என் தெருவுல கட்டண கூட்டு குடிநீர்க்கு குழாய் பதிக்க தோண்டியதில் ஏற்கனவே ஆக்கிரமிப்பில் ஒத்தையடி பாதையாக இருந்த தெரு.. நடக்க முடியாத அளவுக்கு சீர் கெட்டு போயிருந்தது.
அதனால் என் இரு சக்கர வாகனத்த நிறுத்துவதற்கு இடமில்லாமல் தெரிந்தவர் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கடைமுன் நிறுத்தி கடை படிக்கட்டில் உட்கார்திருந்தேன்.
எனக்கு முன்னமே இருவர் உட்கார்திருந்ததால் இடைவெளி விட்டு தள்ளியே உட்கார்ந்திருந்தேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சில் கவனமாக இருந்தார்கள். அவர்கள் பேச்சில் பாதியை கேட்டாலும் முழு விபரமும் அறிந்து கொண்டேன். நான் அறிந்ததை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற கெட்ட எண்ணத்தில்... தெரிவிக்கிறேன்.
என் தெருவில் உள்ள ஒரு பெண்ணை பாஞ்சலியோடு ஒப்பிட்டு பேசினார்கள். பாஞ்சலிக்கு அய்ந்து புருசனாம்.. அவளுக்கு அய்ந்து புருசனாம். போதாது என்று துரியோதனனையும் ஆறாவது புருசனாக வைத்திருக்காளாம். அய்ந்து புருசர்களின் பெயர்களை சொன்னபோது இரண்டு பேர் யாரென்று தெரியவில்லை. மற்ற மூன்று பேர் நான் அறிந்தவர்கள். ஆறாவதாக துரியோதனன் எனக்கு தெரிந்தவன்.
மகா பாரத கதையில் பாஞ்சலிக்கு அய்ந்து புருசர்கள். துரியோதனனை வளைத்து போட்டாளா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் தெருவின் மகா பாரத நிகழ்வில் பாஞ்சாலி துரியோதனனை ஆறாவதாக வளைத்துவிட்டாள்.
ஆறு பேரா...உண்மையா ! என்று யோசித்தபோது பிற்பாடு அது உண்மைதான் என்று தெரிந்தது. தெருவே பொறாமையில் கொதித்தது. அவளின் கணவனைத் தவிர....
பேசிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் கேட்டார் .. பாஞ்சலிக்கு துரியோதனன் என்ன முறை வேண்டும் என்று.....
அமர்ந்திருந்தவர்களில் .ஒருத்தி சொன்னாள் மச்சான் முறை என்று..
சபதம் போட்டு துரியோதனை வளைத்து விட்டாள் பாஞ்சாலி
அது சரி...பாஞ்சாலிக்கு துரியோதனன் மச்சான் முறையா.??? நிஜந்தனா???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை