| படம்- |
இன்ன நேரத்தில்
இன்ன இடத்தில்
என்னை சந்திக்கவும்
காத்து இருக்கிறேன்
இப்போது வரவில்லை
என்றால் எப்போதும்
என்னை நீ....
சந்திக்க முடியாது.
உடனே வரவும்
என்ற செய்தி
கேட்டு அவன்
பதறி அடித்து
சென்ற போது
அவள் காத்து
இருக்க மனம்
இல்லாமல் போய்
சேர்ந்தாள்.........
எப்படியும் அவளை
சந்தித்தே தீர்வது
என்ற முடிவில்
அவள் வழியில்
அவன்...............
பின் குறிப்பு
அவளை அவன்
சந்தித்து விட்டான்
என்ற நிம்மதியில்
இருவரின் நட்புகள்.
அவனுக்காக காத்திருந்த
அவளையும் சந்திக்க
ஓடோடி வந்த
அவனையும் கழுவிலே
ஏற்றி தம்
சாதி குலப்
பெருமையை நிலை
நாட்டிய விட்ட
பெருமையில் ஆதிக்கச்
சாதி வெறியர்கள்.
ஆக அவள்
வழியில் அவனை
அனுப்பி விட்டார்கள்
ஆக அவள்
வழியில் அவனை
அனுப்பி விட்டார்கள்
.......................................