பள்ளிக்கூடத்துக்கு கட்ட பணம் இல்லையா? கல்விய இலவசமாக்கு.
சாப்பாட்டுக்கே வழியில்லையா? இலவச சத்துணவு போடு.
போட்டுக்க நல்ல துணிமணி இல்லையா? இலவச சீருடை கொடு, போட்டுக்க செருப்பு கொடு.
நோட்புக் வாங்க காசில்லையா? எல்லாத்தையும் இலவசமா கொடு, பை, ஜாமெட்ரி பாக்ஸ் சேர்த்து கொடு.
பஸ்சுக்கு காசில்லையா? இலவச பஸ்பாஸ் கொடு, சைக்கிள் கொடு.
பதினொன்னாவது சேருற எல்லா பிள்ளைகளுக்கும் லேப்டாப் கொடு.
பெண்பிள்ளைய படிக்க வெக்காம கல்யாணம் பண்றாங்களா? பத்தாவது முடிச்சா, பன்னெண்டாவது முடிச்சா கல்யாணத்துக்கு உதவித் தொகை கொடுக்கிறோம்னு சொல்லு.
பெண்பிள்ளைகளுக்கு நாப்கின் கொடு.
பெயிலாகிட்டா படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பிடுவாங்களா? எட்டாவது வரைக்கும் ஆல்பாஸ் கொடு.
பாடத்திட்டத்துல ஏற்றத்தாழ்வு இருக்கா? எல்லாருக்கும் சமச்சீர்கல்வி கொடு.
உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கத்துக்கொடு.
சிறுபான்மைசமூகப் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடு.
முதல்தலைமுறைப் பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஸ்காலர்ஷிப் கொடு.
உயர்கல்வில நுழைய கோச்சிங் போகமுடியாது. நுழைவுத்தேர்வுகளை நீக்கு. எல்லா சமூகங்களுக்கும் இடங்களைப் பகிர்ந்து கொடுக்க இடஒதுக்கீடு கொடு.
இப்படியெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்து புள்ளைங்கள படிக்கவெச்சு திராவிடம் சாதிச்சது தான்டா 49% GER. ஆண்பிள்ளைகளுக்கு சமமா பெண்பிள்ளைகளும்.
இப்ப 3 5 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரதும், ஆங்கிலம் கத்துக்கிற வாய்ப்ப மட்டுப்படுத்துறதும், ஒன்னுத்துக்கும் உதவாத சமஸ்கிருதம் இந்திய திணிக்கிறதும், தொழிற்கல்வி கொண்டுவரதும், எல்லா உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரதும் யார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க? யார் வீட்டுப்பிள்ளைகள குலத்தொழில் பாக்க வீட்டுக்கு அனுப்ப?
தமிழகத்தோட கல்வி வளர்ச்சில பாதி கூட காமிக்காத விளங்காத பயலுக நீங்க யாருடா எங்களுக்கு சட்டம் போட?
தூசிதட்டி பெயிண்ட் அடிச்சு மத்திய பாஜக அரசு கொண்டுவரும் இந்த ஈராயிரமாண்டு பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தமிழகம் நிராகரிக்கிறது!
எதிர்ப்புகள் வலுப்பெறும்!!
விழிப்புணர்வுடன் இல்லையென்றால் வீழ்த்தப்படுவோம்...
பதிலளிநீக்குஉண்மை...
நீக்குகேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமை.
பதிலளிநீக்குகிறுக்கு பய நாட்டாமைதான் நடந்துகிட்டு இருக்கிறது...
நீக்கு