பக்கங்கள்

Wednesday, October 03, 2012

சில்லரைக்காக.....................சென்றேன்.

வருடத்துக்கு ஒருமுறை
வரும் வாடிக்கையாளர்
தன்வீட்டுப் பிள்ளைகளின்
பாடப் புத்தகங்களை அடடையிட்டு
செப்பனிடக் கொடுத்தார்.

செப்பனிட்ட புத்தகத்தை
பெற்று  அய்ந்து நூறு
முழு நோட்டை நீட்டினார்.

என்னிடம் சில்லரை இல்லை
ஞானம் ஸ்டோர்க்கு சென்றேன்
உதட்டை பிதுக்கினார்.
உதடனின் டீக்கடையில்
நீட்டினேன் கைவிரித்தார்
.
கடைசியாக முத்துராசு
கடைக்கு போனால்..
மல்டிபார்க்கு போகச்
சொன்னார்.

போவதற்கு தயக்கம்
வாடிக்கையாளாரை
காக்க வைத்த தவிப்பு
ஒருபக்கம்.................

துணிந்து சென்றேன் மல்டி
பார் ஒயின“ஷாப்புக்கு
சில்லரையை வாங்கி
வரும்போது........

டாஸ்மாக் குடிமகன்
இருவரில்  ஒருவன்
சொன்னான்..............


பார்றா...........தோழரும்
ஒயின்ஷாப்புக்கு வர்ராருடா!!!!.......


7 comments :

 1. குடிகாரர்கள் மட்டுமல்ல... நல்ல குடிமக்களும் அவ்வாறுதான் நினைப்பார்கள்..!!!


  அதற்காககத்தானே பழமொழிகூட சொல்லி வைத்தார்கள்..

  பனைமரத்தின் அடியில் பால் குடித்தாலும், கள்ளையே குடிப்பதாக நினைக்கத் தோன்றும்..

  இது மனித இயல்பு..

  இயல்பானவற்றிற்கு மாறாக எதைச் செய்தாலும் மனம் அவ்வாறே எண்ணும்..!!!


  பால் குடித்தவருக்கும், சில்லரை வாங்கியவருக்கும் மட்டுமே தெரியும்.... தாங்கள் என்ன செய்தோமென்று..!!!

  பகிர்வுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 2. ஊரில் இது போல் தவறாக நினைத்து பல நண்பர்களின் கல்யாணம் கூட நின்று போனதுண்டு...

  ReplyDelete
 3. நண்பரே..! ஒரு வேண்டுகோள்...!

  தங்களுடை கருத்துப்பெட்டியில் உள்ள "வேர்ட் வெரிபிகேஷன் நீக்கவும்"

  நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும் - இதை நீக்கவும். மேலதிக தகவல்களுக்கு கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

  உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

  நன்றி நண்பரே..!

  ReplyDelete
 4. எங்க போனாலும் இந்த மதுக்கடை தொல்ல தாங்க முடியல்லை.http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html?

  ReplyDelete
 5. நண்பர் தங்கம்பழனிக்கு தங்களின் சுட்டியினபடி சொல்பார்ப்பை நீக்கிவிட்டேன். தங்களின் கருத்துரைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி!

  ReplyDelete
 6. நண்பர்,திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு தங்களின் கருத்துரைக்கும் செய்திக்கும் நண்றி!

  ReplyDelete
 7. நண்பர்,சேகர் அவர்களுக்கு தங்களின் பதிவுக்கும் கருத்தரைக்கும் நன்றி!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!