பக்கங்கள்

தப்பி ஓடிய மூன்று வீரசோழன்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தப்பி ஓடிய மூன்று வீரசோழன்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 05 2014

போலீசின் காதை கடித்து தப்பி ஓடிய மூன்று வீர சோழன்கள்.

படம்www.monstershoot.com














திருச்சுழி அருகே வீர சோழன் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருபவர்  ஏட்டு கண்ணன்.

வீரசோழன்- அபிராமம் சாலை பகுதியில் திருட்டு தனமாக மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. இதன் பேரில் ஏட்டு கண்ணன் தனது டூவீலரில்

வீர சோழன் கிழக்கு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை கடக்க முயன்றார்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் அரசாங்க டாஸ்மாக் போதையுடன் சாலையில் செல்லும் டாஸ்மாக் போதையில்லாத நபர்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதைப் பார்த்த ஏட்டு கண்ணன் அந்த டாஸ்மாக் வீரர்களை தட்டிக் கேட்டார். டாஸ்மாக் போதையில் இருந்தவர்களை உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். ( உங்கள் வீட்டிற்கு போய் வீரத்தை காட்டுங்கள் என்று சொன்னதாக  வீரர்கள் தப்பாக புரிந்து கொண்டார்களோ என்னவோ)

உடனே டாஸ்மாக் போதை விரர்களுக்கு கோபம் வந்துவிட்டது.  இதனால்  ஏட்டுவுக்கும் அவர்களுக்கும் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த மூன்று பேரும், ஏட்டு கண்ணனை சரமரியாக தாக்கினார்கள்.

 மேலும் தங்கள் டாஸ்மாக் வீரத்தை காட்ட எண்ணிய வீரர்கள். ஏட்டு கண்ணனின் காதை கடித்துவிட்டு, அருகில் நின்றிருந்த ஆட்டோவில்
ஏறி தப்பி ஓடி விட்டனர்.

 காயமடைந்த ஏட்டு கண்ணன் கொடுத்த புகாரில், “ஏட்டுவின் காதை கடித்து தப்பியோடிய மூன்று டாஸ்மாக வீர சோழன்களை” வலைவீசி தேடி வருகிறார்கள்.

நினைவில் வந்தவர்கள் -1

 பார்ப்பனப்பெண்  ஆரியமாலாவை  கரம் பிடித்த  குற்றத்திற்காக  கழுவில் ஏற்றப்பட்ட  காத்தவராயன். காத்தவராயன்  காதலித்த  குற்றத்திற்காக  தலைநசங்கி...