ஞாயிறு 27 2026
வாசாந்தியும் தேவசாதி படைப்பும்
திராவிட ஆய்வு
7 July 2025
·
இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால்,
ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என்று இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார்.
கட்டுரையை படித்த திமுக தலைவர் கலைஞர், உடனடியாக வாஸந்தியை அழைத்து,
"தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று கூறினார்
.துடித்துப் போனார் வாஸந்தி.
தனக்குத் தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார்
என்று புகார் கூறினார்.
மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்
அவர், "பின்ன என்னய்யா... தேவதாசி முறை வேணுமாம். ஆனா
வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம்.
இவுங்க இருக்க மாட்டாங்களாம்..." என்று கண்டு கொள்ளவேயில்லை.
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி,
சில நாட்களிலேயே, தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ஒரு சிறுகதை எழுதினார்.
உடனே கலைஞர் அவரை அழைத்துப் பாராட்டினார்.
பின்னர், தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து,
"விட்டு விடுதலையாகி" என்று ஒரு புதினத்தையே படைத்தார் வாஸந்தி.
தேவதாசி முறை பற்ற அந்தக் காலத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,
சத்தியமூர்த்திக்குக்குக் கொடுத்த பதிலடியும் இதைப் போன்றதே.
தேவதாசி ஒழிப்புப் சட்டத்தை எதிர்த்து, "அப்படித் தடை செய்தால்,
தெய்வ அபச்சாரம் ஆகிவிடும்" என்றாராம் சத்திய மூர்த்தி ஐயர்.
அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,
"அப்டியானால் உங்கள் பிராமண குலப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி
தேவதாசிகளாக இருக்கக் செய்யுங்கள்" என்றாராம்.
தனது ஒன்பது வாயில்களையும் பொத்திக் கொண்டு சத்தியமூர்த்தி அடங்கிவிட்டார்.
வசந்திக்கு அதே பாணியில் அறிவுரை தந்து திருத்தினார்,
வரலாற்றினை மறக்காத கலைஞர் !
- Sirpi Rajan
பகிர்வு - Dhanasekar Manickamurthy
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாசாந்தியும் தேவசாதி படைப்பும்
திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
படம்- www.dinakaran.com ஒம்பாடு தேவலை தோழர் ஓட்டும் போடுவதில்லை விரல் அடையாளமும் பெருவதில்லை என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை சேர்ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை