பக்கங்கள்

தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 04 2021

படித்த..படிக்காத மூடர் கூட்டமே...!!!

 







படித்த படிக்காத மூடர் கூட்டமே!!

 வருகிற தேர்தல்ல  நீங்கள்

செய்யப்போற  சம்பவம்தான்..

தமிழ்நாடு  தமிழ்நாடா இருக்கனுமா.....

இல்ல உத்தர பிரதேசம்மா மாறனுமா.ன்னு.

தெரியப்போகுது ......நாங்க

அதுக்கு மேல.... ன்னா இதுதான்

சண்டையிட்டு சாகப்போறீங்களா....???

மண்டியிட்டு வாழப்போறீங்களா...???

உங்க சாயம் வெளுக்க போகுதடி.....


.

ஞாயிறு 21 2021

கொல்லப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள் பழித்தீர்ப்பார்கள் | caa | mathimara...



வழக்கு வாபஸ். யார் வழக்குப் போட்டது. அவர்களேதான். நாதஸ் திருந்திட்டான். யார் சொன்னது? நாதசே சொன்னான். மீனவர்களின் அதிமுக அரசுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம். நான் திமுககாரன் கிடையாது. ஆனால், திமுகவை திமுக காரரை விடவும் தீவிரமா ஆதரிக்கிறேன். ஏன்? அதிமுக திரும்ப வரக்கூடாது என்தபதற்காக மட்டுமல்ல; ஒரு இடம் கூட ஜெயிக்கக்கூடாது என்பற்காகவும்.

தமிழர்கள் ஜல்லிக்கட்டு, சிஏஏ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு என தொடர்ந்து போராடியது அதிமுக அரசுக்கு எதிராக அல்ல. பாஜக அரசுக்கு எதிராகதான். ஆனால், அதிமுக அரசு பாஜக அரசாகவே செயல்பட்டு தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறை செய்து வழக்குப் போட்டது. அதைதான் இப்போது திரும்ப பெறுவதாக நடிக்கிறது. பாஜகவைவிட பயங்கரமானது அதிமுக அரசுதான்.

போராடிய மக்களை, சிறுமியை மூளை சிதற சுட்டுக் கொன்ற அதிமுக அரசுக்கும் அதன் முதல்வருக்கும் சூழலியல் தவிர்த்த இடஒதுக்கீடுக்காகவும் சூழலியல் போராளிகள் வலிந்து போய் நன்றி தெரிவிக்கிறார்கள். கனிவோடு நடந்துகொண்டார் என புகழ்கிறார்கள். எப்படி முடிகிறது அவர்களால்? அதிமுக அரசை விட இவர்களை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது. நாளை திமுக அரசு அமைந்தாலும் அங்கும் தனக்கு வேண்டிய ஆட்களைப் பிடித்து இந்த பிழைப்புவாத வண்டியை ஓட்டதான் செய்வார்கள்

தமிழர்கள் பகுதியில் நலத்திட்டங்கள் அறிவிக்கிற ராஜபக்சேவிற்கு நன்றி தெரவிப்பதுபோல், உள்ஒதுக்கீடு, வழக்கு வாபஸ் என அறிவித்த எடப்பாடி திரு பழனிசாமி அவர்களுக்கு போராளிகள் நன்றி தெரவிக்கிறார்கள்.
கருணையுல்ல எடப்பாடி மிஸ்டர் பழனிசாமி.
TO SUBSCRIBE https://www.youtube.com/c/VeMathimara... view_as=subscriber





திங்கள் 08 2021

தமிழக தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூக காட்சிகள்

 









நடக்கும் சம்பவங்களும் கிடைக்கும் தகவல்களும் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது.


பாஜக திட்டத்தின்படி...


காட்சி-1

சொத்துகள் முடக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்ட சூழலிலும், தினகரனோடு டெல்லியில் பாஜக தலைவர்கள் பேசிய பின்னணியில் பிப்-7 சென்னை வருகிறார் சசிகலா.


காட்சி-2

அதிமுக கட்சி சார்ந்த நீதிமன்ற வழக்கு விரைவு படுத்தப்படும்.


காட்சி-3

எழுதிக் கொடுக்கப்பட்ட அடிப்படையில் காட்சிகளை நகர்த்துவதற்கும், ஒழுங்கா எங்க சொல்படித்தான் நடக்கணும் என்று ஸ்கிரிப்ட்டை இறுதிப்படுத்துகிறார் பிப்-14 சென்னை வரும் மோடி.


காட்சி-4

சசிகலாவை ஏற்க முடியாது என, திட்டத்தின்படி சொல்லிக் கொண்டே இருப்பார் பழனிசாமி.அவரோடு ஊழல் பெருவெளிச்சத்தில் இருக்கும் மந்திரிகள் உடன் இருப்பார்கள். இது ஏனெனில் ஆட்சிக்கு எதிராக கோப மனநிலையில் உள்ள மக்களுக்கு, இவர்கள் வெளியேற்றப்பட்டு காட்டப்பட வேண்டும் என்பது திட்டம்.


காட்சி-5

அண்ணன்-தம்பிகளுக்குள் சண்டை இருக்கும், மீண்டும் இணைவோம் என்ற ஓபிஎஸ்க்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசனத்தின் படி, ஓபிஎஸ் சார்ந்தோர்  சசிகலாவுடன் இணைவார்கள். இதற்கு முக்கிய காரணம் தேவர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஏற்பாடு மட்டுமே.


காட்சி-6

இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மூலம் தான் இரட்டை இலை கிடைத்தது. மீண்டும் இருவரும் பிரிகிற சூழல் உருவாகுவதால், இரட்டை இலை முடக்கப்படலாம். இல்லையேல் சசிகலாவுக்கு இரட்டை இலை வழங்கப்படலாம். அதிமுகவை பாஜக விழுங்குவது தான் திட்டத்தின் அடிப்படையாக இருப்பதால் இரட்டை இலையை முடக்கவே முனைவார்கள். ஏற்கனவே குக்கர் பொதுச்சின்னமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.


காட்சி-7

காட்சி அமைப்பின்படி கோபப்படுத்தப்பட்ட இபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புண்டு. அதற்கு எம்.ஜி.ஆர்.அதிமுக எனப் பெயர் வைக்கப்படலாம்.


காட்சி-8

சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்பதாலும், தினகரனோ அல்லது ஓபிஎஸ்ஸோ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். இதுவரை செய்யப்பட்ட பின்னணி ஏற்பாடுகளை பார்த்தால் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம்.


காட்சி-9

கவுண்டர் சார்ந்தவர்களில் செங்கோட்டையன் உள்ளிட்டோர் சசிகலா-ஓபிஎஸ் சார்ந்த அதிமுகவில் இணைக்கப்பட்டு சமன் செய்யப்படுவார்கள். முதல்வர் ஓபிஎஸ்- துணை முதல்வர் செங்கோட்டையன் என்ற திட்டமும் உண்டு. 


காட்சி-10

இந்தக் காட்சிகளில் மந்திரிகளுக்கும் வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 8 பேர்  இபிஎஸ் பக்கம் நிற்பார்கள். 15 க்கும் மேற்பட்டோர் சசிகலா-ஓபிஎஸ் பக்கம் நிற்பார்கள். ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட இருவர் நேரடியாகப் பிஜேபிக்கு செல்ல வாய்ப்புண்டு.


காட்சி-11

இந்த சண்டைக்காட்சிகளை மக்கள் பார்த்து ரசிப்பதற்காகவும், தயாரிப்புகள் செய்து கொள்ளவும் தான், பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரம் அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும். 


காட்சி-12

திமுகவை வீழ்த்த சசிகலா என்ற சாக்கடையையும் பயன்படுத்த வேண்டும் என்ற முன்னறிவிப்பின் படி, சசிகலா-ஓபிஎஸ் அதிமுகவுடன், பாஜக, அன்புமணி வழக்கால் மிரட்டப்பட்ட பாமக, பணம் கொடுத்தால் போதும் தேமுதிக, பாஜகவின் கொள்கைகளை ஏற்கனவே பரப்பிக் கொண்டிருக்கும் புதிய தமிழகம், 60 இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தின் படி அறிவுசார் அர்ஜூனமூர்த்தி கட்சி, இன்னும் சில உதிரிகளோடு கூட்டணி ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்தக் கூட்டணி "வழக்கு மிரட்டல் கூட்டணி" என்று  மக்களால் அன்போடு அழைக்கப்படும்.


காட்சி-14

கூட்டணி என்று பெயர் இருந்தாலும் பெரும்பாலான எல்லாக் கட்சி வேட்பாளர்களும், பாஜக சித்தாந்த ஆதரவு மனநிலை கொண்டவர்களே நிறுத்தப்படுவார்கள். ஏன்னா பாஜக உருட்டு அப்புடி.


காட்சி-15

வழக்கு மிரட்டல் கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடையும். ஆனால் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பாஜக வலைக்குள் வந்து சேரும். இதுவே அவர்கள் திட்டம்.


மொத்தத்தில் 2021 தமிழக தேர்தலானது,

வழக்கு மிரட்டல் கூட்டணிக்கும்,

தமிழகம் மீட்போம் கூட்டணிக்கும் இடையே நடக்கும் போராட்டம்.


பாஜகவின் அரசியலை புரிந்து கொண்டால், நடக்கப்போவதை எளிதில் புரியலாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம்..


இறுதியாக,

ஆட்சியை திமுக பிடிக்கிறது.

அதிமுகவை பாஜக பிடிக்கிறது 



செவ்வாய் 17 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -79.....




ஓட்டு போடும்....மனிதர்க்கு..... 

தேர்தல் என்ற பெயரில் தாங்கள்

 இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்



 உங்களின் வரி பணத்தை கோடி

 கோடியாக செலவு  செய்து 

 இனி வரும் தேர்தலிலும்  செலவு

செய்து வீணடிப்பார்கள் என்பதை

தெரிந்து கொள்ளுங்கள்......

நீங்கள் ஓட்டு போட்டாலும்

போடா விட்டாலும் EVM மே

ஒருவரை தேர்ந்தெடுக்கும்..


இனியும் இந்தியா ஒரு

ஜனநாயக நாடு என்று 

உங்கள் ஜனநாயக கடமையை

 ஆற்றுங்கள் என்று ஊதி

பெறுக்கும் செய்தியை

நீங்கள் நம்ம வேண்டாம்


நீண்ட வரிசையில் நின்றாலும்

நீண்ட நேரம் காத்திருந்து

ஓட்டு போட்டாலும் உங்களுக்கு

கிடைப்பது என்னவோ

கையில் கருப்பு மைதான்


பல தேர்தலிலும் ஓட்டு

 போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ

அடக்கு முறை சட்டங்கள்தான்..


நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு

போட்டேன் என்று சொன்னாலும்

இதுவரை மாறவில்லை என்பதுதான்

உண்மை... அதனால்..

உங்கள் ஓட்டுக்கு எந்த

வலிமையும் இல்லை. அப்படியே

இருந்தாலும்  EVM ஆல் 

அந்த வலிமை உங்களுக்கு

இல்லாமல் ஆக்கப்படுகிறது..


ஆளுவதோ அதிகாரி

தீர்மானிப்பதோ அதிகாரி 

 இந்தியா ஒரு ஜனநாயக நாடு

என்று சொல்லிக் கொள்ள

இடையில் நீங்களும் உங்களின்

வாக்கு சீட்டும்......


முடிவு எல்லாம் அவர்கள்

கையில் இருக்கும்போது 

உங்களுடைய வாக்கு

சீட்டு என்ன செய்துவிட முடியும்...

EVMயை எதிர்த்து................





சனி 07 2016

. பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

100% வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.

100% வாக்களித்தால் 100% ஊழல் ஒழியுமா?

இதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் தருமா?

100% வாக்களித்தால் நமக்கு 100%வேலை கிடைக்குமா?

இதற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தருமா?


வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும். இன்னும் தெளிவாக கூறினால் நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!

நேர்மையான தேர்தல் எனக் கூறிக்கொண்டு, அரசியல் தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களை சோதனை போடுகின்ற தேர்தல் ஆணையம், நம்மால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பா? இதன் கேட்பாரில்லாத சர்வாதிகாரம், எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தைத் தரும்?
.நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தலில் நிற்கும் நல்லவர்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?
பெயரளவு போலி ஜனநாயகத்திற்கு கூட இடமில்லாதபடி கிரிமினல்களும், ரவுடிகளும் நிறைந்திருக்கும் இந்தத் தேர்தல் முறையில் நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது?
எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் எல்லாம் எப்படிப்பட்டவை? அ.தி.மு.க – ஜெயலலிதா,சசிகலா மன்னார்குடி மாஃபியா கும்பலின் குடும்பம், தி.மு.க -கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் குடும்பம்,  தே.மு.தி.க -விஜயகாந்த்,  பிரேமலதா, சுதீஷ் குடும்பம், பா.ம.க – ராமதாஸ்,  அன்புமணி, சவுமியா குடும்பம். இவ்வாறு கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகளாக இருக்கின்றன.
நமக்கோ, கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் தேர்தலில் நிற்பவர்கள் பல கோடிகளை சாதாரணமாக செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள். மற்ற கட்சிகளும் ஊழல், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்கின்ற பொறுக்கிக் கட்சிகள்தான். ஆக பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? பேயையா, பிசாசையா?....??????????... சொல்லுங்கள்..!!!!

ndlf-it-boycott-election
நன்றி! வினவு

செவ்வாய் 25 2014

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

”வினவு” வில் வந்த  வாக்களிப்பது கடமையா மடமையா-என்ற பதிவை படித்தபோது தோன்றியது. 

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

“ நாம எல்லாம் இண்டியன்ஸ் தேர்தல் வரும்போது ஓட்டுப்போடனுமில்ல”

 கடவுளுக்கும் அந்த கடவுளின் ஏஜென்டுகளான பார்ப்பனர்களுக்கே ஓட்டு போடுவது எதுக்குன்னே தெரியல.... இதுல  பக்தர்களுக்கு ஓட்டு போடுவது எதுக்குன்னு தெரியவா போகுது. ( ஓட்டு போடங்கன்னு சொல்றவங்களும் ஏதோ தெரியுற மாதிரி பீத்திக்கிறாங்க....)

செவ்வாய் 04 2014

மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள்.

 இருக்கிற எல்லா பத்தரிக்கைகளும் சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்,சாதிவெறி கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களின் மூளையின் சிந்தனையை மழுங்கடித்துவிட்டார்கள். அப்படி மழுங்கடித்துவிட்ட  மூளையை  தேர்தல் வந்தவுடன் ஆளாளுக்கு சிந்திக்க சொல்கிறார்கள் இவர்கள்.

..மழுங்கடிக்கப்பட்டவர்கள் சிந்திக்கதான் முடியுமா??????????????........................

தமிழ்நாட்டில் அதிமுக நடத்துவது ஆட்சி அல்ல. காட்சி, அதற்கு விரைவில் வரப்போகிறது வீழ்ச்சி-அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்---- ------------திமுக பொருளாளர்


ஏழ்மை,வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக.தற்போதைய அட்சியாளர்கள் மதுவை கொடுத்து ஏழைகளின் வாழ்வை சீரழித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மதுவை ஒழிக்க முடியாது.. பணமா? மானமா?பெண்களே முடிவு செய்ய வேண்டும்----------அனைத்து சாதிவெறி சமுதாய தலைவர்-பாமக..


மதுரை மாவட்த்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்களின் பங்களிப்பு இருந்தால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எனவே,பெண்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற,நல்லவர்களை தேர்வு செய்ய சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.------மதுரை மாவட்ட ஆட்சியர்


ஜனநாயக உரிமையை செயல்படத்தாமல் யாரையும் கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. நண்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்----------------------மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்

தேர்தலில் வாக்களிப்பது அனைவரது அடிப்படை கடமை. வாக்காளர்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்காமல் நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்-------------------- குடி அரசு தலைவர்.

வியாழன் 30 2014

வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்..........

இருபத்தியொரு வயதில்
எனக்கு கிடைத்த
உரிமை என்ற
வோட்டை விலைவாசியை
குறைப்பதாக வாக்களித்த
கட்சிக்கு வாக்கு
அளித்தேன்...........

அடுத்த தேர்தல் வரும்
வரை விலை வாசி
குறையவே இல்லை

இருபத்தியாரு வயதில்
எனக்கு  வழங்கிய
உரிமை என்ற
வோட்டை இலஞ்சத்தை
அடியோடு  ஒழிப்பதாக
வாக்களித்த வேட்பாளர்க்கு
என் வாக்கை  போட்டேன்.

அந்த வேட்பாளர்
திரும்பவும் வாக்கு
கேட்டு   வந்த
பின்னும் இலஞ்சம்
ஒழியவே இல்லை.

முப்பத்தியோரு வயதில்
 மீண்டும் கிடைத்த
உரிமையான வோட்டை
 வேலை வாய்ப்பை
பெருக்குவோம் என்று
முழங்கிய தலைவருக்கு
திரும்பவும் என்
வாக்கை பதிந்தேன.

சீக்கிரமாக வந்த
இத்தினியாவது
தேர்தல் முடிந்து
அடுத்தக் கட்சி
நாற்காலி பதவியில்
அமரும்  வரை
 எனக்கு வேலை
கிடைக்கவே இல்லை.

முப்பத்தியாறு வயதில்
தொடர்ந்து கிடைத்த
உரிமையான என்
வோட்டுக்காக........

ஓட்டு வாங்கும் போது
ஓடி வந்து ஏமாத்தி
உத்தமனைப் போல் வாய்ச்
சொல்லில் பறை சாற்றி

சென்றவர்களின் உதிர்ந்த
மயிரைக் கூட   புடுங்க
முடியாது என் ஓட்டால்
என்று  பட்ட அனுபவத்தால்
உணர்ந்து கொண்டேன.

என்க்கு கிடைத்த
வாக்கு  எனும்
உரிமைச் சீட்டால்
பேண்ட குழந்தையின்
மலத்தைக் கூட
அப்புறப்  படுத்த
முடியா யென்பதை
கண்டுணர்ந்தேன்.........

வரும் தேர்தல் என்ன?
எத்தினியாவுது தேர்தல்
என்று பீத்தீனால் என்ன?
என் வாக்குக்கு அதிகாரம்
கிடைக்கும்  வரை..........
.
எவனுக்கும் எவளுக்கும்
அவர்கள் கொள்ளை அடித்து
சுகபோகமாய்  வாழ
 நான் வாக்களிப்பதில்லை
 என்று..முடிவெடுத்தேன்.

நான் வாககு அளிப்பதும்
வாக்கு அளிக்காமல்
இருப்பதும்....... என்து
உரிமை.........



செவ்வாய் 22 2013

வன்னியர் ஓட்டு,அந்நியர்க்கல்ல.புதிய சாதிவெறி கூட்டமைப்பு..அறிவிப்பு.!!!

சாதிக் கூட்டம்
படம். வினவு.

மீண்டும் அணைத்து சாதிவெறித் தலைவர்களையும் கூட்டி ஒருங்கிணைத்து புதிய சாதிவெறி கூட்டமைப்பை தொடங்கி உள்ளார் சாதிவெறியர்

இந்த  புதிய சாதிவெறி கூட்டமைப்பு சார்பாக பழைய முழக்கத்தையே.“ வன்னியர் ஓட்டு அந்நியர்க்கல்ல”  என்பதை தூசு தட்டி மக்களவைத் தேர்தல் பட்டியலை வெளியிட உள்ளார்.

இதனால்.தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். கட்சியை பின்னுக்கு தள்ளி,சங்கத்தை (சாதியை) முன்னுக்கு தள்ளும் வகையில், சங்கத்தின் குரு ஓய்வுஎடுக்கும் புழல் சிறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய சாதிவெறி கூட்டமைப்பின் மூலமாக சாதிவெறித்தலைவர்கள் சிலரை போ்ட்டியிட வைக்கவும்,  முதல்வேட்பாளர் பட்டியலில்  அவர்கள் பெயர்கள் இடம் பெறவும் புதிய சாதிவெறி கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதை. கூட்டமைப்பின் தலைவர் அறிவிக்க உள்ளார்.

எனவே.அந்நியர்கள் எதுக்கும் ஓட்டுப்பிச்சை பாத்திரத்தை பத்திரமாக பாது காத்துகொள்ள எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஞாயிறு 02 2013

தேர்தலை புறக்கணிக்கும் ஒரு நீதிபதி........




..

90 சதம் மக்கள் ஆடுமாடுகளாக வாக்களிக்கிறார்கள். இதனால் இந்தீயாவை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாது.

சாதி,மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களால் நாடு நிர்வகிப்பதால்.ஆடு,மாடுகளைப்போல் வாக்களிக்க விரும்பவில்லை.

நாட்டில் தார்மீக நெறிமுறைகள் இல்லாதபோது.ஊழலை ஒழிப்பேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஊழலை ஒழிக்க முடியாது. 

இதனால் என்னுடைய வாக்குக்கு அர்த்தமில்லாத நாட்டில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போட விரும்பவில்லை என்றார்.உச்சி குடுமி மன்ற முன்னால் தலைமை நீதிபதி......

20 ஆண்டுகள் என்ன 20 நூற்றாண்டே ஆனாலும் ஊழலை ஒழிக்க முடியாது. 

ஓட்டுப்போடும் வாக்காளர்க்கு எந்த உரிமையும் இருக்காது.

இதனால்தான் இந்திய நக்சல்பாரி வழியில்வந்த கம்யூனிச புரட்சியாளர்கள் சொல்கிறார்கள்


புதியஜனநாயக புரட்சியின் மூலமே ஊழலை ஒழிக்க முடியமென்று...........


செவ்வாய் 11 2012

நிஜ வில்லன்... கதாநாயகனாக.................



 குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலிலும் நரவேட்டையாடிய மோடியே  முதல் அமைச்சராக அமருவதற்கு வாய்ப்பும் வசதியும்  பிரச்சாரமும் இருக்கிறது. அதனால்தான அத்வானி,சுஷ்மா போன்றவர்கள் மோடிக்கு பிரதமராக வருவதற்கு தகுதியும் இருக்கிறது என்று தோசையை மாற்றி போட்டு இருக்கிறார்கள்.

அந்த வாய்ப்புகளின் ஒன்றுதான் நிழலை நிஜமாகக் காட்டும் சினிமா..அந்த சினிமாவை காட்டித்தான் தமிழ்நாட்டை  ஒன்று சாகும்வரைக்கும் ஆண்டு மடிந்தது. மற்றொன்று இரண்டாவதாக இருண்டஆட்சி நடத்திக் கொண்டு  இருக்கிறது .

இந்திய சினிமா படங்களில் வில்லன்களாக நடித்தவர்கள் கதாநாயனக மாறியது மாதிரியே... நிஜத்தில் வில்லனாக இருந்து நரவேட்டையாடிய கொலைகாரர்கள் நல்ல மனிதராக.நிழலை நிஜமென்று காட்டப்படுகின்றன என்பதற்க்கான சான்றுகளில் ஒன்று கோலேகிராப்என்ற தொழில் நுட்பத்தில் உருவானமோடியின் தேர்தல் பிரச்சார வீடியோ”.......

கோலேகிராப் என்ற தொழில் நுட்பமானது 3டியின் அடுத்த கட்டம். இந்த டிஜிடல் கேமராவில் மோடி பேசுவதை படமாக்கி திரையிட்டபோது. மோடியே திரையில் நேரடியாக வந்து வாக்காளரிடம் வாக்கு கேட்பது போல் இருக்கும்.

இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக நரவேட்டையாடிய கொலைக்கார மோடிக்காக பயன்படுத்தி உள்ளார்கள். மோடியின் தமிழ்நாட்டு வாரிசுகள்.

குஜராத்தி மொழியில் மோடி பேசியதை படமாக்கி மோடிக்கு திரையிட்டு காண்பித்தபோது மோடியே நம்பமுடியாமல் அசந்து போனாராம். அந்த நர வேட்டையாடிய கொலைக்காரனின் பாரட்டை பெற்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அதன் இயக்குநர்ரும் ஒளிப்பதிவாளரும்.

எல்லாவகை தொழில் நுட்பங்களும் சினிமாநுட்பங்க்களும் ஏழைக்கு 
பயன்பட்டதாக வரலாறு இல்லை. அது கொலைக்காரகளுக்கு கொலைக்கும் கொள்ளைக்குமே பயன்படுகிறது பயன்படுத்தப்படுகிறது.
என்பதே இந்தியாவில் வரலாறு...................


ஞாயிறு 18 2012

திலகமிட்ட நெற்றியுடன் ஒரு போலியின் உள்ளேயும்.....வெளியேயும்..............





அனைத்துலகமும் போலிகளின்
மயம்.....................................அதில்

இந்தியப் போலிகளில்
ஒனறான இடது போலியின்
நெற்றியிலே பொட்டு இட்ட
அரசியல் தலைமைக் குழு
உறுப்பிரானவர். அவர்......

நாட்டை ஆளும்...........
காங்கி...ரசும்..........
ஆளத்துடிக்கும் பார
தீய ஜனதாவும்.........
போலி நாணயத்தின்
இரு பக்கங்கள்......

வெளியில் பார்ப்பதற்கு
வித்தியாசங்கள் இருப்பது
போல்..காட்டிக் கொள்கின்றன.

அவைகள்........................
பணக்காரர்களின் ஏவல்
ஆட்காளாகவே........
செயல்படுகின்றன.

எனவே,..
வாக்கு அளிக்கும்
மக்கள்- அந்த இரு
கட்சிகளுக்கும்- வாக்கு
அளிக்காமல்- வாக்கை
புறக்கணிக்க வேண்டும்

அதோடு,...................
நாடாளுமன்றதுக்குள்
உள்ளேயும்- வெளியேயும்
(நாற்க்காலிக்காக)
போராடி வரும் கட்சிக்கு
வாக்கு அளிக்க வேண்டு
மெனறார்....................

சனி 15 2011

ஓட்டு பிச்சைக்காரர்களின் வேண்டுதல்களும்,பிச்சையிடதாவர்களின் முழக்கங்களும்....

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்லபபடுத்திய
எம்பெருமான் டாக்டரு சு்ப்பிர மணியின்
ஆசி பெற்ற உங்கள் வேட்பாளர் ஆகிய
நான் உங்கள் பாதம் தொட்டு பணிவுடன்
கேட்கிறேன் எனக்கு வாக்கு அளியுங்கள்

14 வயதில்பொதுஉடமை இயக்கத்தில்
பணியாற்றி பல சமூக போராட்டத்தில்
பங்கேற்று 27 முறை இரத்த தானம்
செய்துள்ளேன்.சட்டம் பயின்று மாணவர்
பெருமன்றத்தில் தமிழ் மாநில செயலராக
பணிஆற்றுகிறேன்.உங்களுக்கும் பணி
ஆற்ற எனக்கு வாக்களித்து அமோக வெற்
றியடைய உங்கள் பாதத்தை தொட்டு
வேண்டுகிறேன்.

நாட்டை காப்பது இராணுவம்
நாட்டை ஆளுவது காங்கிரஸ்
முன்னால் இராணுவ வீரன்
ஆனநான் உங்களை காக்க
மக்கள் நல திட்டத்திற்கு நிதி
உதவி பெற உள்ளாட்சியில்
நல்லாட்சி அமைய உங்கள்
பொன்னான வாக்கை கை
சின்னத்திற்கு முத்திரையிடுங்கள்

பெரியார் அணைக்கு குரல் கொடுத்த
விவசாயிகளின் தோழன்.ஸ்டெர்லைட்
நச்சு ஆலையை அகற்றிட்ட காவலர்
தமிழரின் உரிமையை மீட்டெடுக்க
அண்ணன் புரடசி புயல் வைகோ வின்
சின்னத்தக்கு வாக்கு அளியுங்கள்

தமிழகத்தில் உள்ள திராவிடகடசிகளை
ஒழித்து கட்டிட ஊழல் இல்லாத உண்மை
யான நேர்மையான பாட்டாளி மக்கள்
கட்சி வேட்பாளர்க்கு ஓட்டளியுங்கள.

எவர் துணையில்லாமல் மக்களை நம்பி
துணிந்து போட்டியிடும் விடுதலை சீ......
சிறுத்தை வேட்பாளர்க்கு ஓட்டளித்து
வெற்றி பெறச் செய்யுங்கள்

வெற்றிக்கு கை கொடுத்து எம்ஜியார்க்கு
உதவியது போல் எனக்கும் மா. கம்யுனி
கட்சி உதவுவது போல் கேப்டனின் அன்பு
தம்பிமார்களுக்கும் வாக்கு அளித்து
வெற்றி பெற உதவ வேண்டும்

உள்ளாட்சியில் மக்கள் பணி ஆற்ற
மீண்டும் தங்களுக்கு சேவை ஆற்ற
அதிகார ஆணவத்தை ஆட்டம் காண
வைக்க ஆதரிப்... பீர்...உதய சூரியன்

ஏழை எளிய மக்களக்கு இலவச அரிசீ
ஆடு,மாடு,கிரைண்டர்,பேன்,மிக்ஸி
தாலிக்கு தங்கம் தொடர்ந்து கிடைத்திட
15 ஆண்டுகால அராஜக கங்கலிருந்து
உள்ளாட்சீயை மீட்டிட, மக்களின் அடிப
படை பிரச்சினையை தீர்த்து கட்டிட
அம்மாவின் ஆசி பெற்ற நிரந்தர
வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு
அளியுங்கள்

இந்தியாவின் ஊழல் வளர்ந்தது
யாரால்? ஊழலை சமூக குற்றமாக
நினைக்காத மக்களால் அஞ்சு வருஷம்
ஆட்சியில் இருந்தார் நல்லா சம்பாதித்தார்
அஞ்சு வருஷம் திருடினார் என்று சொல்
வதில்லை. கட்சி காரங்க வந்தால்
பெரிய அளவில் மாற்றம் இருக்காது
சுயேச்சைதான் போராடி வருவார்கள்
சுயேச்சை ஜெயித்தால் நல்லது நடக்கும்
ஆகவே,இந்த சுயேச்சைக்கு சுயேச்சையாக
நீங்கள் வாக்களித்தால் நீங்கள் வெற்றி
பெறுவீர்கள்

உங்கள் வாக்கை விற்பனையாக்கதீர்கள்
வாக்காளிக்காமல் இருந்துவிடாதீர்கள்
வாக்களிப்பது நம் ஒவ்வொரு குடி மகனின்
கடமை.அந்தக் கடமையை நிறைவேற்ற
மறவாதீர்கள்.ஊராட்சீ,நகராட்சீ,மாநகராட்சீ
உள்ளாட்சி நிர்வாகங்கள்

உள்ளுரை கொள்ளை அடிக்க
ஒரு ஏற்பாடு உள்ளாட்சி தேர்தல்
ஜனநாயகத்தை பரவலாக்குவது
என்பது பம்மாத்துதான்
ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி
யாராட்சி வந்தாலும் நாறித்தான்
கிடக்குது ஏழைகளின் பொழப்பு
புறக்கணியுங்கள் உள்ளாட்சி
தேர்தலை..............................
தேர்தல் பாதை திருடர் பாதை
நக்சல் கிராம பாதையே
விடுதலைக்கான புரடசி பாதை

செவ்வாய் 11 2011

யார் விவரமானவர்கள்?

ஒருமுறை மூன்று நண்பர்களுக்கிடையே காரசாரமான
விவாதம் நடந்தது.

அதில் ஒருவர் சொன்னார். மக்கள் எல்லாம் முட“டாள்கள்
இல்லை. அவரவர் வளர்ச்சி மட்டங்களுக்கு தக்கப்படி விவர
மாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்கள் கொடுக்கிற இலவசங்களை வாங்கிக் கொண்டு சந்
தர்ப்பகேற்றபடி வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள்.
சுயநலமே.தன் நலம் என்று பிழைக்க தெரிந்தவர்களாகத்தான்
இருக்கிறார்கள் என்றார்.

மற்றொருவர் சொன்னார்.படித்தவர்கள்தான் விவரமாக
இருக்கிறார்கள். படிக்காதவர்கள் இன்னும் அடி முட்டா
ளாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆளுது.விலை
வாசி,அடக்குமுறைதெரியவில்லை. இவர்களை வைத்து
தான் எல்லா ஊழல் கட்சிகளும் தங்களுடைய ராஜபாட்டை
செவ்வனே நடத்துகின்றன.இந்த மக்களும் செக்குமாட்டுத்
தனமா. ஓட்டையும்போட்டுவிட்டு பேசாமல் வெந்ததை
தின்டு விதி வந்தால் சாவோம் என்ற கணக்கில்தான் தங்கள்
வாழ்நாளை ஓட்டுகின்றனர்.இவர்களுடைய அறியாமையை
யும் மடத்தனத்தையும் ஒவ்வொரு கட்சி வேட்பாளாரும்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனவே வேட்பாளர்கள்தான் விவரமானவர்கள் என்றார்.

மூன்றாமவர். வாக்காளர்களில் எல்லோருமே அறிவாளிகள்
கிடையாது.தற்குறிகள்தான் அதிகம்.வேட்பாளர்களில் ஒரு
சிலரைத்தவிர பெரிய அறிவாளிகள் கிடையாது. அவர்களுக்கு
சேவை மனப்பாண்மையெல்லாம் எதுவும் கிடையாது.பதவி
யும் புகழும்தான். சொத்து சேர்ப்பதற்கும் சேர்த்த சொத்தை
பெருக்குவதற்கும்தான் தேர்தலை பயன்படுத்திக் கொள்கி
றார்கள் என்றார்.

இந்த மூன்று பேர்கள் சொல்வதில் எது உண்மை? யார் விவர
மானவர்கள். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்குங்க.
நீங்க என்ன சொல்ல வரீங்க. கொஞ்சம் விளக்கு மாத்துல
விளக்குங்களே!

வியாழன் 14 2011

புருஞ்சா........ புருஞ்சுகோங்கோ.............


அந்தா........இந்தா.........குந்தா.......ன்னு பரபரப்பா இருந்த 
தேர்தலும் கண் இமைக்கும் நேரத்தில வந்துட்டு போயிருச்சு .தேர்தலுக்காக  ஓடி ஆடி உழைத்தவர்களும், சற்றே ரிலாக்ஸ் எடுத்துகொண்டு இருப்பார்கள்.எல்லா கட்சிகாரர்களும் நங்கதான் வருவோம்.நாங்கதான் வருவோம்ன்னு மக்கள் எங்களத் தான் தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு பேட்டியில 
சொல் றாங்க  ஆக்கப் பொருத்துவிட்டு ஆறப் பொறுக்க 
முடியாத கதையாக இருக்காங்க.  ஆனா, ஒன்னு 
மட்டும் நிச்சயம்.

     நாயோ,நரியோ, யாணையோ, யார் வென்றாலும், 
காசு வாங்கியோ, காசு வாங்காமலோ, நேர்மையாக ஓட்டு போட்டவங்களுக்கு எந்தவொரு நன்மையோ, சந்தோஷமோ,
பிரதிபலனோ  ஏற்ப்படபோவதில்லை
காசு உள்ளவர்களுக்கே-கல்வி
காசு உள்ளவர்களுக்கே-வேலை
காசு உள்ளவர்களுக்கே-நீதி
காசு உள்ளவர்களுக்கே-அதிகாரம்
காசு உள்ளவர்களுக்கே-மருத்துவம்
காசு உள்ளவர்களுக்கே-வாழ்க்கை
காசு உள்ளவர்களுக்குத்தான் எல்லாமும்
“காசு இல்லாதவன. கடவுளே ஆனர்லும்,கதவை சாத்தடி
கடவுளுக்கே அந்தக்கதியென்றால் ஓட்டு போட்ட 
சாமனிய மக்களுக்கு எந்க்கதியோ?
“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
காசு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.
புரிஞ்சா...........புரிஞ்சுகோங்கோ.................
....................................................................
புரியலைன்னா...................................புரியலைன்னா!!!!!!
உலாவியில தேடுஙகோ!





புதன் 30 2011

சிறுதுளி பெருவெள்ளம்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே!

வருகின்ற சட்டமன்ற தேர்தல்திருவிழாவில் எந்த கொள்ளைகாரனுக்கு, கொள்ளகாரிக்கு ஓட்டளிக்கப் போகிறீர்கள

“பழையன கழிதலும்,புதியன புகுதலும்”. மாதிரி பழைய சம்பவங்களை மறந்துவிட்டீர்களா?அல்லது பெருந்தன்மையுடன் ஒதுக்கிவிட்டீர்களா? அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் ஓட்டு போடாமல்இருக்க்கூடாது என்றதால் பயந்து விட்டீர்களா? 

 பலர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குழப்பிவிட்டதனால் குழம்பிவிட்டிர்களா? இல்ல எதையுமே கண்டுக்கிறாம நமக்கென்னனு ஒதுங்கியிருக்கீங்களா? இவை எதுமேயில்லாமல் மொத்தமா குடுகுடுப்பைகாரன நம்பி எதிர்பார்த்துகிட்டு இருக்கீங்களா?


நீங்கள் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஆட்சி அதுபாட்டுகு நடந்துகிட்டுதான் இருக்கும்.தேர்தல்திருவிழா வந்தாலும் வராவிட்டாலும் ஆட்சி நடந்துகிட்டுதான் இருக்கும். விலைவாசிகள் மற்றும் எல்லாம் விஷம்போல ஏறிகிட்டுதான் இருக்கும்.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகுமா? ஓட்டுசீட்டு நமக்கு வாழ்க்கை தருமா? ஓட்டு போட்டால்மட்டும் விலைவாசி, பெட்ரோல்,கரண்ட்கட் போன்றவை  குறையுமா?

ஓட்டு போடாவிட்டால் ஊழல், இலஞசம், நாசம், அடக்குமுறை பெருகுமா? நீங்கள் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், எந்தவிலையும், எந்த முறைகேடுகளும் குறையப்போவதில்லை.

நீங்கள் காசு வாங்கி ஓட்டுபோட்டாலும்,காசு வாங்காமல் நேர்மையாக ஓட்டுபோட்டாலும் தேர்தல்திருவிழா முடிந்தபின் வெற்றி பெற்றவரோ அல்லது தோற்றவரோ உங்களை கணவில்கூட நினைத்துப்பார்க்கமாட்டார். நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்துவிடமுடியாது.

“சுயநலமே! தன்முன்னேற்றம்” என்ற இந்தக்காலத்தில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.ஓட்டுரிமை பெற்றதலிருந்து. நீங்களும் மற்றவர்களும் ஓட்டு போட்டுருப்பீர்கள .உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ. இந்த நாட்டு ஏழை மக்களுக்கோ நிம்மதியாக கஞ்சி குடிப்பதறகு வழி கிடைத்திற்க்கா? 

பெற்ற சுதந்திரம் என்கிறார்களே.அந்த சுதந்திரத்தை ஓட்டுவாங்கிப்போன அமைச்சர்களாவது பாதுகாத்து இருக்கிறார்களா? அவர்கள் பாதுகாப்பது பெரும் முதலாளிகளையும், அந்நியர்களையுதான்

நீங்கள் போடும்ஓட்டால் வெற்றிபெற்றகட்சிக்கு சொத்து பெருகும் பேறும்புகழும் வளரும். தோற்ற கட்சிக்கு தோற்றதினால் சொத்தும்பேரும் புகழும் குறையாது.

நீங்கள் ஓட்டு போடாமல் இருந்துவிட்டால், அதற்காக ரோட்டில் பாலாறும் தேனாறும் ஓடாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.ஓட்டு போடாதினால் நீங்கள் சிந்திக்க தொடங்கியிருக்கிறீர்கள். கொள்ளையடிப்பவர்களுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை ஆளுகின்றவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உலகவங்கியிடம் கடன் வாங்கி குவித்தால் நாம் பொறுப்பேற்க்கமுடியுமா? 

 நாம்மட்டும் நேர்மையாளராக இருந்தால் போதுமா? நம் சமுகத்தையும் நேர்மையுள்ளதாக மாற்ற வேண்டும். அதற்கு முதல் படிதான் (ஜயப்பாவின் 18படியல்ல) புறக்கணியுங்கள். ஓட்டு யாருக்கும் போடாதீர்கள.
“சிறுதுளி பெருவெள்ளம்”
-------------------------------------------------------------------
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டுகேட்டு வராதவங்களுக்கு எங்கள்வணக்கம்
எங்கள்வணக்கம் எங்கள்வணக்கம்
ஓட்டு யாருக்கும் போடாதவர்களுக்கு எங்கள்வணக்கம்.
-நன்றி. மக்கள்கலைஇலக்கியகழகம். தமிழ்நாடு

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...