ஞாயிறு, பிப்ரவரி 21, 2021

கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள் பழித்தீர்ப்பார்கள் | caa | mathimara...வழக்கு வாபஸ். யார் வழக்குப் போட்டது. அவர்களேதான். நாதஸ் திருந்திட்டான். யார் சொன்னது? நாதசே சொன்னான். மீனவர்களின் அதிமுக அரசுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம். நான் திமுககாரன் கிடையாது. ஆனால், திமுகவை திமுக காரரை விடவும் தீவிரமா ஆதரிக்கிறேன். ஏன்? அதிமுக திரும்ப வரக்கூடாது என்தபதற்காக மட்டுமல்ல; ஒரு இடம் கூட ஜெயிக்கக்கூடாது என்பற்காகவும்.

தமிழர்கள் ஜல்லிக்கட்டு, சிஏஏ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு என தொடர்ந்து போராடியது அதிமுக அரசுக்கு எதிராக அல்ல. பாஜக அரசுக்கு எதிராகதான். ஆனால், அதிமுக அரசு பாஜக அரசாகவே செயல்பட்டு தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை செய்து வழக்குப் போட்டது. அதைதான் இப்போது திரும்ப பெறுவதாக நடிக்கிறது. பாஜகவைவிட பயங்கரமானது அதிமுக அரசுதான்.

போராடிய மக்களை, சிறுமியை மூளை சிதற சுட்டுக் கொன்ற அதிமுக அரசுக்கும் அதன் முதல்வருக்கும் சூழலியல் தவிர்த்த இடஒதுக்கீடுக்காகவும் சூழலியல் போராளிகள் வலிந்து போய் நன்றி தெரிவிக்கிறார்கள். கனிவோடு நடந்துகொண்டார் என புகழ்கிறார்கள். எப்படி முடிகிறது அவர்களால்? அதிமுக அரசை விட இவர்களை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது. நாளை திமுக அரசு அமைந்தாலும் அங்கும் தனக்கு வேண்டிய ஆட்களைப் பிடித்து இந்த பிழைப்புவாத வண்டியை ஓட்டதான் செய்வார்கள்

தமிழர்கள் பகுதியில் நலத்திட்டங்கள் அறிவிக்கிற ராஜபக்சேவிற்கு நன்றி தெரவிப்பதுபோல், உள்ஒதுக்கீடு, வழக்கு வாபஸ் என அறிவித்த எடப்பாடி திரு பழனிசாமி அவர்களுக்கு போராளிகள் நன்றி தெரவிக்கிறார்கள்.
கருணையுல்ல எடப்பாடி மிஸ்டர் பழனிசாமி.
TO SUBSCRIBE https://www.youtube.com/c/VeMathimara... view_as=subscriber

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக