செவ்வாய் 19 2019

நினைவலைகள்-89.

வேடிக்கை மனிதர்களைப் பற்றியதல்ல இந்த கட்டுரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை


ரா கெளதம்


மனிதனுக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?அவனுக்குள்ள சிறப்பென்ன?

பூமியில் வாழும் லட்சக்கணக்கான உயிர்களில் மனிதனும் ஒன்று. தனித்துவத்தை எடுத்துக்கொண்டோமானால் எல்லா உயிர்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது

தேனீயின் அறிவு,யானையின் பலம், எறும்பின் நுண்ணறிவு,நாயின் மோப்ப சக்தி,
ரஷ்யாவிலிருந்து வேடதாங்கல் வந்துவிட்டுப் போகும் பறவை என ஒவ்வொரு மிருகத்துக்கும் தனித்துவம் இருக்கிறது

அவை உயிர்வாழ்வதற்கான அறிவையும் அவற்றுக்குள் உரையாடுவதற்கான பிரத்யேக மொழியும் இருக்கிறது.

சிரிப்பதுதான் வித்தியாசமா என்றால் அதுவுமில்லை.எல்லா மிருகமும் தங்களது மகிழ்ச்சியை ஏதாவது ஒருவிதத்தில் வெளிப்படுத்துகின்றன.
நாய் வாலாட்டுவது திமிங்கலம் கடலுக்கு மேலே குதிப்பது,மயில் ஆடுவது இப்படி

இப்படி சிந்திப்பிலும் மொழியிலும் சிரிப்பிலும் தனித்தன்மையிலும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமில்லை

வேறென்ன வித்தியாசமென்றால் சிந்தனை மூலம் இயற்கையை மிருகங்களைக் கட்டுப் படுத்துகிறான். சிந்தனை மூலம் உணர்வுகளை பிரதிபலிக்கிறான்,படைக்கிறான்.

அதன் மூலம் எல்லாவற்றையும் கட்டுபடுத்துவதால் மனிதகுலம் எண்ணிக்கை பெருகுகிறது அதனால் உழைப்பில் ஈடுபட்டு உற்பத்தியில் ஈடுபடுகிறான்.

மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்துவது சிந்தனையும் உழைப்பும் மட்டுமல்ல முக்கியமானது வேறொன்றும் இருக்கிறது

சிந்தனையின் மேன்மை வெளிப்பாடான பிறருக்கென வாழ்தல் சமத்துவத்தை கோருதலாகும்

எந்த விலங்கும் தன்னைத்தவிர தனது இனமோ மற்ற இனங்களோ வாழவேண்டுமென நினைப்பதில்லை. அதற்காக தனது வாழ்வை தியாகம் செய்வதுமில்லை.

இந்த பிறருக்கென சமூகத்திற்கென வாழும் சிந்தனைதான் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.

மனிதன் சமூக விலங்கு.பொதுநல சிந்தனையோ சுயநல சிந்தனையோ அவன் சமூகத்தோடுதான் இணைந்து வாழமுடியும்.

சிலர் மக்களுக்காக வாழ்வதை கடமையாகவும் பெரிமிதமாகவும் தனது சாதனையாகவும் நினைத்துத் கொள்கிறார்கள்.

பணமிருப்பவன் பணத்தை தானம் செய்வதன் மூலம் ஏதோ மக்களுக்காக வாழ்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

சிலர் மக்களுக்காக அல்லாமல் அஞ்ஞானமான பக்தி,கடவுள்,பரமாத்மாவுக்காக வாழ்வை தியாகம் செய்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களால் மனிதகுலத்திற்கு நட்டமே.

சமூகத்தையும் குடும்பத்தையும் பிரிக்கமுடியாது.நமது வாழ்நாள் 65ஆண்டுகளென்றால் 23725நாட்கள்தான் உயிர் வாழ்கிறோம்

இதில் பெற்றோர் கட்டுப்பாட்டிலும் பள்ளி வாழ்க்கையிலும் 17ஆண்டுகள் போய்விடும்.அப்படி 6205நாட்கள் போய்விடுகிறது

கல்லூரி என்றால் 3,5வருடம் போய்விடும் அதில் 1825நாட்கள் போய்விடும். பல்கலை,மருத்துவப்படிப்பு, ஆராய்ச்சி என்றால் 28வயதாகி விடும்.அதை கணக்கில் சேர்க்க வேண்டாம்

மீதி வாழும் 43ஆண்டுகளில் 4ல் ஒருபங்கு உறக்கத்தில் போய்விடும்.அதாவது 10.75 ஆண்டுகள். அப்படி 3924நாட்கள் போய்விடுகின்றன

ஆண்டுக்கு 10நாட்கள் உடம்புக்கு சரியில்லை என்றால் அதில் 430 நாட்கள் போய்விடும்.

அடுத்ததாக காத்திருப்பது வேலைக்காக, வாகனங்களுக்காக ஒவ்வொரு தேவைக்கும் வரிசையில் காலைக்கடன், சில நேரங்களில் 
வெட்டியாக பொழுது போவதில் 5ஆண்டுகள் போய்விடும். அப்படி 1825 நாட்கள் வீணாகும்

இதில் அடிமை புத்தியுடைய பெண்கள் பாவாடை சேலையை காலில் தட்டித்தடையாமலிருக்க தூக்கிப் பிடிப்பதிலும் மாராப்பு சேலையை இழுத்து விடுவதிலும் மேக்கப்பிலும் தலைமுடியை கோதி விடுவதிலும் முடியை பராமரிப்பதிலும் வாழ்நாளில் 9ஆண்டுகளை வீணடிக்கிறார்கள். இதை கணக்கில் வைக்க வேண்டாம் மனிதில் வைத்தால் போதும்.

மேலும் லிங்கா, மொட்டசிவாகெட்டசிவா, உத்தமவில்லன்,மாரி,கத்திச்சண்ட போன்ற வெட்டிப்படங்களை பார்ப்பதன் மூலம் வீணாகும் நாட்கள் பல.

சிலர் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்வது என்ற பெயரில் உலக இலக்கியங்கள் இந்திய இலக்கியம் ஆண்டுக்கு 1000புத்தகம் வெளியானால் 400புத்தகங்களைப் படிப்பது மேலும் சமஸ்,ஜெயமோகன்,பாலகுமாரன், இறையன்பு புத்தகங்களைப் படிப்பது சிலர் பக்தி புத்தகங்களைப் படித்து ஜென்மம் பாழாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கடைசிவரை மக்களுக்காக எதையும் செய்யாமல் புத்தகம் படித்தே சாவார்கள் அல்லது மேட்டிமைத்தனமான உபதேசங்களைப் பேசிப்பேசியே சாவார்கள். இவர்கள் வாழ்நாளில் பாதியை வீணாக்குவார்கள்.

குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு நாட்டுக்காக வாழ்பவர்கள் 40ஆண்டுகளில் தினம் 8மணிநேரம் வேலை பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இப்படியாக 23725நாட்களில் மேற்கண்ட எல்லாம் போக ஒரு 3000 அல்லது 4000நாட்கள்தான் நாட்டுக்காக மக்களுக்காக வாழ முடியும்.

அதுவும் மக்களுக்காக வாழும் எண்ணமிருந்தால். இது கடைசிவரை தான்,தனது குடும்பமென வாழ்ந்து வீழும் வேடிக்கை மனிதர்களைப் பற்றியதல்ல இந்த கட்டுரை.

4000நாட்கள் மக்களுக்காக வாழ்ந்து விட்டு வாழ்நாளையே தியாகம் செய்வதாகச் சொல்வதில் ஒரு அர்த்தமுமில்லை.

சமூகவரலாறு என்பது வர்க்கப் போராட்ட வரலாறே. சமூகம் என்பது முதலாளி தொழிலாளி என இரு வர்க்கமானது இதில் தொழிலாளி வர்க்கத்திற்காக வாழ்வதே போராடுவதே மனிதனின் வரலாற்றுக் கடமை

அப்படி வாழ்ந்தவர்களில் ஒரு மகத்தான உதாரணம்தான் மாமேதை காரல்மார்ஸ்.

தொழிலாளி வர்க்கப் போராட்டத்திற்காக விஞ்ஞானப்பூர்வமான கம்யூனிசத் தத்துவத்தை உருவாக்கி அதற்காக தன்னை தன் குடும்பத்தை துறந்து வாழ்நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியே மரணம் வரை சிந்தித்தவர்தான் மார்க்ஸ்.

உழைக்கும் மக்களுக்காக வாழ்வோருக்கு ஒரு முன்னுதாரணம். இதுதான் மனிதனின் அடையாளம் பருப்பொருளின் உயர்ந்த வடிவமான சிந்தனையின் உயர்ந்த வடிவம்தான் பிறருக்காக வாழுதல் சமத்துவமாக வாழுதல் இதுதான் மனித அடையாளம்

அதற்கொரு உயர்ந்த எடுத்துக்காட்டுதான்  மாமேதை காரல்மார்க்ஸின் வாழ்க்கை.

இது வர்க்கப் போரில் வீரமரணமடைந்தவர்கள், ஆயுதமேந்தி போராடிக் கொண்டிருப்பவர்கள், கட்சியில் முழுநேர ஊழியர்கள்,சிறையில் கிடப்பவர்கள், கட்சியின் எல்லாப் போராட்டத்திலும் கலந்து கொள்பவர்களைப் பற்றியதல்ல

2ஆண்டுக்குள் கட்சியில் இருந்து ஓடியவர்கள் "எவனும் திருந்த மாட்டான் சார்"
 "தோழர் மக்கள் இன்னும் தயாராகல தோழர்" "எந்தக் கட்சியும் சரியில்ல தோழர்"
"நிறைய படிக்கவேண்டிருக்கு தோழர்" "இலக்கியபணியும் கட்சிவேலைதானே தோழர்" "ஏதோ முடிஞ்சத செய்யிறேன் தோழர்" என புலம்புவோருக்காகத்தான் இந்த பதிவு.

கம்யூனிசம் என்பது வரவிருக்கும் சமூகம். மார்க்சியம் என்பது அதை எளிதில் விரைவில் அடைவதற்கான சூத்திரம்,வழிகாட்டி.

ஆக நமது வாழ்க்கையானது கம்யூனிசம் என்கிற சிந்தனைக்கும் முதலாளித்துவ வாழ்க்கைமுறைக்கும் ஆனப் போராட்டமாகும்

இதில் ஜெயிப்பவன் கம்யூனிஸ்ட்டாகிறான் தோற்றபவன் முதலாளித்துவ வாதியாகிறான் ஊசலாடுபவன் குட்டி முதலாளியாகிறான்.

இதில் கட்சியிலிருந்து வெளியேறும் பலரும் குடும்ப வாழ்க்கையில் தஞ்சமடைகிறார்கள் இந்த குட்டி முதலாளித்துவ நிலைபாட்டை அவர்களது ஈகோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

அதை மறைக்க கட்சியை ஏசுகிறார்கள் மக்களைப் பழிக்கிறார்கள். தனது வாழ்க்கை கட்சிக்காக வீணானதாக புலம்புகிறார்கள்.

தனது அறிவாளி மேட்டிமைத்தனத்தை காட்டி கட்சியைவிட மேலானவர்களாகக் கருதிக் கொள்கிறார்கள்.
இவர்கள் ஒருமுறை மார்க்ஸ்,ஏங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின்,மாவோவின் வாழ்க்கையை கட்சிப்பணியை படித்தால் புரிந்துகொள்வார்கள்.
"என்றோ வரப்போகும் புரட்சிக்காக 'அற்புதமான' இந்த ஒரே பிறவியை வீணடிப்பதா" என நழுவுகிறார்கள்
இன்று கட்சி இருக்கிறது,தத்துவம் இருக்கிறது,வளர்ந்து விட்ட பாட்டாளிவர்க்கம் இருக்கிறது, ஆயுதம் இருக்கிறது, ஊடகமிருக்கிறது, செயல்தந்திரமிருக்கிறது
அப்படியிருந்தும் கட்சியிலிருந்து ஓடியவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்

ஆனால், இது எதுவுமே இல்லாத காலத்தில் நாடு கடத்தல், வறுமையிலும் "எப்போதோ" வெற்றி பெறப்போகும் கம்யூனிசத்துக்காக தன்னை "தோற்றுகொடுத்து" ஆவேசமாக ஒரு தத்துவத்தை படைத்த காரல்மார்க்ஸ் மேதைதான்..மாமேதை..மாமனிதன்.

புஷ்கின்

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....