நண்பரை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற போது.. நண்பரின் பக்கத்து வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டது. என்னவென்று தெரிந்து கொள்ள அந்த வீட்டை எட்டிப் பார்த்தேன்.
நண்பரின் உறவுக்கார பெண்மணி ஒருவர் தெரிந்தார். என்னவென்று கேட்டேன்...
முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும் ஆடிய ஆட்டத்தை பாத்தியா..? என்று கேட்டார்.
இல்லையே என்றேன்.
அங்கே பார் என்றார்....
அகன்ற சின்னத்திரையில் முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும் கடைசியாக போட்டி போட்டு ஆடிக் கொண்டு இருந்ததை பார்த்தேன்.நான் பார்த்த சிறிது நேரத்தில் அவர்களின் ஆட்டம்முடிந்துவிட்டது. பின் யூடிப்பில் முதலிருந்து கடைசி ஆட்டம்வரை கண்டேன்..
இவரைப் பற்றிச் சட்டென்று நிணைவுக்கு வருகிற மாதிரியான படம் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால்..
1959ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான “கல்யாண பரிசு” என்ற படத்தில் தனது கம்பீரமான குரலில் காமெடியை கலக்கியவர் டணால் கே.ஏ. தங்க வேலு என்ற நடிகர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்., 1952ம் ஆண்டில் வெளியான ்பணம்” என்ற படத்தில் மூலம் நல்ல பெயரை சம்பாரித்தவர்.
1994ம் ஆணடில் அவர் இறக்குவரை தான் நடித்த படங்களிலோ நாடகங்களிலோ. ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களை பேசாமல் நடித்த பெருமைக்குரிய நகைச்சுவை நடிகர் யார் என்றால் அது இவரே....
மழை விடுவதாக இல்லை..பஸ்சும் வருவதாக தெரியவில்லை.. ஆட்டோதான் சர்புர்ர்னுஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நின்றது. அவசரத்துக்கு கூட ஆட்டோவில் பயனிப்பது..இல்லை.. பஸ் அல்லது நடை ராஜாதான் எனது பானி... மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் நடை ராஜா பானியை தொடர முடியவில்லை..
பஸ் நிறுத்தத்தின அருகே உள்ள கடையின் வாசலில் மழையில் நணையாமல் நின்று கொண்டு இருந்து பஸ் வரும் திசையை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தேன்.ஒரு பஸ் வந்தது, மழை பெய்வதால் நின்றால் நணைந்து விடுவோம் என்று பஸ் நிணைத்ததோ..அல்லது பஸ் டிரைவர் நிணைத்தாரே... பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விட்டது.
இப்படியாக இரண்டு. மூன்று பஸ்கள் சென்றுவிட்டது. நான்தான் மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே..எரிச்சல்படாமல் முனு முனுக்காமால் அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்தேன். ஒரு பஸ் வந்தது. எனக்காக நிற்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் அந்த நிறுத்தத்தில் இறங்கியதால் பஸ் மழையில் நிணைந்தவாறு நின்றது.. பஸ்ஸில்உள்ளே நுழைந்த போது பஸ் சீட் எல்லாம் மழையில் நணைந்திருந்தது.
நிற்க முடியாதவர்கள். எல்லாம் தலைவிதி என்று உட்கார்ந்து இருந்தனர். உட்கார்ந்தால் நம் அணிந்திருக்கிற உடை நாரிப் போயிரும் என்று நிணைத்த வீராதி வீரர்கள் எல்லாம் முதுகுக்கு முட்டு கொடுத்தபடி நின்று கொண்டு இருந்தனர்.
அந்த வீரர்களுள் ஒருவனான எனக்கு முட்டுக்கொடு க்க இடமில்லாததால் ஓட்டுனர் பக்கத்தில் போய் நின்றேன். பஸ்ஸில் இருந்த எப்எம் ரேடியோவில் இசைஞானியின் சூப்பர் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன... எல்லாப் பாடல்களையும் கேட்டு இரசித்த எனக்கு அதில் ஒரு பாட்டும் மட்டும் என் மூளையில் பதிவாகியது... அந்தப் பாட்டின் முழுவரிகளும் தெரியாத போதும் ஒலித்த இசையையே சில நாட்களாக ஒலித்தேன்... அடுத்தப் பாடல் என் மூளையில் பதிவாகும்வரை இந்தப்பாடல்தான் என்னையும் அறியாமல் ஒலித்தது.
இந்தப்பாடல் வந்த புதிதில் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்தாக ஒரு நண்பர் டிவிட்டரில் சொல்லியிருந்தார்...நான் இப்பொழுதான் கேட்டு இருப்பதாக என்னை கிண்டலடித்தார். உண்மைதான் அன்று எனக்கு இசை ரசனை இல்லை இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக.....
அந்தப்பாடல் இதுதான்..
Movie: Karumbu Vil (1980) || Language: Tamil || Singer: K.J.Yesudas || Actors: Sudhakar and Subhashini || Music: Ilayaraja