படம்- |
ஏய்...யோகா......
உன்னால்.. ஏறின
விலை வாசியை
குறைக்க முடியுமா...?
மின்சாரத்தை தொட்டால்
ஷாக் அடிக்கும்
அப்போது..இன்று
மின்சார பில்லை
பார்த்தவுடன் ஷாக்
அடிக்காமல் இருக்க
செய்ய முடியுமா..??
இல்லாதவருக்கு பசி
பட்டினி இல்லாத
நிலையை ஏற்ப்படுத்த
முடியுமா.....???
இந்நாட்டை கூவி
கூவி ஏலம்
போட்டு விற்பதை
தடுக்க முடியுமா...????
கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும்
ஆட்சியில் அமருவதையாவது
தடுக்க முடியுமா....?????
இல்ல...
ஓட்டுக்கு துட்டு
தருவதையாவது
தடுக்க முடியுமா.....??????
சரி விடு, டாஸ்மாக்
யோகாவையாவது
உன்னால் தடுத்து
நிறுத்த முடியுமா......???????
ஏய்...யோகா....
இது மாதிரி
கேட்பதற்கு நிறைய
இருக்கிறது.நான்
கேட்பது இருக்கட்டும்
நீ சொல்லு
யோகா உன்னால்
என்னவெல்லாம் தீரும்..............????????
நச்..நச் என்று இக்கால சூழலுக்கு கவிதை படைத்திருக்கிறீர்கள்...சகோ....ஆதங்கம் புரிகிறது
பதிலளிநீக்குஉடலுக்கும் மனதிற்கும் நல்லது யோகா.....அவ்வளவுது தான் எனக்கு தெரியும் சகோ
வாழ்வதற்க்கான நல்ல சமூக சூழ்நிலையே இல்லாத போது
நீக்குயேகாவால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது எப்படி கிடைக்கும் சகோ....
இவ்வளவு தானா...? இன்னும் நிறைய இருக்கே ஜி...
பதிலளிநீக்குநான் சொல்லாமல் விட்டதை யோகாவே சொல்லட்டும் தலைவரே... தன்னால் என்னவெல்லாம் தீரும் என்று...
நீக்குஇந்த கொடுமையை கண்டுக்க கூடாதுன்னுதான் யோகா செய்ய சொல்கிறார்கள் :)
பதிலளிநீக்குயோகா செய்யும்போதும் வந்து நிற்குமே.... என்ன செய்வார்கள“...
நீக்குஇப்படி எல்லாவற்றையும் குதர்க்கமாக பார்த்தால் என்னப்பா பன்றது,
பதிலளிநீக்குயோகா நல்லதுதான்
ஆனால் இந்த வலிகள் அதைவிட பெருசு,
வாழ்த்துக்கள்,
நன்றி.
இது குதர்க்கம் இல்லைங்க.... எதார்த்தைச் சொல்கிறேன் எல்லாவற்றுக்கும் தீர்வு இருப்பதாக சொல்வதற்கு எதிராக கேள்வி கேட்கிறேன்..அவ்வளவே.....
நீக்கு