மற்றவர்களுக்கு எப்படியோ..
அவருக்கு வந்தால்
எல்லாம் மொத்தமாக
வந்து சேரும்..
நோயில் விழமாட்டார்
விழுந்தால் பலநாள்
எழுந்திரிக்க மாட்டார்
பல நாள் கவனமாக
இருப்பார் அப்படியும்
ஒருநாள் கவனம்
மறந்து படு
அவஸ்தை படுவார்.
சிலர் தலைவலிதான்
பயங்கரம் என்பர்
வயித்துவலி வந்தவர்
வயித்தவலி தான்
மோசமானது என்பார்
இப்படி ஒவ்வொரு
வலியும் அவரவர்க்கு
பிரதானமாக இருக்கும்
சிலருக்கு எல்லாம்
மொத்தமாக வரும்
அந்தச் சிலரில்
இவரும் ஒருவர்
வராமல் வரும்
நோக்காடு மொத்தமாய்
வருவது போல்
செலவுகளும் மொத்தமாய்
வந்துச் சேரும்.
உறவினர் நண்பர்களின்
காதுகுத்து விழா.
பூப்புனித நீராட்டு
விழா.. புதுமனை
புகுவிழா..திருமணவிழா
இதோடு சேர்ந்து
தொழில் செய்யும்
இயந்திரத்தின் ரிப்பேர்
மூன்று டூவீலரின்
பொருள் மாற்று
சர்வீஸ் செலவு
நிரந்தரச் செலுவுகளுடன்
இவைகளும் மொத்தமாய்
வந்து சேறும்...
இவைகளை சமாளிக்க
இவர் வேலை
செய்த கூலியின்
காசு.துட்டு
பணம் மட்டும்
மொத்தமாய் வந்து
சேர்ந்ததாக சரித்திரம்
இல்லை.. ஏனென்றால்.
ஊரான் நாட்டுக்காரன்
மொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....
ஆளுவோர் நாடல்ல!! அவர்கள் வீடு இஸ்டப்படி அள்ளலாம்! இன்னும் அள்ளலாம்???
பதிலளிநீக்குஅள்ளி கொண்டு சுகபோகமாக அனுபவித்து சாகட்டும்..
நீக்குஅருமையாக அள்ளலாம் பலதை என்று அறிந்தவர்கள் .
பதிலளிநீக்குஒரு நாள் சாவோம் என்பதையும் அறிந்திருப்பார்கள் அல்லவா....
நீக்குகேட்கத்தான் நாதி இல்லை நண்பரே...
பதிலளிநீக்குகேட்க நாதி இருக்கிறது..அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்கு பதிலாக..நாம மட்டும் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற சிந்தனை திணிக்்கப்பட்டு இருக்கிறது நண்பரே...
நீக்குவேதனையை வெளிப்படுத்திய விதம் அருமை.
பதிலளிநீக்குநன்றி! அய்யா...
நீக்குஅருமையாக சொன்னீர்கள்,
பதிலளிநீக்குநன்றி! நண்பரே...........
நீக்குஊரான் நாட்டுக்காரன்
பதிலளிநீக்குமொத்தமாய் அள்ளி
செல்ல அனுமதிக்கும்
ஆளுவோர் நாடாக
இருக்கும் போது.....//
காலம் காலமாக இதுதானே இங்கு நடக்குது.....வேதனை...
அதனால்தான்..நொந்து கிடக்கிறார்கள் நண்பரே....
நீக்குவர வேண்டியது வருவதில்லை;வேண்டாதது வருகிறது வண்டி வண்டியாய்
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே.....
நீக்குசிறு தொழிலைக் கூட வாழ விடாமல் கெடுக்கும் அரசின் கொள்கை !மக்களுக்கு நல்லது செய்வதாக பீற்றிக் கொள்கிறது !
பதிலளிநீக்குபீற்றிக் கொள்வதில்தான் முதலிடம்..எல்லா . அரசுகளுக்கும்..
பதிலளிநீக்கு