திங்கள் 13 2025

தாயை இழந்தவன் அனாதையானான்.......





 தாய் சொல்லை

 தட்டாதவன் மகன்


மகன் மேல் அளவற்ற 

பாசம் வைத்துள்ளார்

அந்த தாய்


ஒரு நாள்

தாயுக்கும் மகனுக்கும்

ஒரு விவாதம்..


இதுவரை  தாய்

சொல்லை தட்டாதவன் 

நான்தான் முன்னே

போவேன் என்றான்

 அந்த மகன்....


உன்னை விட்டு

என்னால் தனியாக

இருக்க முடியாது

நான்தான் முன்னே

போவேன் என்றார்

அந்த தாய்


உன்னை வழியனுப்பி

வைக்க  அக்கா

இருக்கிறார் மருமகன்

இருக்கிறார் அதோடு

பேரன் பேத்திகள்

இருக்கிறார்கள் எனக்கு

உன்னைத் தவிர

யாருமில்லை என்வே

நான்தான் முன்னே

போவேன் என்றான்

அந்த மகன்..

.

 தாய் சொல்லை தட்டாமல்

அவர்களை எல்லாம்

கரை சேர்த்துவிட்டவன்

உன்னை அவர்கள்

பார்த்துக் கொள்வார்கள்

நீ இருக்கும்போது

நான் போவதுதான்

எனக்கு நல்லது

அதுவே எனக்கு

நன்மை பயக்கும்

நிம்மதி கிடைக்கும

நான் சொல்வதை

தட்டாதே மகனே!

என்றார் அந்த தாய்


தாய் சொல்லை

தட்டாத அந்த

மகனின் தாய்

மகனிடம் சொன்னபடி

முன்னே சென்றுவிட்டார்


அக்கா..மச்சான்

மருமகள்கள் மருமகன்கள்

அக்காவின் பேத்தி

பேரன்கள் என்று

உறவுகள் இருந்தாலும்

தாயை இழந்த 

அந்த மகன் 

அனாதையாக

நிற்கிறான்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!