அந்த ஆசிரியர்கள் வேண்டவே வேண்டாம்
ஆசான்...
கற்றுக்கொடுக்காமல் ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட ஆசிரியர் வேண்டாம்,
தேரோட்டி வீட்டில் வளர்ந்ததல் கர்ணனுக்கு பயிற்சி மறுத்த பார்ப்பன ஆசிரியர் வேண்டாம்,
ராமனை தன் விருப்பபடி ஆட்டிவித்த வசிஷ்டர் போன்ற ஆசிரியர் வேண்டாம்,
பரசுராமனிடம் தன் தாயின் தலையை வெட்ட சொன்ன ஆசிரியர் ஜமதக்கணி (அவர் தந்தை) வேண்டாம்,
அம்பேத்கரை பள்ளியில் சாதி காரணமாக மூலையில் அமர்த்திய சாதி வெறி ஆசிரியர் வேண்டாம்,
சேரன்மாதேவி குருகுலத்தில் பள்ளியில் இரண்டு தண்ணீர் பானை வைத்து பார்ப்பனர் பார்ப்பனர் அல்லதோர் பிரிவினை காட்டிய சனாதன ஆசிரியர் வேண்டாம்,
சொந்த பகையை தன் மாணவனுக்குள் புகுத்திய சானிக்கியன் போன்ற ஆசிரியர் வேண்டாம்...
புத்தர் போன்ற ஞானம் பரப்பும் ஆசிரியர் வேண்டும்,
வள்ளுவன் போல் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என வானளந்த ஆசான் வேண்டும்,
அம்பேத்கர் போன்ற அறிவூட்டும் உணர்வூட்டும் அறிவர் வேண்டும்,தன்மானம் அறிவுறுத்தும் பெரியார் வேண்டும்,
லெனினுக்கு மார்ஸ் ஏங்கல்ஸ் போன்ற வழிகாட்டி வேண்டும்,
மார்ஸ் எங்கல்சுக்கு ஹெகல் போன்ற தத்துவ ஆசான் வேண்டும்,
ஸ்டாலினுக்கு லெனின் போன்ற தத்துவ ஆசான் வேண்டும்,
சேவுக்கு பிடல் காஸ்ட்ரோ போல் ஓர் ஆசிரியர் தோழர் வேண்டும்,
மார்தி போல பிடலுக்கு ஓர் கவிஞர் வழிகாட்டி வேண்டும்,
மாவோவிற்கு சென்யாட்சென் போன்ற முன்னோடி ஆசிரியர் வேண்டும்,
பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பள்ளி கல்லூரி நடத்திய சாவித்திரி புலே மீது நாள்தோறும் மலம் கரைத்து ஊற்றிய சாதி வெறியர்கள் இருந்தும் கற்றுக்கொடுத்த சாவித்திரி போல நெஞ்சுரம் கொண்ட ஆசிரியர்கள் வேண்டும்,
சமத்துவம் பெண்ணுரிமை பேணும், விடுதலை உணர்வை விதைக்கும்,
பண்பை வளர்க்கும், அன்பை போதிக்கும் ஆசான்களே வழிநடத்த முடியும்.
[எ.பி.மணி அவர்கள் பதிவு.]
நன்றி: குப்பன் சா
7-9-2020
அருமை...
பதிலளிநீக்கு