| படம்- |
மதுரை வந்த காந்தி . எப்படி! அரை ஆடை காந்தியாக மாறி.. ஏழைகளை கவர்ந்திழுக்க தந்திரம் செய்தாரோ...அதே பாணியில் பாகிஸ்தான் நாட்டுத் தலைவரானவர் எம்.ஏ.ஜின்னா..
ஜின்னாவும் மேல் நாட்டு நாகரிக உடைகளை கைவிட்டு, பின்தங்கிய இசுலாமிய மக்களிடையே, இந்திய பாணி உடைகளோடு சென்று கலந்துறவாடினார். சல்வார் வகைத் காற்சட்டையும்,ஹெர்வானியும் அணிந்த ஜின்னா, கீழ்தட்டு இசுலாமிய மக்கள் கூட்த்தில் கலந்து நின்றார். அவசர அவசரமாக கற்றுக் கொண்ட உருது மொழியில் பொதுக்கூட்டங்களில் பேசினார். இவையெல்லாம் மக்கள் தலைவராகும் செயல் நோக்கம் கொண்ட வெளி நடிப்பு என்று தெரிந்திருந்தாலும்..
மதவுணர்வகளைத் தூண்டிவிட்டு இந்து தீவிரவாதி அரக்கனை எப்படி காந்தி உருவாக்கினாரோ, அதே வழியை ஜின்னாவும் பின்பற்றி,“ இசுலாமிய தீவிரவாதக் கொடிய விலங்கை உருவாக்கினார். இவையெல்லாம் ஏழை இசுலாமியர்களிடம் காந்திக்கு இருந்த செல்வாக்கை ஒழித்தது.
பகத்தறிவுவாதிகளாலும்,தீண்டப்படாதவர்களாலும், இசுலாமியர்களாலும் கைவிடப்பட்ட காந்தி, மேல்சாதி இந்துக்களின் தலைவராகவும், பின் இந்து தேசியம் என்று அழைக்கப்படத் தொடங்கிய பார்ப்பனியத்தின் பேச்சாளாராகவும் காந்தி சுருங்கிப்போனார்.
நன்றி.....
Product Description
இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.