ஞாயிறு 08 2015

அய்யா.... அவன் ஒரு...........

படம்-tamil.oneindia.com2

அவன் எனக்கு வணக்கம்
சொல்வதும் இடக்கைதான்
 மற்றவர்களுடன் கை
குலுக்குவதும் இடக்கைதான்.
கூட்டத்தைக் கண்டு
கை ஆட்டுவதும் இடக்கைதான்.
அமர்திருக்கும்போது கன்னத்தை
 தடவுவதும் இடக்கைதான்
பொருள்களை கொடுப்பதும்
வாங்குவதும் இடக்கைதான்
 மலம் கழித்த இடத்தை
கழுவதும் இடக்கைதான்
எல்லாச் செயல்களுக்கும்
அவன் பயன் படுத்துவது
 இடக்கை என்பதால்
அவனை நாங்கள்
லெப்ட்டன் என்று அழைக்கிறோம்

ஏனோ.. தாங்கள் சொல்வது
போல் உண்ணுவதற்கு  இடக்
கையை பயன் படுத்தாமல்
இருந்தாலும் அவன்
இடக்கைதான்..ஆகையால்
அய்யா  .....அவன் ஒரு
லெப்ட்டதான்.......................

14 கருத்துகள்:

  1. ஸூப்பர் நண்பா வாழ்த்துகள் தொடருங்கள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அவர்கள் கூடுதல் திறமைசாலியாக இருப்பதை பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுதல் திறமைசாலிகள்தான் நணபரே..சேட்டைகள் செய்வதிலும் கூடத்தான்.

      நீக்கு
  4. நன்றாக இருக்கிறது அண்ணா . தங்களின் பதிவுகள் இலைமறைக்காயாகவே இருப்பது ஏனோ ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்பானைகளை சில்வர் -சருவப்பானைகளை போல் சட்டுபுட்டுன்னு பயன்படுத்தினால் மண் பானை உடைந்து விடுமல்லவா..அதற்க்காகத்தான் நண்பரே.. இலைமறை காயாக....

      நீக்கு
  5. கையில் என்ன தலைவா பேதம், மனம் சரியாக இருந்தால் சரி, தாங்கள் லெப்ட்டன் என்று சொன்னதும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்ததது, என் அடுத்த பதிவாக,,,,,,,,,,,,, நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அடுத்த பதிவுக்கு ஒரு கதை நிணைவுக்கு வந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இடதுசாரி சிந்தனை யாருக்குத்தான் இல்லை ,அந்த கொள்கைக்காகத்தான் அதிகம் பேரில்லை !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...இடது..சாரிக்கு போயிட்டிங்களா..!!!!!. எந்தக் கமிசன் என்று முடிவு எடுப்பதற்குள் காணாமல் போன தங்கள் கருத்துரை வந்துவிட்டது ஜி.

      நீக்கு
  8. என் வோட்டு சரியாய் விழுந்திருக்கு ,என் கமெண்ட் எங்கே போச்சு ,ஆராய ஒரு விசாரணைக் கமிஷன் போடுங்க ஜி :)

    பதிலளிநீக்கு
  9. இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள், சற்று கூடுதலான திறமை உள்ளவர்கள் எனக் கூறக்கேட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கை அல்லது கால் இல்லாதவர்கள் கூட தங்களுடைய இடைவிடாத பழக்கத்தினால் திறமை உள்ளவர்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் அய்யா.

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...