வெள்ளி, ஜூலை 21, 2017

தண்ணயில்லாததால்..மீனில்லை....

அன்று ஞாயிற்றுக்
கிழமை வாடிக்கை
ஆளர்களாக இருக்கும்
 அவர்களை  மீன்
வாங்கச் சொன்னார்
சிறு வியாபாரி
மீன் காரம்மா...

இருவர் சேர்ந்து
சொன்னார்கள் மீனா
ஓ......வாங்கலாமே
பெருமாளு மீன்
அவதாரம் எடுத்த
மீனை வாங்காமல்
விட்டு விடலாமா...

ஆவலோடு மீன்
கூடையை இறக்க
முயன்ற  போது
ஒருவர் சொன்னார்

நாலு நாளுக்கு
ஒரு தடவையாக
வரும் தண்ணீரை
மாநகராட்சி காரன்    நேற்று
அரைமணி நேரம்தான்
திறந்து விட்டான்....
குடிப்பதற்கு கூட
தண்ணீர் போதாது

மீன் வாங்கினால்
அய்ந்தாறு தடவை
கழுவ வேண்டும்
கழுவ தண்ணயில்ல...


அதனால........

தண்ணியில்லாததால் இன்றைக்கு
மீன் வேண்டாம்மம்மா........

இன்னொருவர் சொன்னார்
 மீன் அக்கா
மீனை அறுத்து
தருவது போல்
மீனை தண்ணீரில்
கழுவி தந்தால்
பேருதவியாக இருக்கும்
என்ற போது..

மீன் காரம்மா
சொன்னார் தண்ணீர்
இல்லாததால் உங்களுக்கு
மீனில்லை என்று......

4 கருத்துகள்: