கொலைகாரர் கையில் இருப்பதும் கத்திதான்,மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் மோடி விழாவுக்கு இலங்கை ராஜபட்சி வருகையை பற்றி கண்டு பிடித்து சொன்னது.
| படம் தினகரன். |
அப்போது மண்மோகன் பிரதமர்,
இப்போது மோடி பிரதமர்,
கொலைகாரர் கையிலும் கத்தி இருக்கும்
மருத்துவர் கையிலும் கத்தி இருக்கும்
மண்மோகன் கையில் இருந்த கத்தி-
கொலைகாரர் கையில் இருந்த கத்தி
மோடி கையில் இருக்கும் கத்தி-
மருத்துவர் கையில் இருக்கும் கத்தி,
--கொலைகாரர் கையில் இருக்கும் கத்தியும்,
மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும் ஒன்றல்ல
..ஆக பொன்னாரின் கத்திகள் வேறு வேறாக இருந்தாலும் .
(தமிழர்களின்)வயிற்றை ஒரு கத்தி குத்திக் கொல்லும்,
இன்னொரு கத்தி கீறி கிழித்துக் கொல்லும் இவைதான்
கத்திகளின் வேறுபாடு..