வியாழன், மே 07, 2015

மக்களின் முதல்வர் ஆணைக்கிணங்க......


படம்-Jaya TV News


அண்ணன் தம்பி இருவர். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரமாக அந்த வீதியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.  அவர்களின் வாக்குவாதம் முடிந்தபாடில்லை, இடையிடையே இருவரும் மாமன் மச்சினன் மாதிரியும் பேசிக் கொண்டனர். தாகத வாரத்தைகளாலும் திட்டிக் கொண்டனர். ஆனால் கைகலப்பு இல்லாமல்...இருந்த போதிலும் அவர்களின் பேச்சுக்கள் முடியவில்லை.

இதை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு பழக்கமான ஒருவர். என்ன விபரம் என்று தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் பேச்சை முடித்து வைக்கலாம் என்ற எண்ணத்தில்.  அவர்கள் அருகில் சென்று, அவர்களின் இருவரின் பெயரையும் அழைத்து, அவர்கள் நெடு நேரமாக பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு வந்ததாக தெரிவித்து என்ன? ஏது? என்று விசாரித்தார்.

அண்ணன் காரன் சொன்னான்.   என் தம்பியான இவன் மகனுக்கு காதணிவிழா நடத்த முடிவு பண்ணி அச்சகத்துக்கு பத்திரிக்கை அடிக்க போனோம். போனோமா...? அங்க போனவுடன்  பிரிண்டிங் அடிக்கிறவன் பேரு,விபரம், இடம், தேதி, பஸ்ரூட் எல்லா த்தையும் எழுதிட்டு வந்திருக்கிங்களா என்று கேட்டான்.

நாங்களும் ஜேசியர் எழுதிக் கொடுத்த குறிப்புகளை கொடுத்தோம்.. வாங்கிப் படித்துப் பார்த்தவன். பிள்ளையார் சுழியை போட்டுவிட்டு .ஒங்க சாமி பேரு அதாவது எங்க கொல தெய்வத்தின் பேர சொல்லுங்க என்றான்.

நான் எங்க கொல தெய்வத்தின் பேரச் சொன்னேன். உடனே .இவன் என்தம்பி மொதல்ல அம்மா பேர போடுங்க என்றான். மொதல்ல சாமி பேர போட்டுட்டு அடுத்தாக அம்மா பேர போடுவோம்டா என்றேன். இவன் இல்ல.மொதல்ல அம்மா பேர போடு அதுக்கு பிறகு சாமி பேர போடுன்னான். இல்லடா மொதல்ல சாமி பேர போடுவோம்டா என்றேன் நான். இவன்  அம்மா பேர போடுனே்றான்  இதுதான் எங்களுக்குள்ள வாக்கவாதம்!..நீங்களே !! சொல்லுங்க... பத்தரிக்கை அடிச்சா ..மொதல்ல சாமி பேரத்தானே போடுவாங்க... அதுதானே முறை...   

எங்கே..? வந்தவர் அண்ணன்காரனுக்கு ஆதரவாக பேசி விடுவாரே என்று நிணைத்த தம்பிகாரன் சொன்னான்

அம்மாவ வச்சுத்தான் நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கிறோம். அம்மா இல்லேன்னா நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கவே முடியாது. எங்களை வாழ வைத்த அம்மாவுக்கு எங்களுடைய விசுவாசத்தையும் நன்றிக்கடனையும் தெரிவிக்கும்முகமாகத்தான். காதணிவிழா பத்தரிக்கையில் முதலில் அம்மா துணை என்று அம்மாவை போட்டுட்டு, அடுத்தாக சாமி பேர போடுவோம்னு நான் சொல்றேன். இவரு என்னடான்னா... மொதல்ல சாமி பேரு, அடுத்து அம்மா பேரு ன்னு ஒத்தக்கால்ல நிக்கிறாரு.. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற பாத்து பிரிண்டிங்காரன்.எனக்கு அடுத்த வேல இருக்கு, நீங்க போயி, , ஆற..அமர யோசித்து. ஒரு முடிவு எடுத்துட்டு வாங்க அப்புறம் பத்தரிக்கை அடிக்கலாமுனு  அனுப்பி வச்சுட்டான்.. நீங்களே! சொல்லுங்க..வாழ வச்ச அம்மாவ மொதல்ல போடுறதா.... கும்பிடுகிற சாமிய மொதல்ல போடுறதா....???

தம்பிகாரனின் அம்மா பாசத்தைக் கண்டு ஒரு கணம் மெய்சிலிர்த்துதான் போனார் வந்தவர். தம்பிக்கு ஆதரவாக..அண்ணனிடம் பேசினார்.

யோவ்.... தாயின் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்லுக்கு மந்திரமில்லன்னு முன்னொர்கள் சொல்லி வைத்திருந்தது. ஒனக்கு தெரியலீயா,.... என்னய்யா...நீ.... நம்மள..பெத்து,வளத்து,பெரிய ஆளாக்கி, நீங்க இருக்கிற இந்த நிலமைக்கு கொண்டு வந்தியிருக்கிற  தாய... கோயில் கட்டி கும்பிடனுமிய்யா.... பேசமா...தம்பி சொல்ற கேட்டு, அம்மா பேர மொதல்ல போட்டு  அடியிங்கய்யா.....

அண்ணன்காரர் வந்தவர் சொன்னதைக் கேட்டதும் இடைமறித்துக் கேட்டார்.“ நீங்க எந்த அம்மாவ சொல்றீங்க....

“எந்த....அம்மாவா....? ஒங்கள பெத்து வளத்த அம்மாவைத்தான் சொல்றேன் என்றார் வந்தவர்.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரே சொன்னார்கள்.

“ நாசமா..போச்சு””

வந்தவர். விழித்தார். “என்னங்கடா.....இவிங்க....எந்த..அம்மாவட சொல்றாங்கே..” அண்ணன் தம்பி இருவரையும் சந்தேகத்துடன் பாரத்தார்.

தம்பிகாரன் சொன்னான். தமிழ்நாட்டுல...எத்தினி அம்மா..இருக்காங்க.... ஒரே அம்மாதாங்க.....மக்களின் முதல்வர் அம்மாதாங்க....

வந்தவர் திக் பிரமை பிடித்தவர் போல் பேசாமல் நின்றார்.“அடடா. இவிங்க  
அம்மா திருடர்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவிங்கன்னு நிணைவுக்கு வராம போச்சேன்னு தன் தலையில் லேசாக தட்டிக் கொண்டார். 

அண்ணன் காரன் மீண்டும் பேசினான். தம்பியை கவனிக்கச் சொல்லிவிட்டு, சொன்னான்.   மக்களின் முதல்வர் அம்மா மூலம்தான் நாம பணக்காரனாக ஆனோம் அதில் மாற்று கருத்து எதுவுமில்லை. இல்லேன்னும் சொல்லவில்லை.. ஆனா..நம் அம்மாவே... எல்லா வேலைகளையும் செய்வதோடு. நிற்காமல்  முடிவாக சாமியைத்தான் வேண்டிக்கிட்டு இருக்காங்க. சாமி துணை இல்லாமலா அம்மா அவர்கள் சாமியை வேண்டுகிறார்கள். நம்ம அமைச்சர் மற்றும் கட்சி பெருமக்கள் எல்லாரும் சாமியைத்தானே வேண்டிக்கிட்டு இருக்காங்க.... அதனாலத்தான் தம்பி சொல்றேன் முதலில் சாமி பேர போட்டு, அடுத்து அம்மா பேர போடுவோம். வந்தவரை பார்த்து என்னங்க நா...... சொல்றது....

அண்ணன் சொல்றது எனக்கு நல்லதா படலீங்க... நாளைக்கு அம்மா.. விடுதலை ஆகி வந்தவுடன் தேர்தல நின்னுடுவாங்க..... அதுக்கு முன்னாடி  அம்மா படத்தை போட்டு ,அம்மா துணைன்னு. பத்திரிக்கை அடிச்சா,  அது அம்மா கைக்கு போகும்போது அம்மா பாப்பாங்க...... அது எனக்கு பிறவிக்கடன் தீர்த்த மாதிரி பெருமையாக இருக்கும், அந்த பெருமைக்கு அச்சரமாக.. அம்மா அவர்கள் எனக்கும் தேர்தல்ல நிக்க எனக்கு ஒரு வாய்ப்பு அருள்வாங்க... அந்த அருளக்கு இந்த காதணிவிழா பத்தரிக்கை உதவும்... இத எத்தனிவாட்டி எடுத்து சொன்னாலும் அண்ணனின் மண்டைக்குள் ஏறமாட்டுது... நீங்கதான் அவரு மண்டைக்குள் ஏத்தனும்.

வந்தவர்..சண்டாயங்களா....!!! இதுக்குத்தான் அண்ணனும் தம்பியும் முட்டிகிட்டு இருந்தேங்கேளடா...” முனுமுனுத்தார். முகவாய் கட்டையில் கை வைத்தவாறு,இவிங்களுக்கு என்னத்த சொல்வது..களவானி(களின்) முதல்வர் ன்னு சொன்னா முன்னா..ரெண்டு பயல்களும் பாஞ்சு நம்மள கொதறிப்புடவுானுக..., எதுவும் சொல்லாம போனா..“  என்ன மயித்துக்கு எங்களிடம் பேசின”ன்னு எகிருவானுக...” எதச் சொல்லி இவிங்கிட்ட இருந்து தப்பிக்கிறது என்று யோசித்தார் வந்தவர்.

அண்ணனும் தம்பியும் மீண்டும் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஒருவழியாக வந்தவர் சொன்னார். மொதல்ல ரெண்டு பேரும் பேச்ச நிறுத்துங்கப்பா”ன்னு உத்தரவு போட்டார். அண்ணனும் தம்பியும் பேச்சை நிறுத்திவிட்டு இவரைப் பார்த்தனர்.

சென்ற தேர்தலில் அம்மாவின் ஆணைகிணங்க   வாக்காளர்கள் அணைவரும், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு அம்மாவின் ஆணை பெற்றவர்களும் ஆசி பெற்றவர்களும் ஜாக்பாட் அடித்து வெற்றி பெற்றனர். அப்படி ஜெயிச்சவங்க எல்லாரும். அம்மாவின் சட்ட சபையில பதவி எத்துகிட்டவுக. என்ன சொல்லி மந்திரி பதவி ஏத்துக்கிட்டாங்கன்னு ஒங்களுக்கு தெரியுமா??

அத டீவியிலேயும், காட்டுனாங்க...போப்பர்லேயும் போட்டு இருந்தாங்க.... இருந்தாலும் உங்களுக்காகச் சொல்றேன்

“எதுக்கும் லாய்க்கு இல்லாத என்னை அமைச்சராக்கிய அம்மா”ன்னு சொல்லித்தான் மந்திரி பதவி ஏத்துகிட்டாங்க...... இது மாதிரி நீங்களும் தேர்தல்ல ஜெயிச்சு அம்மா முன்னாடி பதவி ஏத்துக்கிற போது இப்படித்தான் சொல்ல வேண்டும். அதனால..அதுக்கு அச்சாரமாக... ரெண்டு பேருக்கும் பொதுவாக  “ மக்களின் மதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்று அச்சடித்து காதணி விழாவ  நடத்துங்க....

அண்ணன்காரனுக்கும் தம்பிகாரனுக்கும் வந்தவர் சொன்னது ரெம்பவும் ரெம்பவும் பிடித்துப்போய்விட்டது. “மக்களின் முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்று பல தடவை சொல்லிப்பார்த்துக் கொண்டனர்.


பொருத்தமான வாசகத்தை சொன்னவரை கை குலுக்கி, டீ குடிக்க வருமாறு வற்புறுத்தியபோதும் மறுத்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்று,சிறிது தூரம் வந்து அவர்களை திரும்பி பார்த்தார்.

திருட்டு பயல்களா...ஊர் சொத்தை கொள்ளையடித்த மொள்ளமாறிகளா..??“ “களவானி முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க ” உங்க கொள்ளைய ஆரம்பிங்கடா...?உங்களுக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் நாசமாக்குங்கடா.... என்றார் கோபத்துடன்.

10 கருத்துகள்:

 1. அம்மா என்றழைக்காத ........
  அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே :)

  பதிலளிநீக்கு
 2. அம்மாவைப் பற்றி பேசாமல் உங்களால் இருக்க முடியாதோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவைப்பற்றித்தானே..எல்லோரும் பேசிக் கொல்கிறார்கள்....நண்பரே...

   நீக்கு
 3. அம்மா என்ற பெயருக்கு தமிழில் இப்படி ஒரு கொடுமை வந்திருக்கிறதே :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழில் இந்தக் கொடுமை எப்போதோ வந்துவிட்டது...இப்போது அது வளர்ந்து பெரிய மரமாக இருக்கிறது நண்பரே.........

   நீக்கு

.........