வெள்ளி 06 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -73.....

 


                                                    --- கவிஞர் கலி.பூங்குன்றன்




சங்கரமடம் என்றால் - சல்லாபத்தின் கூடாரம். உபயம்: ஜெயேந்திரர்பற்றி எழுத்தாளர் அனுராதா ரமணன்


 கோயில் என்றால் - காமக் களியாட்டப் பள்ளியறை, உபயம்: தேவநாதன்.


ஆசிரமம் என்றால் - ஆணுறைத் தொழிற்சாலை. உபயம்: சாமியார் ஆசாராம் (பகவான் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன் என்று நீதிமன்றக் கூண்டில் ஏறி ஒப்புதல் வாக்குமூலம்)


பக்தி என்றால் - மூத்திரக் குட்டையில் குளிப்பது. உபயம்: மகா மகக் குளம் (28 சதவிகிதம் மலக்கழிவு - 40 சதவிகிதம் மூத்திரம் - தகவல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் (DT Next - 23.2.2018).


திருக்குறள் என்றால் - தீயகுறள். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.


இதிகாசம் என்றால் - ஒரு பெண் 5 கணவர்! உபயம்: மகாபாரதம் (ஆறாவதாக கர்ணன் மீதும் ஒரு கண்!)


தமிழ் என்றால் - நீஷப் பாஷை. உபயம்: சங்கராச் சாரியார் (பூஜை வேளையில் நீஷ பாஷையாம் தமிழைப் பேச மாட்டார்; ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி - உண்மை 15.12.1980).


பகுத்தறிவு என்றால் - பித்தலாட்டம்! உபயம்: ‘துக்ளக்‘ சோ. ராமசாமி (ஆதாரம்: ‘துக்ளக்‘ பதில் 4.3.2009) குறிப்பு; மனிதனுக்குத்தான் பகுத்தறிவு  அதா வது - ஆறாவது அறிவு; மிருகங்களுக்குத்தான் அய்ந்து அறிவு!


பிராமணன் என்றால் - பிச்சை எடுத்துச் சாப்பிட வேண்டியவன். உபயம்: காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரி யார் உபந்நியாசங்கள்  - 'கலைமகள்' வெளியீடு)


காணிக்கை என்றால் - கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்பது. உபயம்: உண்டியலில் பணம்போட்டால் கடவுள் கேட்டதைக் கொடுப்பார் என்ற ஏற்பாடு.


ஒரு பிரதோஷ காலத்தில் சிவனுக்குக் கீழ்க்கண்ட பொருள்களால் அபிஷேகம் செய்தால் கைகண்ட பலன் உடனே கிடைக்குமாம்.


நல்லெண்ணெய் என்றால் - பக்தி, சுகம், நலம்தரும்.


திரவியம் பொடி என்றால் - கசடுகள் நீங்கிய நறுமணம் கமழும் (Body Spray).


தண்ணீர்  (கங்கா) என்றால் - மனத் தூய்மை.


பச்சையரிசி, மாவு பொடி என்றால்  - கடன் தீரும். குபேர சம்பத் கிடைக்கும். (மல்லையாக்களை நினைவு படுத்திக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல).


தேன் என்றால் - குரல் இனிமை.


கற்கண்டு என்றால் - ஒற்றுமை (கண்டிப்பாக சங்பரிவார்கள் இது மட்டும் செய்ய மாட்டார்கள்)


கரும்புச்சாறு என்றால் - தோஷம் - பிணி நீங்கும்.


சர்க்கரை என்றால் - பகை - எதிரிகள் ஒழிவர். (ஆம், கடவுள் கருணையே வடிவமானவர்).


பழ வகைகள் என்றால் - வியாபார முன்னேற்றம் (பழக்கடைக்காரர் பழங்களை அன்றே விற்காவிட்டால் நட்டம்தான் - பழம் அழுகிவிடுமே)


பஞ்சாமிர்தம் என்றால் - நீண்ட ஆயுள், உடல்பலம், பெறும். (அய்.பி.எல். கிரிக்கெட்காரர்களின் கவனத் துக்கு...)


தயிர் என்றால் - குழந்தைப் பாக்கியம், உடல் வலு (ஸ்டெரிலிட்டி மய்யங்கள் தேவையில்லை).


இளநீர் என்றால் - ராஜயோகம்.


நெய் என்றால் - முக்தி, சுகவாழ்வு.


விபூதி என்றால் - சகல ஞானமும் கைகூடும் (‘நீட்’ பயிற்சிக்கெல்லாம் செல்ல வேண்டாம்).


சந்தனம் என்றால் - குளிர்ச்சி உண்டாகும்.


பன்னீர் என்றால் - சரும நோய்கள் தீரும். (Skin Speciality Click)


ஸ்வர்ணாபிஷேகம் என்றால் - ஆபரணம் அணி கலன்கள் மற்றும் லட்சுமி கடாட்சம். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் தலைக்காவேரி புகழ் ஜெயேந் திர சரஸ்வதி.


இதோ ஆதாரம் பேசுகிறது:


குமுதம்: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல் கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்க ளுக்குக் கடவுளின் மீது உள்ள பக்தி போய் விட்டதா?


ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அநேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடு கிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவ தற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பண மும் - அதிகரித்துள்ளது. ('குமுதம்', 12.9.1996).


மேலும் ஆதாரம் வேண்டும் என்றால் அதே ஜெயேந்திரரையே அழைக்கலாம். காஞ்சிபுரத்தில் 1976 மே மாதம் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசும்போது ஜெயேந்திரர், பக்தி  ஃபேஷனாகி விட்டது. பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” என்று சொல்ல வில்லையா?


சிவனுக்கு இன்னின்ன பொருள்களால் அபி ஷேகம் செய்தால்  இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என்பது கொடுக்கல்  - வாங்கல் பிசினஸ்தானே.



2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...