உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி சர்ச்சைக்குரியவராகப் பெயர் பெற்று இன்று பதவியிலிருந்து ஓய்வுபெறும் அருண் மிஸ்ரா எந்தெந்த முக்கியமான வழக்குகளில் பங்கேற்றார் என்ற கட்டுரைத்தொடர் வெளியிடுகிறது வயர் வலையிதழ். அதில் முதல் கட்டுரையில் வெளிவந்த விவரங்களிலிருந்து சில விஷயங்கள் மட்டும் இங்கே ஆங்கிலம் அறியாத தமிழ் வாசர்களுக்காக.
—————————————————————————
அருண் மிஸ்ராவின் அப்பா ஹர்கோவிந்த் மிஸ்ரா, மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். குடும்பமே வழக்குரைஞர் குடும்பம்தான். அருண் மிஸ்ராவும் பிறகு மத்தியப் பிரதேச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். பிறகு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். மோடி அரசு 2014இல் ஆட்சிக்கு வந்ததும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1. தம்பியுடையான் விதிகளுக்கு அஞ்சான்
கடந்த ஆண்டு, அருண் மிஸ்ராவின் தம்பி விஷால் மிஸ்ரா மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான குறைந்தபட்ச வயது 45. ஆனால் விஷாலின் வயது 43 இருக்கும்போதே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வயது விதியை மீறி இவரை நீதிபதியாக நியமிக்கலாம் என்றவர் ரஞ்சன் கோகோய். ஆமாம், அதே கோகோய்தான். நியமனக் குழுவில் அருண் மிஸ்ரா இருக்கவில்லைதான்; ஆனால் தம்பியை நீதிபதியாகப் பரிந்துரை செய்த குழுவில் ஐவரில் இவரும் ஒருவர்.
பி.கு.-1 - விஷால் மிஸ்ரா பாஜக ஆதரவாளர். பாஜகவுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதியவர். பாஜக அரைவேக்காடுகள் செய்வதுபோலவே, நேரு குடும்பம் முஸ்லிம் குடும்பம் போன்ற அவதூறுகளைப் பேஸ்புக்கில் பரப்பி வந்தவர்.
பி.கு.-2 - விஷால் மிஸ்ராவின் நியமனம், 2019இல் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு செய்யப்பட்டது. குறைந்த வயதில் உயர்ந்த இடத்தை அடைந்தவர் எப்படியும் உச்சநீதிமன்றத்தை எட்டிவிடுவார். அப்படி எட்டிவிட்டால், சீனியாரிட்டி படி, தலைமை நீதிபதி பதவியையும் பிடித்து விடுவார். அப்படிப் பிடித்து விட்டால், நீண்டகாலம் அந்தப் பதவியில் நீடிப்பார்.
2. சஞ்சீவ் பட் வழக்கு
குஜராத் அரசு பழிவாங்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளியது. அந்தக் குற்றச்சாட்டுகளை நியாயமான முறையில் புலனாய்வு செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார். அருண் மிஸ்ரா, புலனாய்வு ஏதும் தேவையில்லை என்று நிராகரித்து விட்டார். விளைவு - சஞ்சீவ் பட் இப்போதும் சிறையில் வாடுகிறார்.
3. சஹாரா-பிர்லா டயரி வழக்கு
மைய கண்காணிப்பு தலைமை ஆணையராக கே.வி. சவுத்ரி, ஆணையராக பாசின் ஆகியோரை நியமிப்பதறகு எதிரான இடையீட்டு வழக்கும் அடங்கும். காமன் காஸ் தொடர்ந்த இவ்வழக்கில், அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு 25 கோடி ரூபாய் தரப்பட்டதான குறிப்பு அந்த டயரியில் இருந்தது. இந்த வழக்கு அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு பெஞ்சுக்கு தலைமை வகிக்கும் அளவுக்கு சீனியாரிட்டி இல்லாதபோதும் அருண் மிஸ்ராவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து, கண்காணிப்பு ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பி.கு.-1 - மிஸ்ராவின் உறவினர் திருமணம் மிஸ்ராவின் வீட்டில் நடைபெற்றது. அதில் பாஜகவின் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உள்பட முக்கியத் தலைகள் பங்கேற்றனர். சஹாரா டயரியில் பணம் பெற்றவர்கள் பட்டியலில் சவுஹான் பெயரும் உண்டு.
பி.கு.-2 - மைய கண்காணிப்பு ஆணையர் சவுத்ரி 2019இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் நியமனம் பெற்றார்.
4. நீதிபதி லோயா கொலை வழக்கு
2018இல் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அதிருப்தி அடைந்து வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அதிசய நிகழ்வுக்கு அருண் மிஸ்ராவும் ஒரு காரணம். முக்கியமான வழக்குகள் வேண்டப்பட்ட ஆட்களுக்கு (அருண் மிஸ்ராவுக்கு) ஒப்படைக்கப்படுகின்றன என்பதும் ஒரு குற்றச்சாட்டு. பிறகு இந்த வழக்கு தலைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
பி.கு.-1 - லோயா மரணம் இயற்கையானதுதான் என தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ண கவய் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
பி.கு.-2 - சோராபுத்தீன் வழக்கு நீர்த்துப்போனது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாரும் விடுவிக்கப்பட்டடார்கள்.
5. மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு
காமினி ஜெய்ஸ்வால் தொடர்ந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்க வேண்டும் என 2017 நவம்பர் 9ஆம் தேதி நீதிபதி செல்லமேஸ்வர் உத்தரவிட்டார். ஆனால், அந்த பெஞ்ச் விசாரணையை துவக்குவதற்கு முன்பாகவே நவம்பர் 10ஆம்தேதி அவசர அவசரமாக வேறொரு பெஞ்ச் அறிவிக்கப்பட்டது. அருண் மிஸ்ராவும் அடங்கிய பெஞ்ச், காமினி ஜெய்ஸ்வால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
6. ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு
2019இல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய வழக்கு பரபரப்பானது. தன்மீதான வழக்கை விசாரிப்பதற்கான குழுவில் அருண் மிஸ்ராவை நியமித்தார் தலைமை நீதிபதி. இறுதியில், ரஞ்சன் கோகோய் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதி அமைப்பைக் குலைக்க செய்த திட்டமிட்ட சதி என கூறப்பட்டது.
பி.கு. - ரஞ்சன் கோகோய் பணி ஓய்வு பெற்ற பிறகு, பாஜக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக பரிசு பெற்றார்.
மேலும் சில வழக்குகளைப் பற்றி அறியவும், விவரங்களை இன்னும் தெளிவாக அறிய...
- Shajakhan
எல்லாம் "அவன்" செயல்.
பதிலளிநீக்குஉண்மை...
நீக்குதவறுக்கேற்ற பதவி...!!!
பதிலளிநீக்குஉண்மை...
பதிலளிநீக்கு