வெள்ளி 06 2015

மம்மி ரிட்டன்ஸ்.....!!!!


ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)

படிக்க--http://www.vinavu.com/2014/12/18/jaya-wealth-case-degeneration-of-tamilnadu-politics-com-marudhaiyan-
வினவு




படம்-Surya Born To Win




தலை முறை தலை முறையாக
குடுபத்தோடு பாடுபட்டும்
காலம் நேரம் பார்க்காமல்
கடுமையாக உழைத்தும்
வாங்கிய கடனை
அடைக்க முடியாமல்
நல்ல சாப்பாடு
சாப்பிட முடியாமல்
தவிக்கும் வாக்காள
பெரு மக்களே!!

ஒரு ரூபா சம்பளத்தில்
அறுபத்தாறு கோடியே
அறுபத்தைந்து லட்சம்
ரூபா சம்பாதிக்க
உங்களால் முடியுமா???

என்னால் முடியும்
என்று உங்களிடம்
ஓட்டு வாங்கிச்
சென்று உங்களுக்காக
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து தமிழகத்தை
ஆண்ட மம்மி
நிருபித்து உள்ளது.

ஒரு ரூபா சம்பளத்தில்
 கடுமையாக உழைத்து
உயர்ந்த மம்மி

பொறாமைக் காரர்களால்
ஏவி விடப் பட்ட பில்லி
சூனியங்களை பதினெட்டு
காலம் கடத்தியும்
சிலநாள் சிறை
கம்பிகளுக்குள் அடை
படும் தடங்கள்
ஏற்பட்டது.

அந்தத் தடங்கள்
நீங்க வேண்டி
தன் அடிமை
ஏவல் கூட்டம்
மூலம் யாகம்,
ஹோமம் ஆயிரம்
மொட்டை மண்
சோறு என்று
பலவித பரி
காரங்கள் செய்தார்

அந்த பரிகாரங்கள்
செய்ததின் பலனாக
ஒரு ரூபா சம்பளத்தில்
மீண்டும் உங்களுக்கு
உழைக்க அடுத்த வாரம்
மம்மி ரிட்டன்ஸ் ஆகிறார்.


.

10 கருத்துகள்:

  1. அடப்பேதியில ஓயிறுவியலா நீங்க சோத்தைத்தான் திங்கிறியலா ? இல்லை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லைத் திண்டாலும் அவியள்களுக்கு பேதியில போகது நண்பரே..பார்க்கிறவங்களுக்குத்தான் பேதியாகும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. எல்லாரையும் அந்தப் பயம் ஒட்டிக் கொள்ளும் நண்பரே...!

      நீக்கு
  3. மம்மி ரிட்டன்ஸ ஆகறாங்களா ? எப்படியும் முதல் பாகத்தவிடபயங்கரமாகத்தான் இருக்கும் .

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே ! முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் பயங்கரமாகத்தான் இருக்கும்

      நீக்கு
  4. என்ன செய்வது, அரசியல் அந்த அளவு அனைவரையும் ஆக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு+ இயல்=அரசியல்.. அரசியலை அந்தளவுக்கு அவர்கள் ஆக்கிவிட்டார்கள் ஐயா.....

      நீக்கு
  5. அவசியமான எச்சரிக்கை பதிவு.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...