இந்து மதத்தில் சாதி மாற முடியுமா? -தலித் முரசு புனித பாண்டியன்|STRONGTEA
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி 27 2021
வெள்ளி 24 2017
சாதி இழிவை போக்க மறுக்கும் காவிகளின் இந்தீயா..
புல்லட் ரயில்
விடும் புல்லட்
பாண்டியின் ஆட்சியில்
செவ்வாய் கிரகத்துக்கு
ராக்கெட் அனுப்புவதோடு
அந்த ராக்கெட்
செவ்வாய் கிரகத்திற்கு
போன உடன்
ராக்கெட் ஆயி
போவதற்கு கழிவறை
கட்டி அதை
படமெடுத்து ராக்கெட்
பறக்கும் படத்தோடு
காட்டி தம்மட்டம்
கொள்வார்கள் காவிகள்
ரயில் வண்டி
நிலையங்களில் வை-பை
புகுத்தி விட்டதாக
மார்தட்டி கொள்வார்கள்
ஆனால்..அந்தநாட்டின்
மலக்குழிக்குள் இறங்கி
மனித மலத்தை
அள்ளும் மனிதனை
காக்க மட்டும்
தொழில் நுட்பத்தை
புகுத்த மாட்டார்கள்
ஏன்? என்றால்
மலம் அள்ளும்
சாதி ஒழிந்துவிடுமாம்........
சனி 04 2015
…ஆதலினால் காதல் செய்!
| படம்-வி-னவு |
தோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!
சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!
வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!
கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!
அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.
பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!
– துரை.சண்முகம்.
* (திவ்யா ; தர்மபுரி நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து மணமுடித்த வன்னியப் பெண்)
______________________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
_____________________________________
_____________________________________
வியாழன் 27 2014
சாதியை கேட்டதால் சூடு வாங்கிய பேக்கரி மாஸ்டர்...
| படம்-www.a2ztamilnadu.com |
முகப்பில் பேக்கரி ஸ்வீட் கடையும் பின்னால் பேக்கரி தயாரிப்பு தொழிலகமும் நடத்தி கொண்டு வந்த முதலாளியின் முன் மாடசாமி அழைத்து வந்த பத்தொன்பது வயது நிறைந்த கணபதி மரியாதையுடன் நின்று கொண்டு இருந்தான்
அய்யா, இந்தப் பயல்தான் நான் சொன்ன பையன் இவனுக்கதான் வேலை தங்களிடம் வேலை கேட்டேன் என்றார் மாடசாமி.
மாடசாமி சுட்டிக்காட்டிய பையனை, பேக்கரி முதலாளி பார்த்துக் கொண்டே, உள்ளே ஒரு பையனை வர வழைப்பதற்க்காக , கடையிலிருந்த அழைப்பு மணியை அடித்துவிட்டு.... பணிவாக நின்று கொண்டிருந்தவனிடம் பெயரைக் கேட்டார்.
“பேரு..என்னப்பா”....
”கணபதி ங்க சார்,.........
“எந்த வேல கொடுத்தாலும் செய்விய்யாப்பா”...???
“ ..எந்த வேல கொடுத்தாலும் செய்வானுங்க” என்றார் மாடசாமி,
மாடசாமி சொல்வதை கேட்டப் பிறகும் கனபதியை கேட்டார்.
“என்னப்பா.......... செய்வீய்யா”........
“ எந்த வேலையின்னாலும் செய்வேன் சார்”.......
“வேலைக்கு ஒழுங்கா..வந்துடனும். மாடசாமி....க்காகத்தான் உன்னை வேலைக்கு சேர்த்திருக்கேன். புரியுதா ” என்றார் முதலாளி.
“அவரு பேருக்கு பங்கம் வராம”..”நான் வேல பார்க்குறேன் சார்”..என்றான் கணபதி.
உள்ளேயிருந்து கனபதி வயதுடைய உழைப்பாளி ஒருவன் வந்து நின்றபோது கனபதியை சுட்டிக்காட்டி அவனை உள்ளே அழைத்துச் செல்ல பணித்தார்.. கணபதி மாடசாமியிடம் சொல்லிவிட்டு , வந்த பையனைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.
பேக்கரி முதலாளி, சில ஸ்வீட் அயிட்டங்களை பையில் போட்டு மாடசாமி கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.
உள்ளே வந்தபோது பத்து பேருக்கு மேல் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தார்கள். புதிதாக வேலைக்கு வந்தவனை எல்லோரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்கள் வேலையை கவனிக்கத் தொடங்கினார்கள்.
ஒவ்வொரும் வேலை செய்வதை கவனித்தபடி நின்று கொண்டு இருந்த கனபதியை அழைத்து வந்தவன். கனபதியை ஒரு தட்டு தட்டி வா... என்று சைகையால காட்டிவிட்டு முன்னே சென்றான்.
பின்னே சென்ற கணபதி, “பன், ரொட்டி தயார் செய்யும் சூட்டு அடுப்பங்கரைக்கு அருகில் வந்து நின்றான். அங்கு நீண்ட கரண்டியால் சூட்டு அடுப்புக்குள் இருந்து பன் அடுக்கி வைக்கபட்டு தட்டுகளை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தவரிடம் விடப்பட்டான்.
“மாஸ்டர் அண்ணே, முதலாளி உங்களிடம் அழைத்துச் செல்லச் கூறி” கணபதியை சுட்டிக் காட்டினான்.
மாஸ்டர் அண்ணன் குட்டையாகவும் கட்டையாகவும் இருந்தார். அடுப்பக்கருகில் இருந்தாலும் கருத்துப் போகாமல் சிவப்பாகவே இருந்தார்.
மாஸ்டர் அண்ணன். கனபதியைப் பார்த்தார்.
“பேரு என்னடா”????
“கனபதி....ண்ணே.”.......
“யாருடா........ ஒன்ன கொண்டு வந்து விட்டா”.....???
“மாடசாமி, அண்ணண்ணே ”
“ யாருடா”....?? மாடசாமி, என்றபடி மாவைப் பிசைந்து கொண்டு இருந்த உதவி மாஸ்டரைப் பார்த்துக்கேட்டார்” மாஸ்டர் அண்ணன்..
முதலாளி மாஸ்டரிடம் வருவதைப் பார்த்ததும்,“ கனபதியை காட்டிப் பேசினார் மாஸ்டர். முதலாளி சொன்னதும் .கார்பரேசனில் வேலை பார்க்கும் மாடசாமியா.... என்று தெரிந்து கொண்டார். முதலாளியின் முன்னே கணபதியிடம் கேட்டார் மாஸ்டர்.
“ஏலே... மாடசாமி சொந்தக்காரா..”???
“ இல்லேண்ணே..... தெரிஞ்சவர்”
“ முதலாளிய பார்த்து, சரிங்க அண்ணாச்சி”....என்றார் மாஸ்டர்.
“ முதலாளி, கணபதிய பார்த்து சொன்னார். மாஸ்டர் சொல்றத கேட்கனும் என்று விட்டு ” நகர்ந்தார்.
முதன்முதலாக வேலைக்கு சேர்ந்த கனபதிக்கு எடுபிடி வேலை கொடுக்கப்பட்டது. டீ வாங்கி வரவும், டீ டம்ளரை கழுவி வைக்கவும், மற்றவர்கள் ஏவும் வேலைகள் மட்டும் கொடுக்கப்பட்டது. கனபதியும் ஏவுன எல்லா வேலைகளையும் செய்து வந்தான். சில வேலைகளில் தப்பாய் செய்தபோது மாஸ்டரிம் திட்டும் வாங்கிக் கொண்டான்.
இப்படியாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிவிட்டது. பேக்கரி கடைக்கு வேலைக்குச சேர்ந்தால், அங்கு வேலை செய்பவர்களுக்கு நன்றாக திண்ணக் கிடைக்குமென்று தன் நண்பர்களும், வேலைக்கு சேர்த்துவிட்ட மாடசாமி அண்ணனும் சொல்லக் கேட்டு இருந்தான். ஆனால் வெலைக்கு சேர்ந்த மறு நாட்களிலே புரிந்து கொண்டான் அவர்கள் சொன்னதெல்லாம் அத்தனையும் பொய் என்று....
ரொட்டி.பன், பட்டர்பன், பிஸ்கட், பப்ஸ் போன்றவற்றின் வாசனைதான் பிடிக்காலாமே ஒழிய ருசிக்க முடியாதுன்று.. ருசிக்க கொடுத்து வைத்தவர்கள் மாஸ்டரும், முதலாளியும்தான்.
உடைந்துவிட்டதை கூட திண்ண முடியாது மாஸ்டர் சூடு போட்டு விடுவார்.
காலையில் எட்டு மணிக்கு வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு புறப்பட முடியும்.. வீடு வந்து சேர்வதற்குள் பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ஞாயிற்று கிழமை ஒருநாள்தான் விடுமுறை. சில நாட்களில் அந்த விடுமுறையும் பறி போய்விடும். ஆனால் மாஸ்டர்க்கும்,மற்றும் சிலருக்கும் அப்படியில்லை. மாஸ்டர் காலையில் வந்தால் மதியம் சாப்பாட்டுக்கு செல்பவர் நேரம் கழித்து புத்தம் புதிதாய் வருவார். சில நாட்களில் வராமலே இருப்பார். சில நாட்களில் காலையில் வராமல் மாலையில் வந்து பத்து மணிக்கு மேல் வேலை செய்வார். அந்த நாட்களில் மாஸ்டர் சொல்லும் நேரத்தில்தான் வீடு செல்ல முடியும். அப்படி நேரங்கழித்து வீட்டுக்கு சென்றால் மறு நாள் காலையில் எட்டு மணிக்குப் பதிலாக ஒன்பது மணிக்குவர சலுகை காட்டப்படும்.
மூன்று வாரத்திற்கு மேல் வேலை செய்ததால் மற்ற எல்லோரிடம் பழக்கம் ஏற்ப்பட்டது. காலையில் வந்தவுடன் எந்தெந்த வேலை செய்யவேண்டும். மாஸ்டர்க்கு உதவியாக என்னென்ன பொருட்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது.
காலையில் சரக்குகளை எடுத்துக் கொண்டு லைன்க்கு செல்பவர்களுக்கு வேண்டிய சரக்குகளை எடுத்து வைத்து பட்டர் பன்னில் கிரிம் தடவ வேண்டிதில் சீனி மாவு மற்றும் கத்தி முதலியவற்றை வைத்துவிட்டு. மாஸ்டரின் வருகைக்காக சூட்டு அடுப்பை உதவி மாஸ்டருடன் மற்றும் சிலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அந்த நேரங்களில் முதலாளி சொல்லும் வேலைகளையும் செய்து முடித்துவிடவேண்டும்
மாஸ்டர் வந்துடவுடன் சூட்டு அடுப்பு அனலுடன் மாஸ்டர் மனம் கோனாமல் நடந்து கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்யாதவர்களை மாஸ்டர் திட்டுவார். சில நேரங்களில் அவர்களின் சாதியைச் சொல்லித் திட்டுவார். அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். மாஸ்டர் கெட்ட வாரத்தைகளாலும், சாதியச் சொல்லித் திட்டுவதும். கனபதிக்கு பிடிக்கவில்லை. புதிதாய் வந்த பயல் என்று திட்டாமல் இருக்கிறார் நாளைக்கு நம்மையும்“ இப்படித்தானே திட்டவார். என்று நிணைத்தான்.
கணபதி மாஸ்டர் சொன்ன ஒரு வேலையைச் செய்ய சுனக்கம் காட்டியபோது திட்டி தீர்த்துவிட்டார். அப்போதுதான் கனபதியின் சாதியைப் பற்றிக் கேட்டார்.
“டேய், கணபதி...நீ என்ன சாதிடா...”?????
“ அப்படின்னா.....என்னாண்ணே..”......???
“ஏய,........ஏங்கிட்டயே.... ஓ..ன் ரூட்ட காட்டூறீயா... தொலச்சு பிடுவேன்னு ”உன் சாதிய சொல்றா..நாயே...!!!”
“ அண்ணே .என்க்கு சாதியே இல்லேண்ணே....”.....
“ அப்போ....நீ சாதி கெட்ட பயலாடா”.........
“ அதுவும் எனக்கு தெரியாதுண்ணே”......
“மாஸ்டருக்கு , கோபம் வந்தது.. போடாங்......... என்றபடி கெட்டவார்த்தை மெதுவாக சொன்னார்.
உதவி மாஸ்டரைப் பார்த்து “பய..நம்மல கேனையன்னனு நெணைச்சுகிட்டான் ”.....
“ஏடே....... சாதியே இல்லாதவன் எவனுமில்லடா....இந்த நாட்டிலே.... தேவடியாளுக்குகூட சாதி இருக்குடா” வெண்ணெ..... வானத்திலிருந்து வந்தவன் மாதிரி சாதியே தெரியாதுன்னு நடிக்கிற... சூத்துல சூடு வச்சுடுவோம்டீ..” ஒழுங்கா சாதியச் சொல்லு” என்றார் உதவி மாஸ்டர்.
அண்ணே. “ நிஜமாண்ணே... நான் என்ன சாதின்னெ எனக்கு தெரியாதுன்னே”..
“ அடங்கொக்கா, ஓன் நடிப்ப எங்கிட்ட காட்டாதிடீ..” ஒழுங்கா..நீ என்ன சாதின்னு சொல்லிப்பிடு,
“என்னண்ணே, உன்மையைச் சொன்னா,...? நடிக்கிறேன்னு சொல்றிங்க....” என்னப் பாத்தா எந்தச் சாதின்னு ஒங்களுக்கு தோனுது”
“ங்கோத்தா.... அது தெரிஞ்சா... நான்.ஏண்டா ஒங்கிட்ட கேட்கிறேன்.,என்றார்.
மாஸ்டர்
மாஸ்டரும்,உதவி மாஸ்டரும் மற்றவர்களும், கணபதி என்ன சாதின்னு . சொல்லச் சொன்னார்கள்,
“ தான் என்ன சாதியின்னு தெரிஞ்சக்கமா இவிங்க விட மாட்டோங்கே போலிருக்கே” என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தான். மாஸ்டர் திரும்பவும் கேட்டபோது.. எங்க வீட்டுல கேட்டு வந்து சொல்றேண்ணே என்று அன்றைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
மறுநாள். மாடசாமி அண்ணன பார்த்து.. சொன்னபோது , அவிங்க என்ன சாதிடா ” என்று கேட்கச் சொன்னதோடு....அங்கு எந்தச் சாதிக்காரன் அதிகமாக இருக்கானோ.. அவன் சாதிய சொல்லுடா...என்றார்.
மறு நாள் வந்தபோது, மாஸ்டர் வருவதற்கு முன்னே, வேறு ஒரு அண்ணன் கேட்டான்.
“ என்னடா. நீ என்ன சாதின்னு கேட்டு வந்தியா...”???
“ ஆமாண்ணே...... நான் சொல்வதற்கு முன் நீங்களெல்லாம் என்ன சாதின்னு சொன்னத்தான் , நான்.. என்ன சாதின்னு சொல்வேன்”
“ கத அப்படி போகுதா..... யாரும் சொல்லேன்னா... நீ சொல்ல மாட்டியாக்கும்”.
“ஆமாண்ணே”
“என்ன ஓமாண்ணே”.. மாஸ்டர் வரட்டும்டீ”....
“மாஸ்டர் வரும்போதே...முதலாளி பார்த்துவிட்டு வந்தார்.. வந்தவுடன் எதுவும் பேசாமல் வேலையை தொடர்ந்தார். வேலையின் இடையேதான் மற்றவர்களிடம் பேசினார். அப்பொழுது நாய் சும்மா இருந்தாலும் நாய் வாலு சும்மா இருக்காது என்பது மாதிரி. வேறு ஒரு அண்ணன் கணபதி சாதியப் பத்தி கிளப்பிவிட்டான்.
மாஸ்டர். கணபதியிடம் என்னடா.... கேட்டீயாடா என்று கேட்டபடி ரெட்டிய எடுக்க பயன்படும் சூடாகியிருந்த கரண்டியின் முனையை இலேசாக கனபதியின் கையில் படும்படி செய்தார். சிறிது சூடு பட்ட கனபதி கைகளை உதறியபடி .... அண்ணே..... என்னண்ணே........ என்றான்.
“ இது கொஞ்சோனு சூடு... பெருசா வச்சா..தோலு வெந்து போகும் எப்படி வசதி ” என்றார் மாஸ்டர்.
மாஸ்டரை முதலாளி கூப்பிடுவதாக ஒருவன் வந்து சொன்னதும், கரண்டியை கணபதி கையில் கொடுத்துவிட்டுச் சென்றார் மாஸ்டர். உதவி மாஸ்டரோ மாவை பிசைந்து கொண்டு இருந்தார்.. கரண்டியை வெளியே எடுக்காமல் அடுப்புக்குள்ளேயே வைத்திருந்தான்.
மாஸ்டர் வந்தவுடன். ஏற்கனவே தயாராகி வைத்திருந்த அயிட்டங்களை தூக்கி பசங்களிடம் கொடுத்து கொண்டு இருந்தார். ... அடுப்புக்கு உள்ளே இருந்த தட்டுகளை எடுக்குமாறு கனபதியை திட்டினார். பதட்டத்தில் தட்டுகளை வெளியே எடுத்தவன். கடைசியாக இருந்த தட்டுகளை குனிந்து எடுத்துக் கொண்டு இருந்த மாஸ்டர் முதுகில் மேல் தவறவிட்டான்.
சூடு பட்ட மாஸ்டர் ஆ.வூவென கத்தி கணபதிய அடிக்க பாய்ந்தார். கணபதி சூட்டு கரண்டியை போட்டுவிட்டு வேறு பக்கம் ஓடி பதுங்கிவிட்டான். முதலாளி மாஸ்டரின் சத்தம் கேட்டு ஓடிவந்தார் . உதவி மாஸ்டர் கணபதி முதுகில் மாவு கையோடு ஒரு அடி விட்டு, மாஸ்டரை தூக்க ஓடினார்.
சிறிது நேரத்தில்பேக்கரி தொழிலகமே அல்லோல்பட்டது. மாஸ்டர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்.. ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு முதலாளி கணபதியை திட்டி ரெண்டு போடு போட்டார்.
கணபதி தவறவிட்டுவிட்டான் என்று பார்த்தவர்களில் சிலர் சொன்னதும் முதலாளி உதவி மாஸ்டரை திட்டினார்.
“இவன் வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம் கூட ஆகல..அதுக்குள்ள இவன்கிட்ட ஏன்டா கரண்டிய கொடுத்து எடுக்கச் சொன்னிங்க”..என்று திட்டினார்.
வெளியே செல்லும் லைன்மேன் சொன்னார்.இதுக்கு முன்னாடி, கனபதி நல்லாத்தான் வேலை செய்தான் அண்ணாச்சி.... இன்னிக்கு பரபரப்புல விட்டுட்டான் அண்ணாச்சி என்று சொன்னதும் கனபதி மேல் இருந்த கோபம் முதலாளிக்கு சற்று குறைந்தது.
அன்று எல்லோரிடமும் திட்டும், அடியும் வாங்கியும், நாள் முழுவதும் சாப்பிடாமல் வந்த சோர்வும், பயத்தால் வந்த கலக்கமும். தெரியாமல். அன்று அவனது மனம் புத்துணர்ச்சியாக இருந்தது
வியாழன் 20 2014
சாதிவெறியர்களின் வக்கீரமான கொடூரங்கள்................
![]() |
| ta.wikipedia.org - |
பெண் நிழலில் வாழ்ந்து போ…
காவி மதவாத கும்பல்கள் நம் எதிரிகள்.
கொஞ்சமாவது சுயமரியாதை என்பது இருந்தால்...
இந்த கும்பலுக்கு வாக்களியாதீர்கள்...
தமிழக மண்ணில் வேர் பாய்ச்ச விடாதீர்கள்.
=========================================
எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.
இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?
நானும் என் அப்பச்சி (தாத்தா)துண்டுகள் கட்டி திரிந்ததை பார்த்தவன் !! நானும் சாதி கொடுமையால் சில உயர் சாதி இல்லத்தில் சிரட்டையில் தண்ணிர் குடித்தவன் !! இந்த நிலையை மறந்து, படித்தோம், சம்பாதிக்கிறோம் என்பதால் வரலாறை மறக்கலாமா ? மீண்டும் இந்த கொடுமை தலை தூக்கிட மதவாத கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் !!
நன்றி : Marshal Nesamony
கொஞ்சமாவது சுயமரியாதை என்பது இருந்தால்...
இந்த கும்பலுக்கு வாக்களியாதீர்கள்...
தமிழக மண்ணில் வேர் பாய்ச்ச விடாதீர்கள்.
=========================================
எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.
இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?
நானும் என் அப்பச்சி (தாத்தா)துண்டுகள் கட்டி திரிந்ததை பார்த்தவன் !! நானும் சாதி கொடுமையால் சில உயர் சாதி இல்லத்தில் சிரட்டையில் தண்ணிர் குடித்தவன் !! இந்த நிலையை மறந்து, படித்தோம், சம்பாதிக்கிறோம் என்பதால் வரலாறை மறக்கலாமா ? மீண்டும் இந்த கொடுமை தலை தூக்கிட மதவாத கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் !!
நன்றி : Marshal Nesamony
பெண் மக்களை மேல் சட்டை கூட அணிய விடாமல் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க வெறிக்கும் சாதிவெறிக்கு. உதாரணம்தான் மேலே காணும் படம்.
சாதிவெறி வாசிகள் ரெம்பவும் கொடூர குணமும் வக்கிர எண்ணமும் கொண்டவர்களாகத்தான் வெ்வவேறு வடிவங்களில் இன்னமு்ம் இருக்கிறார்கள.
வெள்ளி 20 2013
மாடு தின்னும் புலையா.......... உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா.....-? கேட்கிறது ஒரு அறிக்கை
| inioru.com |
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி சம்பத் கமிசன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையானது ஜெயா ஆட்சியின் தேவர் சாதிவெறி பாசத்தை தோலுரித்து காட்டிவிட்டது.
“மாடு தின்னும் புலையா...........உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்று காலம் காலமாக ஆதிக்கச் சாதியினரால் கேட்கப்பட்ட ,அதே குரலைத்தான் சம்பத் கமிசனும் எதிரோலித்திருக்கிறது.
மேலும் படிக்க.. புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 இதழை பாருங்கள்.
வியாழன் 03 2011
தீபாவளி கொண்டாடிய டாஸ்மாக் குடிமகன்களும்,சாதியை கேட்ட உதவி ஆய்வாளர் போலீசும்
தீபாவளி தீபாவளின்னு தீபாவளியை புத்தாடை உடுத்தி வெடி வெடித்து மத்தாப்பு கொளுத்தி பொரும்பாண்மை மக்கள் மக்கள் கொண்டாடி இருந்திருப்பார்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி யிருப்பார்கள் அதில் டாஸ்மாக் குடிமக்களும் தீபாவளியை கொண்டாடி யிருப்பார்கள்
தீபாவளியை கொண்டாடாமல் புறக்கணித்த சிறு பாண்மையினருள் நானும் ஒருவர். என் தெருவில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு டாஸ்மாக குடிமகன்கள் கொத்தனார் வேலை பார்க்கிறார்கள். அண்ணன் தம்பிகள் இருவரும் நான் வீட்டில் இல்லாத தீபாவளியன்று என் வீட்டு சிமெண்ட் தண்ணீர் தொட்டி, பட்டியக்கல்,ஒதுங்குவதற்க்காக தட்டியால் கட்டப்பட்ட மறைவிடம் போன்றவற்றை நாசமாக்கி எனக்கு வலியை ஏற்படுத்தி னார்கள ..
தண்ணீர் தொட்டியை சுக்கு சுக்கலாக உடைத்தும் பட்டியக்கல்லை பெயர்த்து எடுத்தும் மறைவிடத்தட்டியை பிய்த்து எறிந்தும் ஒளிவு மறைவற்ற சுத்தமான
தமிழ் வார்த்தைகளால் அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் ஏகவனத்தில் வசைபாடியும் என்னை குறிப்பிட்டு,சுத்த ஆம்பிளையென்றால் வெளியே வாடா,நான் இல்லாததை தெரிந்துகொண்டு வீர வசனம் பேசியும் அன்றை தீபாவளியை ரெம்ப ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார்கள். தனியாக இருந்த என் மருமகளும் பேத்தியும் பயந்து போய் வீட்டிற்குள முடங்கிவிட்டனர்.
டாஸ்மாக் குடிமகன்களின் தீபாவளி கொண்டாட்டம் சற்று தணிந்த பின் தெருவின் நான்கு ரோட்டின் சந்திப்பில் அம்பேத்கர் சிலைபாதுகாப்புக்கு இருந்த போலீசிடம் என்மருமகள் இரு டாஸ்மாக்களின் தீபாவளி கொண்டாட்டத்தைப் பற்றி புகார் கூறியபோது, பாதுகாப்புக்கு வெளியில் நின்ற போலீசும் வேனுக்குள் இருந்த போலீசும் புகார் மனு எழுதி கொடுத்தால்தான் நாங்கள்வருவோம் என்றனர். போலீஸ் ஸ்டேசனில் போயி சொல்லுமாறும் ஸ்டேசனிலிருந்து சொன்னால்தான் நாங்கள் வருவோம் என்றனர்.
இந்த விபரத்தை செல்போனில் எனக்கு தெரிவித்தவுடன். 100க்குபோன் அடித்து
சொல்லுமாறு கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்த மருமகனிடம் சொல்லிவிட்டு அடைமழையாய் பெய்த பெருமழையில் நனைந்தபடி போலீஸ் ஸ்டேசனுக்குஸ்கூட்டியில்சென்றேன்.செல்லும்வழியின்பாதியிலே தெப்பமாக முழுவதும் நனைந்துவிட்டேன்.
ஈரத்துடன் நெடு நேரமாக இருந்ததால் கை விரல்கள் பெருத்து பற்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. மழையும் பட் பட்டென்று தலையில் அடிக்க,தீபாவளியன்று உலக அதிசியமாகஇரவு 7மணியளவில் திறந்திருந்த பெட்டிக்கடையின்முன வண்டியை நிறுத்திபுகார் மனு எழுத பேப்பர் வாங்கினேன்..50பைசா இல்லாததால் பேப்பர்க்கு நனைந்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன்.சில்லரை இல்லையென்று பேப்பர் கொடுக்க மறுத்தார்.
பத்து ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பேப்பரை வாங்கி புகார்
மனு எழுத ஆரம்பித்தேன். மழையினால் விரல்கள் மரத்துப் போயிருந்தன.
நடுக்கமும் ஏற்பட என்னால் சரியாக எழுதமுடியவில்லை..குப்பையை கிளரிய கோழி மாதிரி எழுதி எழுத்து பிழையுடன் கழுத்தைச் சுற்றி மூக்கை தொட்டகதையாக எழுதி முடித்தேன். எழுதியதை நனையாமல் இருக்க வண்டியின் சீட்டின் அடியில் வைத்து போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சேர்ந்தேன்
வாசலில் நின்ற போலீசு, சப்இன்ஸ்பெக்டர் அம்மாவிடம் மனுவை கொடுக்க
சொன்னார்.அந்த அம்மாவிடம் மனுவை கொடுத்தபோது கைகள் குளிரால்
நடுங்கின். அந்த அம்மா.மனுவை வாங்கும் போது.குளிரால் கைகள் நடுங்கியதால் அதனால் சரியாய் எழுத முடியவில்லை என்றேன்.
அந்த அம்மாவோ,போதும் போதும் என்றுவிட்டு மனுவில் செல் நம்பரை எழுது
என்றார். கூடவே எந்த ஏரியா என்றார்.
நான்,ஏரியாவையும் அம்பேத்கர் சிலைக்கு பாரவுக்கு இருக்கும் போலீசையும்
சொன்னேன். நான் சொல்வதை அந்த அம்மா,கேட்காமல் மேஜையின் மேல்
தலையை கவிழ்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த அம்மாவுக்கு அருகில் பேன்
ஓடியதால் மேலும் குளிரால் நடுங்கினேன்.
தலையை கவிழ்ந்து கொண்டியிருந்த மேடம், செல் போனை நோண்டிவிட்டு
“நீங்க என்ன சாதி ” என்று கேட்டார். சொல்வதா,வேண்டாமா?தர்க்கம் செய்ய
லாமா?என்று அமைதி காத்தேன்
மீண்டும் அந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மேடம்,“என்ன சாதின்னு
கேட்டார்கள். சட்டென்று மாட்டுகறி தின்ற சாதின்னு சொன்னேன்.
“இந்தா ,இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது.” என்று மனுவை என்னிடமே
நீட்டினார். சாதியை சொன்னால்தான் நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு போலீசுக்கும் ஒவ்வொரு சாதி சிந்தனை போலிருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினைக்காக பொது இடத்தை தனது இடம் என்று சொல்லி சாக்கடை இனைப்பு கொடுப்பதை தடுத்த தெரு நாட்டாமை சாதியை மனுவில் குறிப்பிட்டதை அன்று பதவியில் இருந்த ஆய்வாளர் ,.யாருய்யா சாதிய கேட்டா என்று சத்தம் போட்டார்.
இப்போ,இந்த அம்மா சாதிய கேட்குது. சாதிய சொல்லாமல்..ஏரியாவை சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டதும் திரும்பவும் மேஜையில் தலையை கவிழ்த்தது.
இரண்டு காவலர்கள் வந்தார்கள்..என்னை விசாரித்தார்கள்.புகார் கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னதும் எந்த ஏரியா,என்ன தொழில் செய்றாய் என்று விலாவாரியாக கேட்டார்கள்..முடிந்தபின் தனியாக உட்கார்ந்து இருந்த இரு வரிடம் சென்றனர்.அவர்கள் ஏதோ சொன்னதும் லத்தியால் இரு காவலரும் சரமரியாக அடித்தனர்.இந்நிலையில்
வயர்லெஸ்ஸிருந்து ஒலிஎழும்பி,கரகரன்னு ஒருகுரல் ஏதோ சொல்லியது
உதவி ஆய்வாளர் மேடம்,100க்கு போன் செய்தீர்களா? எனகேட்டார்.ஆமாங்க
என் மருமகள் போன் செய்தார்கள் .அவர்கள் வந்து பார்த்துவிட்டு ஸ்டேசனில்
சொல்லுங்கள் என்றுவிட்டு போய்விட்டார்கள் என்றேன்.இரு காலர்களை கூப்பிட்டு ஏதோ சொன்னார்.அந்த மேடம்
அதில் ஒருவர்,தொட்டியை உடைத்தவர்கள் இருக்கிறார்களா? ஓடிவிட்டார்
களா? என்று கேட்டார்.தெரியவில்லையே! நீங்க ஸ்பாட்டுக்கு சென்று பார்த்
தால் தெரியும் என்றேன்.
சாதி கேட்ட உதவி ஆய்வாளர் மேடம்,நீங்க. என்ன செஞசீங்க ,அவிங்க உடைக்கிறதுக்கு ”என்றார்.
மேடம், என் மருமகன் விபத்தில் ஆஸ்பத்திரியில் இருப்பதால் ,ஆஸ்பத்திரி
யிலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன். அவர்களைப்பற்றி நான் எதுவும் கூற வில்லை. மேடம்.
மூனு,பட்டை வாங்கிய ஏட்டையா போலீசு, செல்போனை ஆப் செய்துவிட்டு
ஸ்பாட்டை பார்த்தாச்சு . உடைத்தவர்கள் போதையில் இருப்பதால் இரவில்
அழைத்து வரக்கூடாது. ஆகையால் காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று
அனுப்பி வைத்தார்.
என்ன சாதின்னு கேட்ட உதவி ஆய்வாளரை பார்த்து .வர்ரேன் மேடம் என்று சொல்ல பார்த்த போது “செல்போனில் கத்திக் கொண்டு இருந்தார்
புதன் 01 2011
நீ.....என்ன ஆளு?
அவன் தனியார் கம்பெனிக்கு
வேலைக்கு சென்றான்
கவுஸ் கீப்பராக
பல நாள் வேலை பார்த்தான்
பிரச்சினையில்லை
ஒரு நாள் ஒருவர் கேட்டார்
நீ....என்ன ஆளு என்று.
பட்டென்று சொன்னான்
ஆம்பிள ஆளு என்று.
அது தெரியுது. உன் உடையை
பார்த்தா ஆம்பிள ஆள் என்று
வேலைய பார்த்தா பொம்பள
வேலையென்று. நான் கேட்டது
அது அல்ல. என்றார்.
மீண்டும் கேட்டார்
நீ...என்ன வர்ணம் என்று
சட்டென்று சொன்னான்
கருப்பு என்று.
கிறுக்கனா நீ...என்ன சாதின்னேன்.
அவன் சிரித்தான்
ஏன் சிக்கிறாய் என்றார்
இல்லே,முதலிலே கேட்டு
இருந்தால் சொல்லியிருப்பேன்ல
எடுத்த எடுப்பிலே கேட்கக்கூடாது
அது நாகரிகமில்லே எனறார்
மீண்டும் அவன் சிரித்தான்
என்ன சாதின்னு கேட்பது
மட்டும் நாகரிகமா?
உனக்கு உன் சாதியை
சொல்வதற்கு தயக்கமா?
இல்லே,இந்த வேலைக்கு
மேல் சாதிக்காரங்க வருவாங்களா?
என்ற சங்தேகம்.
எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே? என்றார்.
ஆமாமா,எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே என்றான்.
மொசைக்தரையை பளிங்காக்கிய
துடைப்பத்தை உதறும்போது
தண்ணிர் அவர்மேல் துளியாய்
பட்டுவிட்டது.
அவர் முகம் சுளித்தார்,முறைத்தார்
சுத்த இங்கிதம் தெரியாதவன் என்றார்.
வேலைக்கு சென்றான்
கவுஸ் கீப்பராக
பல நாள் வேலை பார்த்தான்
பிரச்சினையில்லை
ஒரு நாள் ஒருவர் கேட்டார்
நீ....என்ன ஆளு என்று.
பட்டென்று சொன்னான்
ஆம்பிள ஆளு என்று.
அது தெரியுது. உன் உடையை
பார்த்தா ஆம்பிள ஆள் என்று
வேலைய பார்த்தா பொம்பள
வேலையென்று. நான் கேட்டது
அது அல்ல. என்றார்.
மீண்டும் கேட்டார்
நீ...என்ன வர்ணம் என்று
சட்டென்று சொன்னான்
கருப்பு என்று.
கிறுக்கனா நீ...என்ன சாதின்னேன்.
அவன் சிரித்தான்
ஏன் சிக்கிறாய் என்றார்
இல்லே,முதலிலே கேட்டு
இருந்தால் சொல்லியிருப்பேன்ல
எடுத்த எடுப்பிலே கேட்கக்கூடாது
அது நாகரிகமில்லே எனறார்
மீண்டும் அவன் சிரித்தான்
என்ன சாதின்னு கேட்பது
மட்டும் நாகரிகமா?
உனக்கு உன் சாதியை
சொல்வதற்கு தயக்கமா?
இல்லே,இந்த வேலைக்கு
மேல் சாதிக்காரங்க வருவாங்களா?
என்ற சங்தேகம்.
எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே? என்றார்.
ஆமாமா,எந்த வேலையா இருந்தாலென்ன
நமக்கு வேலைதானே என்றான்.
மொசைக்தரையை பளிங்காக்கிய
துடைப்பத்தை உதறும்போது
தண்ணிர் அவர்மேல் துளியாய்
பட்டுவிட்டது.
அவர் முகம் சுளித்தார்,முறைத்தார்
சுத்த இங்கிதம் தெரியாதவன் என்றார்.
வெள்ளி 01 2011
பச்சைகட்டைவெந்தாலும் சாதி(தீண்டாமை)மட்டும் வேகுமா?
அண்டசோறுக்கு ஒருசோறு பதம். குக்கர் சோறுக்கு விசில்சத்தம் பதம்.
அது மாதிரி சாதித் தீண்டாமைக்கு சின்னபதம். கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு பணக்காரன் வீடு கட்டுறான். இவன் வீட்டு கட்டிட வேலைக்கு மேல்சாதியை சேர்ந்த இருவர் வேலைசெய்கின்றனர். இருவரில்ஒருவன் கிருக்கன் (எப்படி வேலசெய்யுறான்னுதெரியல).
வேலை நடந்து கொண்டு இருக்கும்பொழுது ஒருவனுக்கு தண்ணீர் தாகம் கீழ்சாதிக்காரன் வீட்டில் குடியிருக்கும் மேல்சாதிக்காரி வீட்டில் தண்ணீர் கேட்டு வாங்கிகுடித்தான்.அந்த மேல்சாதிக்காரியோ இதுவரை ஆறு,ஏழு பேருக்கு வைப்பாட்டியாக இருந்து ஏழுபிள்ளையும் பெற்று உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வீடு கிடைக்காமல் மாநகரில் அரிசனசேரின்னு ஒதுக்கப்பட்ட தெருவில் வாடகைக்கு குடியிருந்து வருகிறாள்
ஒருவன் தண்ணி குடித்ததும் கிறுக்கனுக்கும் தண்ணி தாகம் எடுத்தது. “டேய், ,நீ எங்க தண்ணீ குடித்த-என்று அவனிடம் கேட்டான்.அதைக்கேட்ட வீடு கட்டுபவனின் மனைவி ,பிரிஸ்ஸிருந்து தண்ணி பாக்கெட் எடுத்துதரவா?ன்னுகேட்க,அந்தலூசுப்பய, “வேண்டாம்னு சொல்லிபுட்டு”அந்த மேல் சாதிக்காரி கொடுத்த மண்டித்தண்ணிய மண்டினான். ஆடு, மாடு கூடத்தான் மண்டி தண்ணிய மண்டுது.அது சாதியா பாக்குது.
ஒரு லூசுப்பயகூட சாதித்தீண்டாமை பாக்குறான்னா!? செத்தபிறகு அவன் கட்டைவெந்தாலும், சாதீத்தீண்டாமை மட்டும் வேகுமா??
“உள்ளென்று வைத்து,புறமொன்று பேசாதீங்க.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களா?
கெடாமல் இருந்தாலும் கீழ்மக்கள் கீழ் மக்களா?
---பதில் சொல்லுங்கள்- படித்தவர்களே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தோற்றுபோனவன்....
அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல் கேட்டு வளர்த்தேன்.. கஷ்டமில்லாமல் தலைமயிரை....... வயது முதி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...


