியை பயன் படுத்தித்தான் முறை கேடான தீர்ப்பை வழங்குவார்கள்.

இந்தியாவின் சுதந்திரமே முறை கேடாக பெற்றதுதான்.இதில்  நீதி மன்ற தீர்ப்பு மட்டும் முறை வழியாகவா வந்துவிடும்.

மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் 66 கோடி சொத்து சேர்த்த வழக்கிலும் இந்த வழி வழி மரபைத்தான் பின்பற்று வார்கள் நீ தி அரசர்கள்.

யானை வரும் பின்னே.......மணி யோசை.வரும் முன்னே....... என்பதுபோல்தான்

ஒரு ரூபாய் இட்லி தமிழனுக்கு, தில்லை  கோயில் தீட்சதனுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ளது.

3 கருத்துகள்:

  1. நீங்க சொல்வது சரிதான்.

    இதுபோலத்தான் பாப்ரி மஸ்ஜித் இவங்க சம்பாதிச்சுக் கட்டினதா எங்க கிட்ட குடுங்கன்னு இந்துக்க்ள் கேட்டால் உங்கள் போன்றவர்கள் மதவாதிகள் என்று திட்டுகிறார்கள்

    நான் திசை திருப்புவதற்காக இதை எழுதவில்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப்போகின்றன என்று கூறத்தான்.

    கே. கோபாலன்

    பதிலளிநீக்கு

  2. கருத்தை உதிர்த்த நண்பர் K Gopaalan அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. உங்களின் பதிவுக்கும் திரு கோபால் மறு மொழிக்கும் மறு மொழி

    http://kannimaralibrary.co.in/?p=1252

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...