புதன் 18 2015

குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம் பற்றி சிங்கிக்கு இ.மெயில்,

srirangam-byelections-cartoon
படம்-http://www.vinavu.com/2015/02/18/delhi-to-srirangam-byelections-results-bjp-status/



பிரியமுள்ள சிங்கிக்கு,.....உன் அன்பு சிங்கா அனுப்பிய இ.மெயில்.

 பிரியமுள்ள சிங்கி..நீ எனக்கு அனுப்பிய இ.மெயிலை படித்துப் பார்த்தேன். அதிலுள்ள விபரங்களையும் ... நீ ..கேட்டுள்ள  பெரும் சந்தேகமான மனிதனுக்கும் மனித குரங்குக்கும்  என்ன வித்தியாசம் என்பதையும் படித்து அறிந்தேன்.

நிற்க....  மனிதனுக்கும் மனித குரங்கிற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி ஒனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை ஒங்க ஊரில் பள்ளி கொண்டு தூங்கிறமாதிரி நடித்துக் கொண்டு இருக்கும் திருவரங்கனிடம்.. கேட்டும்

“ அந்த திருவரங்கனே மிரண்டு போயி”,..“ ஆத்தாடி ,நல்ல சந்தேகத்த கேட்ட போ” ..

“ புகுந்த வீட்டில போனவுடனே,  புகுந்த வீட்டின் சொத்துக்கள கொள்ள அடிச்சதுல, கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, பிறந்த  வீட்டுக்கு அடுத்தாண்ட உள்ள மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சதால..” காலியான புகுந்த வீட்டில் நடந்த கூத்த்துல... என் பக்தையோட பணபலம், அதிகாரபலம், எடக்குமொடக்கு தில்லுமுல்லு எல்லாத்தையும் பாத்துண்டு, என்னால வாய் திறந்து பேச முடியாம இருக்கேன்”.

இந்த லட்சனத்துல.  ஒனக்கு ஏற்பபட்ட சந்தேகத்த... என்னால தீர்க்க முடியாது. உன்னோட சிங்கா கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்க” என்று திருவரங்கனே கூறியதாக  குறிப்பிட்டு இருந்ததையும் அறிந்தேன் சிங்கி.

நீ அனுப்பிய இ.மெயிலை படித்ததிலிருந்து இந்த மெயில் அனுப்புகிற வரைக்கும் இடைவிடாமல்  ஓசித்து ஓசித்து பார்த்ததில் ” மனித குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வித்தியாசம்” என்னவென்று, திருவரங்கனின் பகுதியை கொண்டே கண்டுபிடித்துவிட்டேன் சிங்கி....

தொண்டையை செருமி, மூளையை கசக்கி,  ரெண்டு கட்டு சொக்கலால் பீடியை புகைத்து, பாதிப் புகையை பக்கத்தில் இருப்பவர்களின் நண்மைக்காக வெளியே விட்டு, கொஞ்சோன்னு புகையை உள்ளுக்கு இழுத்து. அந்த கொஞ்சோன்னு புகையயை மூக்கின் வழியாக விட்டு , அரும்பாடு பட்டு சிங்கிக்காக இந்த சிங்கா கண்டுபிடித்த  ரகசிய விபரத்தை மெயில் அனுப்புகிறேன்.

மனிதனுக்கும், மனித குரங்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால். அது இதுதான்.சிங்கி.

“மனித குரங்கிற்கு பொட்டுக்கடலை.பொரிகடலை, நிலக்கடலை, கொய்யாப்பலம்.வாழப்பலம்  போன்ற பழங்கள் கொடுத்தாலும் அதை வாங்கித் தின்னுட்ட மனித குரங்கு, அதற்கு பரிகாரமாக.நன்றிக்கடனாக. விசுவாசத்த காட்டுவதற்க்காக மனித குரங்கெல்லாம் படையெடுத்து தேர்தல் பூத்துக்கு போயி, வரிசையில் நின்று ஓட்டு போடப் போகாது”.

ஆனால், மனிதர்களில், சிலர் ஒரு ஓட்டுக்கு அய்யாயிரம் ரூபா  துட்டு வாங்கிக் கொண்டும், மற்றும் சிலர். புல்லும் ஆப்புமாக சோம பானத்தையும், கூடவே. ரெண்டு துண்டு கறியும், ஒரு சின்ன எலும்பும் போட்ட குஸ்காவை, , பிரியாணி என்று எண்ணி..நாலுகால் பிராணி மாதிரி லபக்லபக்கென்று வயித்து டேங்கில கொட்டிவிட்டு. கொடுத்த துட்டுக்கும் ஊத்தின சாராயத்துக்கும் திண்ட பிரியாணிஎன்று ஏமாற்றி கொடுத்த குஸ்காவுக்கும்  வாங்கிய நன்றிக்கடனுக்காக, நேர்மைக்காக, பாசத்திற்க்காக, அன்புின் அடிமைக்காக, கூட்டத்தோடு படையெடுத்து கொலவபோட்டு ஆட்டம்பாட்டத்துடன் ரெம்ப சந்தோசத்தடன் தேர்தல் பூத்துக்கு போயி நெடுநேரம் கால்கடுக்க வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருவான்.

அம்மாவின் அதிரடியில் பேசமுடியாமல் ஊமையாகிப் போன திருவரங்கனை
கேட்டாலும்  இதைத்தான்  சொல்வான் சிங்கி.

கடைசியாக சிங்கிக்கு, பலர் பலவிதமாக சொல்வதைக் கேட்டு குழம்பிக் கொள்ள வேண்டாம் .


அடுத்து ... உன் இ. மெயில் கண்டு...........


இப்படிக்கு
உன் அன்பு சிங்கா..
தேதி--19/2


14 கருத்துகள்:

  1. நாலுகால் பிராணி ---> மாதிரி எல்லாம் இல்லை...!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான...நாலுகால் பிராணி ---> மாதிரி எல்லாம் இல்லை...!

    பதிலளிநீக்கு

  3. ஸூப்பர் நண்பரே சரியான சவுக்கடிதான்,,,
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  4. சவுக்கடியால் அடித்தாலும் வலிக்கவா....போகிறது. நண்பா...

    பதிலளிநீக்கு
  5. இங்கு நடப்பது ஜனநாயகம் அல்ல ,பணநாயகம் :)

    பதிலளிநீக்கு
  6. அடடா... சிங்கிக்கு சொல்ல மறந்துட்டேனே ஜீ..நடப்பது ஜனநாயகம் அல்ல ,பணநாயகம் :)ன்னு

    பதிலளிநீக்கு
  7. மனிதர்களில் சிலர் ஒரு ஓட்டுக்கு அய்யாயிரம் ரூபா துட்டு வாங்கிக் கொண்டும்.....

    தமிழகத்தில் மனிதர்களில் சிலரல்ல பத்துக்கு ஆறு பேர் இப்படிதான் நடக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா ! இதில் மனிதக்குரங்குக்கும் ஆசிய கண்ட மனிதர்களுமென டைட்டில் வச்சிருக்கலாம் அண்ணே !

    தம+

    பதிலளிநீக்கு
  9. நல்லது தங்களின் கருத்துரைப்படி “தமிழகத்தில் மனிதர்களில் சிலரல்ல பத்துக்கு ஆறு பேர் இப்படிதான் நடக்கின்றன ”--அப்படியே திருத்திக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. “காலத்திற்குப் பொருத்தமான பதிவு”- தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஆசியாக் கண்டம் முழுவதும் மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் அப்படியே தலைப்பை வைத்துவிடலாம்” அண்ணா

    பதிலளிநீக்கு
  12. உங்க தளம் அழகாக கலக்கலாக இருக்குதுங்க.

    பதிலளிநீக்கு
  13. எனது தளம் அழகாக,கலக்கலாக இருப்பதற்க்கான உழைப்பும் பெருமையும் திரு. பொன் தனபாலன். அவர்களையே சேரும் திரு. வேகநரி அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...