செவ்வாய் 02 2016

100க்கு101 புல் அடித்த டாஸ்மாக் தொண்டன்



படம்---


பகலில் பள்ளிகூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடத்தை வீட்டில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டு இருந்தான்  டாஸ்மாக தமிழனின் மகன் ஒருவன்.

வேலை முடிந்து டாஸ்மாக் வாசனையுடன் வந்த அந்த அவனின்  தந்தை மகன் படிப்புக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்று மனைவியின் உத்தரவால் சற்று  தள்ளியுள்ள  இடத்தில் சுவரொருமாக அமைதியாக படுக்க வைக்கப்பட்டான்.

சிறிது நேரம் கட்டையாக கிடந்தவன் படுக்கையில்  அங்குமிங்கும் புரண்டான். பிறகு எழுந்தவன் மகனைப் பார்த்தான்.. மகன் நோட்டீல் எழுதிக் கொண்டு இருந்ததைப் பார்த்தான்.. பிறகு தலையை நிமிர்த்தி வீட்டு முகட்டைப் பார்த்தான். என்னவென்னலாம் செய்து பார்த்தும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை..

தன் மனைவியை தேடினான்.. கானாதால்.. மகனிடம் அம்மா எங்கே என்று கேட்டான்.

மகன் அம்மா... வீட்டுக்கு தண்ணி எடுக்க குழாய்க்கு போயி இருக்குது எனறதும் சட்டென்று எழுந்து மகனுக்கு அருகில் வந்து அமர்ந்தான்

மகன் எழுதுவதை ஆர்வமாக பார்த்த சிறிது இடை வெளியில் மகனுடன் நைசாக பேச்சுக் கொடுத்தான்

“ டேய் மகனே... எங்க ஆத்தா...படிக்கையிலே.......”

உங்க ஆத்தாவா...மகன் அதிர்ந்தான்.. ஏப்பா... உங்க ஆத்தாதான் ..நீங்க சின்னப் பிள்ளையா..இருக்குரப்பவே செத்து பொயிட்டதாக சொன்னீங்களப்பா....”

“ அந்த..ஆத்தா...இல்லீடா.... என்றார் தந்தை.

“ அப்படின்னா ஒங்கப்பா.. வச்சுருந்த ..ஆத்தாவா... என்றான் மகன்”

தந்தைக்கு கோபம் வந்துவிட்டது... படிக்கிற பாயலாடா..நிய்யி... படவா.. வாயக் கழுவுடா.... நான் ஒன்னு சொன்னா...நீய்யி ஒன்னு சொல்ற... பெரியவுங்க ஏதாச்சும் சொன்னா...அமைதியா... கேட்டு  பழகுடா..” என்றார்

“ சரிச்சரி...கோபப்படாதிங்க...... என்னன்னு சொல்லுங்க..” என்றான் மகன்.

“அந்த  ஆத்தா  இல்லடா.... இது வேற  ஆத்தாடா.... இந்த ஆத்தா படிக்கும்போது 100க்கு 100 மார்க்கு வாங்குவாங்கடா..”


“என்னப்பா.. பள்ளிக்கூடமே போகாத ..நீங்க  அந்த ஆத்தா  படிக்கும்போது 100க்கு 100 வாங்குவான்னு ஒங்களுக்கு எப்படியப்பா  தெரியும்” என்று கேள்வி கேட்டான் மகன்.

“ இதுக்குத்தாண்டா.. நா.... எதுவுமே.... சொல்றதில்லே..... அதோ அந்த சுவத்தைப் பார்..... என்ன..பாக்காதடா சுவத்த பார்.... சுவத்தல என்னா இருக்கு..”

“ பல்லி இருக்குதுப்பா...”..

“அ...அ...அதான் அந்த பல்லிதான்டா சொல்லிச்சி..மவனே”

“ அடப் போப்பா... பல்லி சொல்லிச்சி..பட்சி சொல்லிச்சின்னு..என்னை படிக்கவிடாவம கெடுக்கிற.... அம்மாவ கூப்பிடவா..”.   அம்மா   என்று மகன் கூவியுடன்.....

“ சட்டென்று எழுந்து தன் பழைய இடத்தில் வந்து படுத்துக் கொண்டான் அந்த டாஸ்மாக் ஆத்தாவின் தொண்டன்...
.


12 கருத்துகள்:

  1. ஹாஹாஹா இதுல குடிகாரன் யாரு அவுருதானே... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. அடிச்சுவிடு ராஜா ,யார் மார்க் சீட்டைக் கேட்கப் போறாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே கேட்டாலும் காண்பித்துவிட்டுத்தான் மறு வேலைய பாப்பாங்க......

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்