மாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ஸ்கூட்டி வண்டியை ஓட்டிக் கொண்டு நேராக சாராயக் கடைக்கு சென்று ரெண்டு லிட்டர் பெட்ரோலை நிரப்பி விட்டு நேராக மாட்டுத்தாவணியைக் கடந்து மேலூரை நெருங்கினேன். மேலூரை நெருங்கியவுடன். முதல் அனுகு சாலையில் சென்று சிவகங்கை சாலையில் பல தூரம் சென்று பின் நெற்றியில் அடித்துக் கொண்டு திரும்பி வந்து மேல வளசைகை்கு சென்று முதல் கட்டிங்கில்லே திருப்பத்தூர் சாலையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். போகும்போதே...பாதை மாறி வந்துவிட்டேன் என்று தெரிந்தது. மேலூர் ஊருக்குள் செல்லாமல் நான்கு வழி சாலையில் சென்றால் கிழையூர். கீழவளவு இப்படி தெரிந்த ஊர் இல்லாமல் உறங்கான்பட்டி... அப்புறம் பட்டி என்று யாரிடமும் எதுவும் கேட்காமல் சிவகங்கையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சென்று... பின் திருப்பத்தூர் ஊருக்குள் செல்லாமல் காரைக்குடி செல்லும் சாலையில் பிரிந்து காரைக்குடிக்கு வண்டியை விரட்டினேன்.
காரைக்குடி பழைய பேருந்து நிலைத்தை சென்றடைந்தபோது மணி மாலை ஆறு ஆகியிருந்து. சந்திக்க வந்த நண்பரை பற்றி கேட்டபோது அவரு தேவகோட்டை பக்கத்து கிராமத்துக்கு ஒரு சோலியா போயிருக்காருன்னு தகவல் கிடைத்தது.
தகவல் சொன்னவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு தேவ கோட்டயை நெருங்கியபோது.. இரவு எட்டுமணிக்கு மேல் ஆகிவிட்டது. தேவகோட்டைக்கு அருகில் சென்றபோது மீசைக்கார நண்பர் நிணைவுக்கு வந்தார்.
அவரு உள்ளுரில் இருக்காரோ..வெளியூரில் இருக்காரோ.. அல்லது வெளி நாட்டில் இருக்காரோ.. தெரியாது.. செல்பேசியில் பேசலாம் என்று நிணைத்தால்...இரவு நேரம் வேண்டாம்..... வந்த வேலை முடியாது... என்று நிணைத்துவிட்டு. சந்திக்க வந்தவரை சந்தித்துவிட்டு. அவருடன் காரைக்குடி வந்துவிட்டேன்.
திரும்பி வரும்போது... உச்சி வெயில் தலைக்கவசத்தை தாண்டி மண்டையை பொளந்தது.. கண்கள் சொருகிவிட்டது.. வண்டியின் இஞ்சின் வெயில் தாக்கத்தால் ரெம்பவும் சூடாகி விட்டது. நிண்டு நிண்டு காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் வந்து அங்கிருந்து வழக்கமான தெரிந்த பாதையான கிழவளவு, கீழையூர் அப்புறம் நாலு வழிச்சாலை அப்புறம் மாட்டுத்தாவணி..வந்து வீடு வந்து சேர்ந்து விட்டேன். முழித்துப் பார்த்தால் விடியேவே இல்லை... உடம்பெல்லாம் அடித்து போட்டது மாதிரி வலி,....
அடப்பாவி..நம்ம எப்படா அவ்வள தூரம் வண்டி ஓட்டி போணோம் என்ற யோசனைதான் முதலில் வந்தது.... பிறகு ஒரு சமயம் முதல் தடவையாக வேலை சம்பந்தமாக பஸ்ஸில் காரைக்குடி சென்ற போது..... திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, இன்னும் சில ஊர்களுக்கு ஏ்ற்கனவே நான் வந்து போனதாகவே என் நிணைவுக்கு தெரிந்தது.....
ஆகா கனவில் கூட , தேவகோட்டை மீசைக்கார நண்பர் நினைவிற்கு வந்திருக்கிறார் பாருங்கள்
பதிலளிநீக்குகொடுத்து வைத்தவர்... அவர்..
நீக்குஅப்படீனாக்கா... தேவகோட்டை வந்ததும் கனவா?
பதிலளிநீக்குமுதலில் வந்தது கனவில்..இரண்டாவதாக வந்தது..நிஜத்தில்...நண்பரே...
பதிலளிநீக்கு