பக்கங்கள்

Wednesday, November 23, 2011

விசாரனை முடிந்தது?

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

ஆண்டுக்கணக்கில்
இழுத்தடித்த வழக்கில்

மாட்சிமை தாங்கிய
நீதிமனறத்தை

மயிரின் அளவுக்கு
மதித்த போதும்

நாங்கள் உங்களை
மதித்து..........

ஒரு வழியாக நாளே
நாளில்

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

தமிழகத்தில் உங்கள்
திரு விலையாடலைத்
தொடங்கலாம்

காலம் கடந்து வந்த
இந்த வழக்கை

தங்கள் திருவடி பணிந்து
உங்களக்கு ஏற்றபடி

தீர்ப்பு வழங்கப்படும்
அந்தத் தீர்ப்பும்

அடுத்த நுாற்றாண்டில்
வழங்கப்படும்

எதிர்ப்பவர்கள் எல்லாம்
மக்கள் விரோதிகள்

தீய சக்திகள் தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் நக்சலைட்கள்

போராடுபவர்கள் உடனே
கைது செய்யப்படுவர்

விசாரனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவர்

மன நிம்மதியுடன் சென்று வருக!
தாயே! தமிழ்நாட்டின் புண்ணியவதியே!

தில்லை நாயகியே! சரணம்!


5 comments :

 1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 2. மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை
  -மாவோ

  ReplyDelete
 3. நீதியின் கண்கள் கட்டப்பட்டதை உறுதி படுத்துகிறது இன்றைய நீதிகள்...

  ReplyDelete
 4. //மயிரின் அளவு மதித்த போதும்//அந்த அளவு கூட மதித்தாக தெரியலையே,என்னடா இது நியாயம் தர்மம்? கர்மம்,கர்மம்.

  ReplyDelete
 5. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
  வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!