திங்கள் 23 2015

அதனால் என்ன? தமிழர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்! ! !

Kathir Nilavan 2 புதிய புகைப்படங்கள் படங்களை இணைத்துள்ளார்
தமிழ்நாட்டில் 55% பள்ளிகளில் ஆய்வுக் கூடம் வசதி இல்லை என்று ஒரு அறிக்கை சொல்லி இருக்கிறது.
அதனால் என்ன?
இங்கே அரசாங்க சாராயக் கடைகளுக்கு 100% பார் வசதி இருக்கிறதே!
படிப்பது முக்கியமா அல்லது குடிப்பது முக்கியமா?. 
மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம் அமைத்தால் அரசாங்கத்திற்கு செலவு.!!
சாராயம் குடிப்பவர்களுக்கு பார் அமைத்துக் கொடுத்தால் அரசாங்கத்திற்கு வரவு.!!!
மாணவர்களுக்கு ஆய்வுக் கூடம் அமைத்து மக்கள் வரிப்பனத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யாமல்,

சாராயம் குடிப்பவர்களுக்கு பார் வசதி செய்து வருமானம் பார்க்கும் ஒரு அதி உன்னத அரசாங்கத்தின் ஆட்சியில் வாழும் தமிழர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். 

வாழ்க தமிழர்கள்..

வளர்க குடிமகன்கள்.. 

வெல்க தமிழ்க்குடிநாடு..

தமிழ்நாட்டை தமிழ்க்குடிநாடு என்று பெயர் மாற்ற வேண்டும்னு கோரிக்கை வைக்கலாம்னு இருக்கேன்.
thanks! -Sanjai Gandhi

17 கருத்துகள்:

  1. //மாணவர்களுக்கு ஆய்வுக்கூடம் அமைத்தால் அரசாங்கத்திற்கு செலவு.!!
    சாராயம் குடிப்பவர்களுக்கு பார் அமைத்துக் கொடுத்தால் அரசாங்கத்திற்கு வரவு.!!!//

    கவலைகிடமான அரச சிந்தனை.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்க்குடிநாடு ஸூப்பர் நண்பரே,,,
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. இந்த கவலைக்கிடமான சிந்தனையை ஒழிப்பதா? வளர்ப்பதா? திரு. வேகநரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. அப்போ தமிழ்குடிநாடு என்றே நம்ம கெஜெட்டில் வெளியிடலாம் திரு. கில்லர்ஜி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. கோரிக்கைக்கு ஆதரவு அளித்த தங்களுக்கு நன்றி! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  6. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. //படிப்பது முக்கியமா அல்லது குடிப்பது முக்கியமா?.//
    - படிப்பவர்களை குடிக்க வைப்பதுதான் முக்கியம்
    "தமிழ்க்குடி"கெட்டநாடு

    பதிலளிநீக்கு
  8. Time to should aware ourself Bro .
    Ithavida mosamaana nelayla Youngsters irukanga . Tamil typing instal pannittu varen ,

    TM+

    பதிலளிநீக்கு
  9. ஜாக்கிரதை ,அரசாங்க ரகசியத்தை வெளியிட்ட உங்க மேல் குற்றப் பத்திரிக்கை தயாராகிறது :)
    த ம 6

    பதிலளிநீக்கு
  10. “வெட்கப்படவேண்டிய செய்தி.” தான் ஐயா....

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. "தமிழ்க்குடி"கெட்டநாடு-- இந்தப்பெயரும் நன்றாகத்தான் இருக்கிறது.திரு. மலரின் நினைவுகள் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. அப்படியா...? அதனால் என்ன?..திரு.பகவான் ஜி அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. இன்றைய காலத்தில் மாணவர்களின் நிலை படுமோசமானதான ஒன்றாக மாறிவருகிறது . பெற்றோர்களின் அளவற்ற சுதந்திரம் , ஆசிரயர்களின் கட்டுப்பாடு முன்போலில்லாமை என அதற்கான காரணங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது .

    நான் என்கண்முன்னாலேயே கண்ட காட்சி .
    இரு பள்ளி மாணவர்கள் (கான்வென்ட் பள்ளி) பேசிக்கொண்டிருந்தனர் .

    'என்னடா ! உங்கம்மா சினைமாடு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்துருக்கா போல ?'

    'ஆமான்டா . சனியன் . வந்து என் உயிர எடுக்கறா '

    என்று பெற்ற தாயையே கிண்டலடித்துக்கொண்டிருக்கிறார்கள் .

    இன்னொருபுறம் ஒரு 11ம் வகுப்பு மாணவன் , போதையில் பள்ளியை கட் அடித்துவிட்டு வந்திருந்தான் . என் தந்தைக்கு மாதம் 60000 சம்பளம் . அம்மாவுக்கு என்னைப்பற்றிய கவலையெல்லாம் கினையாது . என் அக்கௌன்டில் 1 லட்சம் போட்டுவிட்டார்கள் . இருக்கிற பணத்தை எப்படி செலவு பண்றதுனு தெரியல . அப்பப்போ சரக்கு , தேவைப்பட்ட பொண்ணுங்ககிட்டயும் போவேன் . என்று கூறியவன் ஹான்ஸ் எனப்படும் புகையிலையை உருட்டிக்கொண்டே சொல்கிறேன் .

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...