பக்கங்கள்

திங்கள் 07 2015

40 லட்சத்தை 45 நிமிடங்களில் கண்டு களித்தவர்...

படம்-www.dinamani.com

தங்கத் தாரகை
மக்களின் முதல்வர்
புர்ச்சி தல்வி
தமிழகத்தின் நிரந்தர
முதல்வர் அவர்கள்

சென்னை வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 40 லட்சம்
மக்களை வான்
வழியில் சென்று
45 நிமிடத்தில்
கண்டு களித்தார்.




ஞாயிறு 06 2015

பராசக்தியிடம் மனு போட்ட பாமரனும் ....மகா கவியும்


 தமிழகத்தில் மழை அதிகரிக்கும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

சென்னையே வெள்ளத்தில்(பராசக்தி உள்பட) தத்தளித்தபோது  பராசக்தியின் பக்தனான ஒரு பாமரன் பராசக்தியிடம் போட்ட மனு..

ஆத்தா பராசக்தி..
வருண பகவான்
கொட்டிய மழையில்
எங்களை ஆட்சி
செய்ய கொலு
வீட்டிருந்த திருக்கோயிலான
உன் வீடும்
வெள்ளத்தில் அடித்து
போய்  விட்டது...
உன் கடைக்கண்
பார்வையை வருண
பகவான் மேல்
செலுத்து. உன்
பார்வையால் அவன்
தடுமாறும்  நிலையை
பயனபடுத்தி நான்
வெள்ளத்தில் இருந்து
தப்பித்துக் கொண்டு
உன்னை காப்பாற்றுகிறேன்
 ஆத்தா பரா..சக்தி..............





தாய் நாடே  பிரிட்டிஷ் காரனிடம்( பராசக்தி உள்பட) அடிமைபட்டு தத்தளித்தபோது   பராசக்தியின் பக்தனான   மகாகவி பராசக்தியிடம்  கேட்டது

கானி நிலம்
வேண்டும் பராசக்தி
கானி நிலம்
வேண்டும் பராசக்தி
அந்த கானி
நிலத்திலே ஓர்
மாளிகை கட்டி
தரவேணும்மடி
பரா....சக்தி



சனி 05 2015

கூகுள் பிளாக்கர்க்காக ..தமிழ்மணத்தில் பதிவிட்டது.......

படம்-வினவு..

இந்தீய நாட்டின்
ஒரு சட்ட
மன்றத்தில் ஒரு
மந்திரி ஆரம்பித்தது...

“எதுக்கும் லாயக்கு
இல்லாத என்னை
அமைச்சர்  ஆக்கிய
அம்மாவுக்கு............”

இப்படி எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளை நியமித்தால்
சென்னை  கடலூர்
வெள்ள நிவாரண
பணிகளில் எப்படி
செயல்படுவார்கள்  என்பதை
பாதிப்படைந்த மக்கள்
உணர  வேண்டும்
என்று எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளின் தொண்டர்கள்
கோரிக்கை வைத்தனர்

---------கூகுள் பிளாக்கர்க்காக தமிழ் மணத்துடன் பதிவிட்டது  வலிப்போக்கன்.

வெள்ளி 04 2015

மழை நீரில் கால் பதிக்காத சீமாட்டி...........

படம்-baluspoli.blogspot.com



அந்தச் சீமாட்டியின்
கால்கள் அரியணை
ஏறிய நாளிலிருந்து
மண் தரையை
தொட்டதாக வரலாறு
இல்லாத  போது..
மழை நீரானது
அவர் கால்களை
தழுவிட  முடியுமா..?

வாய் பொளந்து
பல் இளித்து
சிந்திக்க மறந்து
அந்த சீமாட்டியை
அரியனை ஏற்றி
அவதி படும்
வாக்கு  ஆளார்கள்
தான் பதில்
சொல்ல வேண்டும்.


செய்த தவறுக்கு
சட்டத்தின் நீதிபதிகளே
தண்டிக்க மறுத்தபோது
ஆர்.கே..நகரில்
தண்டிக்க மறந்து
வேடிக்கை பார்த்தவர்களையும்
ஒதுங்கி நின்றவர்களையும்
இயற்கை தண்டிக்காமல்
மன்னித்து  விடுமா...??

அல்லது யாகத்தினாலும்
வேள்விகள் செய்வதாலும்
இயற்கையின் தண்டனையிலிருந்து
தப்பித்து விட முடியுமா...???



மறந்து விட்டவர்களின் நிணைவுக்கு.....மக்களே போல்வர் கயவர்
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். 

வியாழன் 03 2015

நொங்கு திண்டவன் ஓடிட்டான்...நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்டான்.

படம்-www.dinamani.com



“டேய்...... எங்கேயடா...அவிங்க....”

“யாருண்ணே...”

“  யாரா......?ஃ..அவிங்க தாண்டா... மழை வேண்டி.. கழுதைக்கும் கழுதைக்கும்  நாய்க்கும் விட்டைக்கும்  கல்யாணம் பண்ணி வச்சவிங்க......”

“அவிங்களாண்ணே.......இன்னவரைக்குமாண்ணே...இருப்பாங்கே... சிட்டா பறந்து  இருப்பாங்கேண்ணே.....”


“ மழை வேண்டி..யாகம் பண்ணினவங்கே.......”

“ அவிங்க எல்லாம்... வெளிநாட்டுக்கு யாகசம் கேட்டு போயிருக்காங்கண்ணே...”

“அப்போ ஒரு பயலும்  வெள்ளத்துல இல்லையாடா.....”

“   கல்யாணம் செஞ்சு வச்சவனும்.. யாகம் பண்ணினவனும் நாசமா போன மழையில சிக்காம  தப்புச்சுட்டுகாங்கண்ணே..... ....

“பாவிகள் தப்புச்சுட்டான்களா...”

“இவிங்க மட்டும்..பாவிங்க இல்லண்ணே..”

“பின்ன..இல்லீயா.டா... நம்ம தலநகரமே..இப்படி  நாசமா..போச்சுடா....”

“ மற்ற ஊர்கள வச்சுதானே தலநகரம்... கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்கண்ணே.....”

“என்னடா...சொல்ற...”

ஒங்களுக்கு தெரியாதது இல்ல..இருந்தாலும் சொல்றேன்.   தல நகருக்குஒரு அரை மணி நேரம் மின்சாரம்  நிறுத்தி வைத்தால்  வெளி நாட்டு, உள்நாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளின் ஊதுபத்தி பாதிக்குமுனு சொல்லி மத்த ஊர்களை எல்லாம் இரட்டுல..முழ்க வச்சங்களே.. ஞாபகமிருக்கா...???... இப்ப அந்த கார்ப்ப ரேட்டு வெண்ணைகளும்..அவிங்களுக்கு ஆதரவாக இருந்தவங்கேதாண்ணே  பாவிகள் ..


 அட, ஆமாடா...“யாகம் செஞ்சவன் பாவின்னா....இவிங்க மகா பாவிங்கடா..””


“அவிங்களும் இப்ப காணோம்ண்ணே...”

”............நொங்கு திண்டவன் ஓடிட்டான். நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்ட ” கதையாவுல இருக்கு....

அது கதையில்லண்ணே.. அது உண்மையிண்ணே .அந்த நிலமைதான்ண்ணே.....இப்ப  நம்ம தல நகர்ல்ல நடந்துகிட்டு இருக்கு...”

புதன் 02 2015

பேரு...பெத்த..பேரு.....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
படம்- சிந்தனைவாதி

படம்- வெப்துனியா

படம்-






ஆட்சி.....
அதிகாரம்,....
செல்வாக்கு......
படைபலம்......
இவற்றால்
ஒன்னும்
செய்ய
முடியவில்லை
தலை
நகரை
நாசமாக்கிய
மழையை.......

பேரு
பெத்த
பேரு

இந்த
பேரை
கெடுத்து
விட்டதாக

ம.க.இ.க
பாடகர்
கோவனை
கைது
செய்தது
கலைஞர்
மற்றும்
ஆனந்த
விகடன்
மீது
அவதூறு
வழக்கு
போடுவதை
தவிர......

பேரு..
பெத்த...
பேரு...ப்பா.....







                                                         மேலும் பார்க்க....படிக்க....


செவ்வாய் 01 2015

ஒரு காதல் பாட்டில் சொக்கி போன மனது.....

மழை விடுவதாக இல்லை..பஸ்சும் வருவதாக தெரியவில்லை.. ஆட்டோதான் சர்புர்ர்னுஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நின்றது. அவசரத்துக்கு கூட ஆட்டோவில் பயனிப்பது..இல்லை.. பஸ் அல்லது நடை ராஜாதான் எனது பானி... மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் நடை ராஜா பானியை தொடர முடியவில்லை.. 

பஸ் நிறுத்தத்தின அருகே உள்ள கடையின் வாசலில்  மழையில் நணையாமல் நின்று கொண்டு இருந்து பஸ் வரும் திசையை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தேன்.ஒரு பஸ் வந்தது, மழை பெய்வதால் நின்றால் நணைந்து விடுவோம் என்று பஸ் நிணைத்ததோ..அல்லது பஸ் டிரைவர் நிணைத்தாரே... பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விட்டது.

 இப்படியாக  இரண்டு. மூன்று பஸ்கள் சென்றுவிட்டது. நான்தான் மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே..எரிச்சல்படாமல் முனு முனுக்காமால் அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்தேன். ஒரு பஸ் வந்தது. எனக்காக நிற்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் அந்த நிறுத்தத்தில் இறங்கியதால்  பஸ் மழையில் நிணைந்தவாறு நின்றது.. பஸ்ஸில்உள்ளே நுழைந்த போது பஸ் சீட் எல்லாம் மழையில் நணைந்திருந்தது. 

நிற்க முடியாதவர்கள். எல்லாம்  தலைவிதி என்று உட்கார்ந்து இருந்தனர். உட்கார்ந்தால் நம் அணிந்திருக்கிற உடை நாரிப் போயிரும் என்று நிணைத்த வீராதி வீரர்கள் எல்லாம்  முதுகுக்கு முட்டு கொடுத்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களுள் ஒருவனான எனக்கு  முட்டுக்கொடு க்க இடமில்லாததால் ஓட்டுனர் பக்கத்தில் போய் நின்றேன். பஸ்ஸில் இருந்த எப்எம்  ரேடியோவில் இசைஞானியின் சூப்பர் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன... எல்லாப் பாடல்களையும் கேட்டு இரசித்த எனக்கு அதில் ஒரு பாட்டும் மட்டும்  என் மூளையில் பதிவாகியது... அந்தப் பாட்டின் முழுவரிகளும் தெரியாத போதும் ஒலித்த இசையையே  சில நாட்களாக ஒலித்தேன்... அடுத்தப் பாடல்  என் மூளையில் பதிவாகும்வரை இந்தப்பாடல்தான் என்னையும் அறியாமல் ஒலித்தது.

இந்தப்பாடல் வந்த புதிதில் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்தாக ஒரு நண்பர் டிவிட்டரில் சொல்லியிருந்தார்...நான் இப்பொழுதான் கேட்டு இருப்பதாக என்னை கிண்டலடித்தார். உண்மைதான்  அன்று எனக்கு இசை ரசனை இல்லை இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக.....

அந்தப்பாடல் இதுதான்.. 



Movie: Karumbu Vil (1980) || Language: Tamil || Singer: K.J.Yesudas || Actors: Sudhakar and Subhashini || Music: Ilayaraja

சினிமாவில் வில்லன்- நிஜத்தில் சூப்பர் ஸ்டார்

  “தற்கொலைக்கு முன் என்னை  ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். " - இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்  அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!  இவ...