உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
தலைவர்களுக்கெல்லாம் தலைவர் - #தந்தை_பெரியார்
தென்மாநிலங்களில் நான் "சாதி ஒழிப்பை" பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அங்கு பெரியார் இருக்கிறார். #சொன்னது_அம்பேத்கர்
"சமூக மாற்றங்கள்" எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது. #சொன்னது_காமராஜர்
"பெரியார்" இல்லாமல் நான் இல்லை. #சொன்னது_அண்ணா
எனக்கு இரண்டே தலைவர்கள் தான், ஒன்று "என்.எஸ்.கே" மற்றொன்று "பேரறிஞர் அண்ணா". ஆனால் அந்த இரு தலைவர்களுக்கும் தலைவராக இருந்த ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். #சொன்னது_எம்ஜிஆர்
"அறிவைத் தடுப்பாரை,
மானம் கெடுப்பாரை
வேரோடு பெயர்க்க வந்த கடப்பாரை”
என்று கவிஞர் #காசிஆனந்தன்
அவர்களும்,
“தொண்டு செய்து பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரப்பை உலகு தொழும்,
மனக்குகையில் சிறுத்தை எழும்
என்று #பாரதிதாசன் அவர்களும்,
ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார், உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் வரிசையில் என்றும் இருப்பவர்.
அவரை வெறும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும், கடவுள் மறுப்பாளராகவும் மட்டுமே பார்த்துப் பழகிவிட்டார்கள் பலர்...!!!
அவர்கள் யானையைப் பார்த்த குருடர்கள்...!!!
உண்மையில்,
அவர் சுடர்மிகுந்த சுயசிந்தனையாளர்...!!!
“அவன் சொன்னான், இவன் சொன்னான்னு நம்பாதே!!! உனக்கு எது சரின்னு படுதோ அதன் படி யோசி!!! நட!!!” என்று சொன்ன உண்மையான சிந்தனையாளர்...!!!
பெரியார் ஏன் “கடவுள் இல்லை” என்று சொன்னார்...?
கடவுளுக்கும் அவருக்கும் கணக்குவழக்குத் தகராறு ஏதுமில்லை.அங்காளி பங்காளிச் சண்டையும் கிடையாது. அவர் ஏன் கடவுள் இல்லையென்று சொன்னார்...?
ஏனெனில், இன்றும் தீராத நோயாக கிராமத்தில் வெளிப்படையாகவும் நகரத்தில் மறைந்தும் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளும் அதுசார்ந்த ஜாதி உணர்வுகளும் தான் முதல் காரணம்...!!!
நம்நாட்டு குடும்பச் சடங்குகள் ஜாதிகளோடு தொடர்புடையவை...
அந்தந்த ஜாதிகளும் மதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பன...
மதமோ, அந்தந்த மதத்தின் கடவுளோடு தொடர்புடையது...
எனவேதான் பெரியார் சொன்னார்,
“ஜாதி ஒழிக... மதம் ஒழிக... கடவுள் ஒழிக...” (இவற்றைக் காப்பாற்றும் “பார்ப்பான் ஒழிக, காங்கிரஸ் ஒழிக, காந்தி ஒழிக“ என்றுதான், தான் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார் பெரியார்).
மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது...!!!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் நாட்டில் மதம் மாறமுடியும். ஆனால், ஜாதி மாறமுடியாது...!!!
உலக நாடுகளில் கூட நிறத்தின் அடிப்படையில் தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிறார்கள்...
ஆனால், நம் நாட்டில் தான் பிறப்பின் அடிப்படையிலேயே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிறார்கள்...
உலகில் வேறெங்கும் இல்லாதபடி, நம் நாட்டைப் பிடித்த சிறப்பு வியாதி இந்த "ஜாதி"...
இதற்கொரு மருந்து கண்டவர் தந்தை பெரியார்...
“எனக்குக் கீழானவன் யாரும் இல்லை, எனக்கு மேலானவனும் யாருமில்லை” இதைவிட சமத்துவத்தை விளக்குவது எப்படி...?
கல்வியைப் பரப்புவதிலும், பெண்ணுரிமையைப் பெரிய இயக்கமாக மாற்றியதிலும் தந்தை பெரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. கல்வி- வேலைவாய்ப்புக்காக இடஒதுக்கீடு பெறப் பெரும் போராட்டம் நடத்தி முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தையே திருத்திய பெருமை பெரியாருக்கே உண்டு...!!!
பெண் உரிமைக்கான இயக்கங்களைப் பெரியார் நடத்தியபோது, யாரோ ஒருவன், “பெண்களைப் பொதுவுடமையாக்குவதாகச் சொல்கிறீர்களே! உங்கள் மனைவியை நான் அழைத்துச் செல்லலாமா?” என்று துடுக்காகக் கேட்டானாம்!
நாமாக இருந்தால் கோபத்தில் எதையாவது உளறி, திட்டிக் கொட்டியிருப்போம்!
ஆனால், தந்தை பெரியார் பதறாமல் சொன்னாராம் -
“ஓ! தாராளமாக அழைத்துப்போகலாம்- அவள் விரும்பி வந்தால். ஒருவேளை அவள் செருப்பால் அடிப்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” எப்படி...?
இதே போலத்தான் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தின் போது, ஒருவன்,
“கடவுள் இல்லை என்கிறீர்களே? ஒருவேளை கடவுள் உங்கள் முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டானாம்.
“அப்படியா? வரச்சொல்! நம்புகிறேன். வரவில்லை என்றால் நான் சொல்வதை நீ நம்பவேண்டும்”
சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே சொத்துகளை எல்லாம் இழந்தவர் தந்தை பெரியார். இன்று சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருவோரை நினைத்தால் பெரியாரின் தேவை புரியும்...
பெண்ணுரிமையைப் பற்றிப் பலரும் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க, பெரியார் ஒருவர்தான் எளிமையாகச் சொன்னார் -
“பெண்கள் முன்னேறணும்னா... பெருசா ஒன்னும் பண்ண வேணாம், அவுங்க கையில இருக்குற கரண்டியப் புடுங்கிட்டு, புத்தகத்தைக் குடுத்தாப் போதும்”
எப்படி...? இதுதான் பெரியார்...!!!
தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.
அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே.
95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடி சரித்திரம் படைத்தவர்...!!!
90-ஆவது வயதில் - 180 கூட்டம்.
91-ஆவது வயதில் - 150 கூட்டம்.
93-ஆவது வயதில் - 249 கூட்டம்.
94-ஆவது வயதில் - 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில்
(95-ஆவது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.
ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....
சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் சொருகப்பட்டிருக்கும்.....
இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?
எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?
அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?
மதங்களுக்கும் அவருக்கும் முன்விரோதமா ?
நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...
நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...
யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடுனு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே...!!!
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...
1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள் மற்றும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்கு மேல் வேட்டிக்கட்டக் கூடாது.
3. தங்க நகைகள் அணியக் கூடாது.
4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5. ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
இதை எல்லாம் மாற்றிய பெருமை #பெரியாரையே சேரும்...
அறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது...
பதிலளிநீக்குநம்ம மக்கள்தான் கையில நெய்ய வச்சுகிட்டு வெண்ணெய்யிக்கு அலையுற கூட்டமாச்சே....!!!
நீக்குநற்பணி
பதிலளிநீக்குசமூக அக்கரை தொடரட்டும்