சனி 30 2016

சும்மா..இருந்திங்கன்னா...வீட்டுப்பக்கம் வந்துட்டு போங்க.....


கிர்..கிர்........கிர்.......

டேய் ...யாருன்னு பேசுரா.......

“அலோ.................

“அலோ.......வ்.......என்ன செய்யீறிங்க.......

“உங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருக்கேன்..

“அது தெரியுது.. பதில் சொல்றதுக்கு முன்னாடி என்ன செய்துகிட்டு இருந்தீக...

“ஓ....அதுக்கு முன்னாடியா.... செல் போன்ல சார்ச் ஏறுதான்னு பாத்துகிட்டு இருந்தேன்... ஆமா..நீங்க  யாரு...?

“ ...நா..ன் சொல்வத கவனமாக கேளுங்க..., சும்மா இருந்திங்கன்னா.. செத்த.....வீட்டுப் பக்கம் வந்துட்டு..போங்க...அது ஊறுக்கு போயிறுச்சு. வர்ர ரெண்டு நாளாகும்..... வர மறந்திடாதிங்க.........

“அலோ...நீங்க.......யா.....?

“கிர்ர்ர்.......லொடக்

“அண்ணே... நீங்க விவரமான ஆளுதாண்ணே...

'என்னடா சொல்ற...

“பெருச்சாளி வீட்ட கெடுக்குமாம். .ஊம ஊரக் கெடுக்கும்ன்னு சும்மா சொல்லி வச்சாங்கே.....

“ஏய்....என்னடா சொல்ர...சும்மா..காசுக்கு சொன்னாங்கேன்னு..“

“  அது ஊறுக்கு போயிருக்கு வர்ர ரெண்டு நாளாகும்மா ,“நீங்க சும்மா இருந்தீங்கன்னா.... செத்த வீட்டுப் பக்கம் வந்துட்டு போவிங்களாம்அப்படின்னு ஒரு அன்னக்கிளி பேசுச்சுண்ணே...

“அது எப்படிடா..அன்னக்கிளி..செல்போன்ல பேசும்...??

“ செத்த முன்னாடி..பேசுச்சுச்ல...அண்ணே...! கில்லாடிண்ணே நீங்க....,

“ஏய்.....போனக்குடுடா.......இந்த நம்பர்தாணேடா....

“ ஆமா..ண்ணே.....

“ஸ்பீக்கர் சவுண்டு வச்சுருக்கேன்..நல்லாக் கேளு.... பேசுறத.., ஏம்பா அன்னக்கிளி... எத்தனை தடவம்மா ஒனக்கு நா... சொல்லுறது.. ஒரு தடவைக்கு இரு தடவை நல்லா பார்த்து போன் நம்பரை அடின்னு..தப்பித்தவறி எப்பவாச்சும் என் பொண்டாட்டி நீ பேசுறத  கேட்கப் போறா....உன்ன..உண்டு இல்லன்னு ஆக்கிப்புடுவா.... பாத்துக்கா... அந்தக் கடைசி நம்பர பாத்து அடிம்மா..... நீ பேசுற காயின்ஸ் கடைக்காரர்கிட்ட நம்பர கொடுத்து அடிக்கச் சொல்லுமா..... உன்கிட்ட என் தம்பி பேசியிருக்கான்மா...என்னப் பத்தி என்ன நிணப்பான...... ம்ம..ம்...
 “
 சார்...தெரியாம மாறி வந்திருச்சு சார். மன்னிருச்சுருங்க சார்...


“ இதையே எத்தனவாட்டி சொல்வேம்மா....இதுதான் கடைசி தடவ... இனிமே நம்பர பாக்கம அடிச்சே.....ஆமா... எந்த ஊரும்மா....நீய்யி....... (லொடக்)”.


“அண்ணே..சாரிண்ணே......

“போடா...வெண்ணே.... செத்த நேரத்துல...... ஆளையே  கவுத்திட்டியேடா.....



வியாழன் 28 2016

நீ..இன்னாரு பேரன்னு சொல்லாதேடா பயலே....


....

உன் தாத்தா அம்மாச்சி
வயதுள்ள அந்தக் கிழவியை
அவர்கள் கூப்பிடுவது அம்மான்னு

அந்தக் கிழவிக்கு மகன்
மகள் வயதுள்ள உன்
அம்மா அப்பன் உம்
அழைப்பது  ம் அம்மான்னு

பேரன் வயதுள்ள நீயும்
அந்தக் கிழவியை அம்மான்னு
சொல்வது சரியில்லைடா பயலே..

அம்மா சாக்லெட் கொடுத்தாங்க
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று
கபாலி வசனம் பேசத்
தெரிந்த உனக்கு கிழவியை
பாட்டி சாக்லெட்கொடுத்தாங்க
என்று சொல்லத் தெரியலைடா

நீ இன்னாரு பேரன்னு
சொல்லாதயேடா மக்குப் பயலே...





செவ்வாய் 26 2016

பேர் சொல்லி அழைக்க சட்டத்தில் இடமில்லை


அன்புக்குரிய மாமா எங்கள்
குடும்பத் தலைவரான என்
அப்பாவை உன் பையன்
பேர் சொல்லி அழைப்பது
போல் உங்கள் குடும்பத்
தலைவியை நானும் பேர்
சொல்லி அழைக்கலாமா மாமா!
 ........................

பிரியமுள்ள மருமகளே! நான்
மட்டுமல்ல “ம்மாஎன்று
அழைக்கும் மாட்டுக்குக் கூட
தலைவியா இருக்கும் எங்கள்
குடும்பத் தலைவியை நீ
பேர் சொல்லி அழைக்க
சட்டத்தில் இடமில்லை மருமகளே!!



திங்கள் 25 2016

வழக்குரைஞர் வாய்ப்பூட்டு சட்டம் வாபஸ் வாங்கப்படுமா..??






மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலரும், போராட்டத்தில் முன்நின்று போராடியதால் இடைநீக்கம் செய்யப்பட்டவரான வழக்கறிஞர் மில்ட்டன் புதிய சட்டத்திருத்தத்தை கண்டித்து கண்டன உரை ஆற்றிய பொழுது...
முற்றுகை போராட்டத்தில்.










போராடும் வக்கீல்கள் மீது, இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது 
.
சென்னை உயர் நீதிமன்ற ஜெனரல் டயர்












சென்னை உயர் நீதிமன்ற ஜெனரல் டயர்

நன்றி!
Sivaraja Boopathyமற்றும்
Jimraj Milton இன் சுயவிவரப் படம்

ஞாயிறு 24 2016

“கபாலி” தலித் படமில்லடா விளக்கெண்ண......



“அண்ணே! என்னண்ணே...கூப்பிட்டிங்களாமே...?

“நேத்து எங்கடா...போனே.....?

“காபலி படம் பார்க்க போனேண்ணே...

“அதான் நேத்து ஒன்னக் காணோமா...?

“ஆமாண்ணே......

“சரி. படம் எப்படி...?

“ எனக்கு சூப்பர்ண்ணே”..!!”

“அது எப்படிடா”...“சூப்பர்”....

“மனிதக் கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப்படத்துல  தலித் தலிவரா நடிக்கிருக்காருண்ணே..”!!!

“அப்போ..சாதிவெறியர்கள் ஆண்டைகளை எதிர்த்து வசனம் பேசி இருக்கனுமே....

ஆமண்ணே...“நாங்க படித்து முன்னுக்கு வர்ரது ஒங்களுக்கு பிடிக்கலையாடா? நாங்க நல்ல ட்ரெஸ் அணிந்து ஒங்க முன்னாடி போறது.ஒங்க கண்களுக்கு உறுத்துதாடா..?? ஒங்களுக்கு பிடிக்கலைன்னாலும் உறுத்தினாலும் நாங்க அப்படித்தாண்டா செய்வோம்னுவசனம் பேசி இருக்காருண்ணே.....இது தலித் படமிண்ணே.....

“ஆண்டைகளை எதிர்த்து சண்டை போடுறாராடா..?

ஆமாண்ணே.., ஒரு தாதாவை எதிர்த்து சண்டை போடுவாருண்ணே..”...

“நீ....சொல்வதைப் பார்த்தா.... ஒரு தாதாவை எதிர்த்து, “கபாலிஎன்ற தாதா சண்டை போட்டு வெல்வாருஅப்படித்தானே......!!!

ஆ......ஆ...ஆமாண்ணே......

போடா...வௌக்ண்ண....அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ஒரு தாதா, அடக்கியும் ஒடுக்கியும் வருகிற இன்னொரு தாதாவை எதிர்த்து சண்டையிடுகிற படத்தைப்போயி தலித் படமுன்னு சொல்லிக்கிட்டு, அதோடு சூப்பர்ஸ்டார் என்ற நடிகன் கபாலி என்ற தலித் கேரக்டரில் நடித்து இருக்கிறார்னு பீத்திக்கிட்டு..............

பா. ரஞ்சித் என்ற தலித் இயக்கிய படமின்ணே......!!

“ஒரு தலித் இயக்கினா.... அது தலித் படமில்லடா......காபலின்னு பேரு வச்சதுனால... சூப்பர் ஸ்டாரு தலித்தா நடிச்சிருன்னு  ரெம்பத்தான் பீத்தாதிங்கடா..விளக்கெண்ணைகளா......

படத்தோட கதை அப்படித்தாண்ணே......

என்னடா கதை.... அம்பேத்கரை தெரியுமா...? உனக்கு.....

“அவர , எப்படிண்ணே தெரியாமல் இருக்கும்

“அந்த அம்பேத்கரின் வாழ்க்கை கதையை படமாக்கிய படத்தில் அம்பேத்காரக நடித்தவர் யாருன்னு தெரியுமாடா....???

“ அவரு மம்முட்டிண்ணே..”..

“அவரும் சூப்பர் ஸ்டாரு தெரியுமில்ல...

“ஆமண்ணே...

அம்பேத்காராக நடிக்க பலபேரு மறுத்துவிட்ட போதிலும். அந்த சூப்பர் ஸ்டார் மம்முட்டி.தன்னுடைய இமேசை விட்டொழித்து அம்பேதக்கராக நடித்தவருடா..... அவரு தலித் தலைவராக நடித்தவரா...இல்ல  “கபாலி“ என்ற தாதாவேடத்தில்  நடித்தவரா....  இதில யாருடா..தலித் தலைவராக நடித்தவரு.... சொல்லுடா வெண்ணெ..

“ மம்முட்டி தாண்ணே..

 “ஆக.மொதல்ல இத புரிஞ்சுகோடா, .காபலி-ன்னு பேரு வைத்ததினால் அது தலித் படமில்லடா.. வெண்ணே.. ஒரு தலித் இயக்கியதால் அந்தப்படம் ஒரு தலித் படமும் இல்லடா .விளக்கெண்ண........


தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...