செவ்வாய் 23 2021

விளம்பரத்தில் வெற்றி நடை போடும் தமிழகம்......!!!!!!!!!!!

 







ஒரு செய்தித்தாளுக்கு முழுப்பக்க விளம்பரம் சராசரியாக 5 லட்சம் வரும், என்றால். தொடர்ந்து 2 மாதம் இப்படி போடுகிறார்கள்.

 8 செய்தித்தாள்களுக்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் வெறும் விளம்பரத்துக்கு மட்டும். இரண்டு மாதங்களுக்கு 24 கோடி ரூபாய்கள் ஆகலாம்.

15 க்கு மேற்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரு நாளுக்கு ஒரு தொலைக்காட்சிக்கு 100 முறைக்கு மேலே...

ஒரு முறைக்கு 2 லட்சம் என்றாலும் 100 முறைக்கு 200 லட்சம் வரும்.

10 டிவி சானல்கள் என்றாலே ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் . இரண்டு மாதங்களுக்கு 1200 கோடிகள்

அனைத்து எப் எம் ரேடியோக்களிலும் ஒரு நாளைக்கு 200 முறைக்கும் மேல்.ஒரு முறைக்கு 5000 ரூபாய் என்றாலும் சானலுக்கு 10 லட்சம். சென்னை கோவை மதுரை நெல்லை திருச்சி என 20 க்கு மேற்பட்ட எப் எம்களுக்கு ஒரு நாளைக்கு 2 கோடி  2 மாதங்களுக்கு 120 கோடிகள்

இது போக யூடியூப், கூகுள் ஆட்ஸ் என குறைந்தது 100 கோடி ரூபாயகளுக்கு மேல் ஆகும். இப்படியாக 2 மாதங்கள் வெட்டி நடை விளம்பரத்துக்கு  மட்டும் கிட்டத்தட்ட 1500 கோடிகளுக்கு மேல். இது அல்லாமல் இவர்கள் அரசு இயந்திரங்கள் அனைத்தையும் இவர்களுக்காக செய்யும் செலவு கணக்கே இல்லை..

இவை அனைத்தும் உத்தேசம் தான்.. உண்மையில் இதை விட அதிகம் இருக்கலாம்.நம் வரிப்பணத்தில் நம்மையே இவர்களுக்கான விளம்பரம் செய்ய வைக்கும் செய்தி அளவே இல்லாதது..

இதெல்லாம் யார் வரிப்பணம்?   

மெத்த படித்தவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகிறார்கள்???

பதில் தாருங்கள்!! நடுநிலையாளர்களே!!!.....பதில் தாருங்கள்   !!!!

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...