புதன் 08 2014

“ நீதித்துறையில் ஒரு மாவீரர்”

படம்--நீதித்துறையின் மாவீரர்

 “ஊழல் சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது. தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது. மனசாட்சியை கொல்கிறது. மனித நாகரீகத்தை குலைக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ காட்டினால் அது ஒட்டு மொத்த சமூக வாழ்க்கைக்கும்  கேடாக முடியும்”-- --பெங்களுரு சிறப்பு நீதி மன்ற நடுவர் ஜான் மைக்கேல்  டி குன்கா

பார்ப்பன அதிகாரப் பரிவாரங்களின் குறுக்கீடுகள், நிர்ப்பந்தங்கள், ஜெயா- சசி கும்பல்களின் மிக மோசமான சீண்டல்கள், குரூரமான ஆத்திர மூட்டல்களை எல்லாம் சகித்துக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் கடுமையாக உழைத்து, குற்றவாளிகள் எந்தச் சந்து பொந்துகளில் தப்பிவிட முடியாதவாறு சட்ட நுட்பங்களை ஆய்ந்து, இதுவரையிலான சட்ட- நீதிகளிலும் விதிவிலக்கான ஒரு தீர்ப்பை, நீதியரசர் ஜான் மைக்கேல் டி குன்கா வழங்கி இருக்கிறார்.

வாய் சொல்லில் பறை சாற்றி  வந்து ஆட்சி செய்தவர்களும்,உயர் அதிகார பதவிகளில் இருந்து கொண்டு கோலோச்சியவர்களும், நீதி பரிபலானை செய்த நீதியரசர்களும்...

செய்யும் தொழிலிலே தெய்வம் என்று சொல்லிக் கொண்டு, செய்யும் தொழிலுக்கு எதிராகவும், அந்தத் தெய்வத்துக்கு விரோதமாகவும்தான் நடந்து வந்தார்கள் ..வந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு மத்தியில் சிறு துறும்பாக..... 

திறமையும் தகுதியும் இல்லாத சமூகமாக ,பார்ப்பனியத்தால் தள்ளி வைக்கப்பட்ட சமூகத்தை  சேர்ந்த  நீதியரசர் ஜான் மைக்கேல் குன்ஹா,  ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம், உமா சங்கர்  போன்ற  திறமையும் தகுதியும் மட்டுமல்ல நேர்மையும் உறுதியும் வாய்த்தவர்களால்தான்... ஜனநாயகம் என்ற இல்லாத ஒன்று உலாவுகிறது.

 ஊழலை தடுக்க வேண்டும், ஊழல் கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்

ஊழலுக்கு எதிராக “ நீதித்துறையில் ஒரு மாவீரர்” நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும், அதிகார பலத்திற்கு அடிபணியாமல் நீதியை நிலை நாட்டிய   நீதிபதியை  பாராட்ட வேண்டும். இருக்கும் ஊழல் வாதிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப  நேர்மையை விரும்பும், ஜனநாயத்தை விரும்பும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

நீதித்துறையின் மாவீரர் வாழ்க!!!








8 கருத்துகள்:

  1. #ஜனநாயகம் என்ற இல்லாத ஒன்று உலாவுகிறது #
    இது நூற்றிலே ஒரு வார்த்தை !
    வாழ்க ,மாவீரர் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நீதித்துறையில் ஒரு மாவீரருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...