பக்கங்கள்

Saturday, May 16, 2015

முட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..

நேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப்  பாடல்

பராசக்தி க்கான பட முடிவு
                                    பாடல் கேட்க....

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய்
காசு முன் செல்லாதடி

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய்
காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி

பை பையாய்ப் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய்
மெய் மெய்யாய்ப் போகுமடிநல்லவரானாலும் ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே

காசுக்கு உதட்டில் உறவாடடா
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா
தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே -
பிணத்தைக் கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..

கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா
தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா
தாண்டவக்கோனே


நன்றி! திரு.

 அவர்களுக்கு

15 comments :

 1. அருமையான இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான பாடல் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பரே....... எப்பவாவது, என் மண்டைக்குள் இப்படி உதிக்கும். !!!!

   Delete
 2. அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் பாடல்!

  ReplyDelete
  Replies
  1. அதனால் என்னவோ..இன்னும் இந்த பாடலைத்தான் பாடிக் கொண்டு இருக்கிறேன்.

   Delete
 3. குதம்பைச் சித்தர் என்றொருவர் எழுதிய பாடலின் அமைப்பில் எழுதப்பட்ட சமுதாய விழிப்புணர்வூட்டும் திரையிசைப் பாடல்.

  இன்றெல்லாம் எங்கே இதுபோல் கேட்க முடிகிறது.

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தேவைப்படுவோர் தாங்களவே என்னைப்போல் பாடிக் கொள்வதுதான்.....

   Delete
 4. தாண்டவக்கோனே,
  வலிப்போக்கருக்கு என்னாச்சு தாண்டவக்கோனே,
  பணம் பாதாளம் வரை பாயும் என்பதை அறியாரோ,
  தாண்டவக்கோனே,

  ReplyDelete
  Replies
  1. பணம் பாதளம் வரை பாய்ந்து முட்டாள்களைத்தான் பணக்காரனாக்கிறது என்பதை உணர்த்துவதால்.. வலிப்போக்கன் இந்தப் பாடிக் கொண்டு இருக்“கிறார்.

   Delete
 5. பாட்டு சூப்பர் ,உங்கள் குரலில் கேட்டால் இன்னும் சூப்பரா இருக்குமே :)

  ReplyDelete
  Replies
  1. என் குரல் எனக்குத்தான் இனிமையாக இருக்கும்..மற்றவர்களுக்கு கேட்கும்படியாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்காதே.....!!!!

   Delete
 6. "பை பையாய்ப் பொன் கொண்டோர்
  பொய் பொய்யாய் சொன்னாலும்
  மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய்
  மெய் மெய்யாய்ப் போகுமடி" என்பதில்
  உண்மை இருக்கு நண்பா!
  சிலர்
  பொய் பொய்யாய்ச் சொல்லி
  ஒழித்து வைத்திருப்பர்
  கொள்ளை போனதும்
  மெய் மெய்யாய்ப் போனது
  எத்தனை கோடி என்பார்களே!

  ReplyDelete
  Replies
  1. இந்தப்பாடல் பிறந் அன்றைக்கே அப்படி என்றால்... இன்றைக்கு..அம்மாடியோவ்...நிணச்சு பார்க்கவே முடியாதே!...

   Delete
 7. "பை பையாய்ப் பொன் கொண்டோர்
  பொய் பொய்யாய் சொன்னாலும்
  மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய்
  மெய் மெய்யாய்ப் போகுமடி" என்பதில்
  உண்மை இருக்கு நண்பா!
  சிலர்
  பொய் பொய்யாய்ச் சொல்லி
  ஒழித்து வைத்திருப்பர்
  கொள்ளை போனதும்
  மெய் மெய்யாய்ப் போனது
  எத்தனை கோடி என்பார்களே!

  ReplyDelete
 8. அருமையான பாடல்...

  எனது பல பதிவுகளில் உண்டு...

  ReplyDelete
  Replies
  1. இந்த அருமையான பாடலைத்தான் இன்னமும் பாடிக் கொண்டு இருக்கிறேன்.

   Delete

.........