ஞாயிறு 21 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்.....!!!!!!!




தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ...


நான்கு நாளைக்கு ஒரு முறை  குழாயில் வரும் தண்ணீரை அடி குழாயில் வேக வேகமாய் அடித்துக் கொண்டிருந்தேன்.... சிறிது இடைவெளி விட்டாலும் தண்ணீர் ஓடி விடும்.. என்பதால்.....  மழை பெய்தால் தெருவில் வழியும் நீரெல்லாம் பள்ளமாய் இருக்கும் என் வீட்டை நோக்கி வந்து வீட்டைச் சுற்றி குளமாய் தேங்கி விடும்.. ஆனால்.. இந்த குடி தண்ணீர் மட்டும் பள்ளமாய் இருக்கும் என் வீட்டுக் குழாயில்  வருவதேயில்லை.  இப்படி வேக...வேகமாய்  அடித்தால்தான்  சிறிதளவாவது சீராக வரும்.
இந்த வயதான காலத்திலும் இப்படி வேலை செய்வதை க் கண்ட நண்பெர் ஒருவர் சொன்னார். உங்க தெருவில் ஒரு சில வீட்டைத் தவிர மற்ற எல்லோரும் மோட்டார் பம்ப் மூலம் குடி தண்ணீரை பிடிக்கும்போது.. தாங்களும் ஒரு மோட்டாரை வாங்கி  கஸ்டப்படாமல் தண்ணீர் எடுக்கலாமே என்று அறிவுரை கூறி வழிகாட்டினார்.

அவருடைய வழிகாட்டலுக்கு நன்றி! கூறி.. என் பதிலைக் கூறினேன். தாங்கள் சொல்வது சரிதான்.தண்ணீர் பயன்பாட்டிற்கு  மாநகராட்சியில் மீட்டர் பொருத்தும்போது  நானும் மோட்டார் பம்ப் ஒன்றை வாங்கி தாங்கள் சொல்வதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவேன். இப்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியாது  என்றபோது என்னைப் பார்த்து விழித்தார்.

பின் காரணத்தை சொன்னேன்.என் தெருவில் எல்லோரும் மோட்டார் போட்டுதான் தண்ணீர் எடுக்குறார்கள். உண்மைதான். நான் என் வீட்டிற்க்கு குடிதண்ணீர் இணைப்பும் பாதாள சாக்கடை இணைப்பு ஒவ்வொன்றையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஐந்து ஆறு ஆண்டுகள் காத்திருந்து உத்தரவு பெற்று, அந்த உத்தரவை செயல்படுத்த இரண்டு ஆண்டுகாலம் போராடித்தான் பெற்றுள்ளேன். தற்போது உங்கள் வழிகாட்டல்படி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உடனே மாநகராட்சிக்கு புகார் கிளம்பும்....உடனே..மாநகராட்சியில் உள்ள அந்த நல்ல அதிகாரி உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வந்து பத்தாயிரம் அபதாரம் போட்டு மோட்டார் பம்பபையும் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பையும் துண்டித்துவிட்டு செல்வார்.... அப்போது நீங்கள் வந்து எல்லோர் வீட்டிலையும் மோட்டார் பம்ப் மூலமாகத்தான் எடுக்கிறார்கள். பொதுக் குழாயிலும் மோட்டார் பம்ப் மூலமாகத்தான் எடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லி பாருங்களேன். 

அந்த நல்ல அதிகாரி... மற்ற வீட்டார் பற்றி புகார் வரவில்லை. என்னைப்பற்றித்தான் புகார் வந்துள்ளது என்பார்..... இதெல்லாம் எனக்கு தேவையா? சொல்லுங்கள்.....என்றபோது

இந்த தெரு நாட்டாமைக்காக...இந்தத் தெருவே அந்த ஆளுக்கா  ஜால்ரா தட்டுது.. என்றார் வியப்பாக.......நாற்பது வருசமாக..இந்த வீட்டிற்கும் இந்த இடத்திற்கும் கோரட்டு, போலீசுன்னு அலைஞ்சு இப்பத்தான் கடைசி கட்டத்துக்கு வந்து நிற்கிறேன். என்தந்தை வழி உறவுக்காரர்களும் சரி இந்தத் தெருவில் இருப்பவர்களும் எனக்கு சொல்லெண்ணா துயரத்தையும் கொடுமையும் செய்து உள்ளனர். செய்து வருகின்றனர்.... இரண்டு மூன்று முறை என்வீட்டுக்கு தீ வைத்தார்கள், பல தடவை போலீசில் பொய்ப்புகார் கொடுத்தார்கள் போலீசு மூலமாக என்னை அடித்து என் காதை செவிடாக்கினார்கள்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. நான் ஏன் திருமணம் முடிக்கவில்லை என்பதற்கும் இந்த நாற்பது ஆண்டு இம்சைகளும் காரணமாகும். என்ற போது....




அதிர்ந்து போய் சொன்னார்...அய்யோ...இந்தத் தெருக்காரர்கள் கரோனாவை விட பயங்கரமானவர்களாக இருக்கிறார்களே! என்று.....




 


















7 கருத்துகள்:

  1. ஆம் நண்பரே கொரோனாவைவிட மோசமானவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  2. சென்ற வருடம் எங்கள் தெருவிலும் இப்படித்தான்... அகப்பட்ட அனைத்து மோட்டாரையும் அள்ளிக் கொண்டு போனார்கள்...

    முடிவாக நடந்தது என்னவென்றால், ஏரியா கவுன்சிலர் மோட்டார் பம்ப் கடையை வாங்கி விட்டதாக செய்தி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி அந்த கவுன்சிலர்.. எம்எல்ஏ..ஆகி அமைச்சர் ஆகி விடுவார் நண்பரே!!

      நீக்கு
  3. ஜீரணிக்க முடியாத சோகம், கொரோனா குடியிருக்கும் தெருவில் வசிப்பது.

    பதிலளிநீக்கு
  4. எமக்கு போக்கிடம் வேறு இல்லாததால் இந்த நிலைமை ..நண்பரே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...