புதன் 01 2011

நீ.....என்ன ஆளு?

அவன் தனியார் கம்பெனிக்கு
வேலைக்கு சென்றான்
கவுஸ் கீப்பராக
பல நாள் வேலை பார்த்தான்
பிரச்சினையில்லை

ஒரு நாள் ஒருவர் கேட்டார்
நீ....என்ன ஆளு என்று.
பட்டென்று சொன்னான்
ஆம்பிள ஆளு என்று.

அது தெரியுது. உன் உடையை
பார்த்தா ஆம்பிள ஆள் என்று
வேலைய பார்த்தா பொம்பள
வேலையென்று. நான் கேட்டது
அது அல்ல. என்றார்.

மீண்டும் கேட்டார்
நீ...என்ன வர்ணம் என்று
சட்டென்று சொன்னான்
கருப்பு என்று.

கிறுக்கனா நீ...என்ன சாதின்னேன்.
அவன் சிரித்தான்
ஏன் சிக்கிறாய் என்றார்
இல்லே,முதலிலே கேட்டு
இருந்தால் சொல்லியிருப்பேன்ல

எடுத்த எடுப்பிலே கேட்கக்கூடாது
அது நாகரிகமில்லே எனறார்

மீண்டும் அவன் சிரித்தான்
என்ன சாதின்னு கேட்பது
மட்டும் நாகரிகமா?

உனக்கு உன் சாதியை
சொல்வதற்கு தயக்கமா?

இல்லே,இந்த வேலைக்கு
மேல் சாதிக்காரங்க வருவாங்களா?
என்ற சங்தேகம்.

எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே? என்றார்.

ஆமாமா,எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே என்றான்.

மொசைக்தரையை பளிங்காக்கிய
துடைப்பத்தை உதறும்போது
தண்ணிர் அவர்மேல் துளியாய்
பட்டுவிட்டது.

அவர் முகம் சுளித்தார்,முறைத்தார்
சுத்த இங்கிதம் தெரியாதவன் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்