வெள்ளி 24 2014

ஒரு நாள் கூத்துக்கு பிறகு திண்டாட்டம்

சிட்டுக்குருவி


 சிட்டு குருவிகனக்கா...
பல நாள் உழைத்து 
சேர்த்த பணம் ஒரு நாள்  
கூத்தில் காலியானது........

தேவைக்கு வாங்கிய
கடனுக்கு பலநாள் வட்டி 
கட்ட பரிதவித்த போதும்- 
அதை மறந்து, ஒரு நாள் 
கூத்தால் பல நாள் கட்டிய 
வட்டியும அடையாத  
முதலும் சேர்ந்து புதிய 
கடனாக எழுந்தது........

பலநாள் பார்க்காத லாபத்தை
ஒரு நாள் பார்த்தவனுக்கு
தீபாவளி  அவனுக்கு கொண்டாட்டம்

பல நாள் சேர்த்த 
பணத்தை ஒரு நாள் 
கூத்தில் இழந்தவனுக்கும்
புதிதாய் வட்டிக்கு  
வாங்கியவனுக்கும் தீபாவளி 
கூத்து திண்டாட்டம்.

இருப்பவனுக்கு தீபாவளி
பல நாள் கூத்தாகும்
இல்லாதவனுக்கு தீபாவளி
பல நாள் திண்டாட்டமாகும்








8 கருத்துகள்:

  1. தீபாவளி மட்டுமல்ல பல நாள் உழைத்து சேர்த்த பணத்தை ஒரு நாளில் காலி பண்ணும் எந்த மத கொண்டாட்டங்களும்,திருமண கொண்டாட்டங்களும் திண்டாட்டமாகும்

    பதிலளிநீக்கு
  2. உண்மையான வரிகள் அய்யா,
    இருப்பவன் இருக்கின்ற காசைக் கரியாக்கலாம்.
    இல்லாதவன் கடன்வாங்கிக் கரியாக்கும் காசிற்காக அதன் பின்பு கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
    நன்றி.
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் சொல்வது போல் எல்லா கொண்டாட்டகளும் திண்டாடடம் என்பதை இல்லாதவர்கள் தங்களுடைய நிலைமையை நிணைத்து பார்க்கவே மறுக்கிறார்கள் திரு. வேக நரியாரே..!!

    பதிலளிநீக்கு
  4. கடன்வாங்கிக் கரியாக்கும் காசிற்காக அதன் பின்பு கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. பல தடவை பட்டும் திருந்தவே மாட்டுகிறார்கள். திரு. ஊமைக் கனவுகள் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. கௌரவத்துக்காக கடன் வாங்கி கொண்டாடவும் வேண்டாம் ,பிறகு திண்டாடவும் வேண்டாமே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. கௌவரத்துக்காக கடன் வாங்குவதும் பிறகு திண்டாடுவதும் பிறப்புரிமை யாச்சே அதை எப்படி விட்டுவிடுவார்கள்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...