சனி 15 2012

ஊழலின் ஊற்றுக்கண்களே அதிகாரிகள்தான்........................




 இந்திய நாட்டின ஊழலை ஒழிக்க வராது வந்த மாணிக்கம் என்று சொல்கின்ற தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பதினோறாவது மாநாட்டில் மத்திய தலைமை ஆணையர் சத்யனந்தா மிஸ்ரா என்பவர் ஊழலுக்கு ஊற்று கண்ணாக விளங்கும் அரசு அதிகாரிகளை பற்றி குற்றஞ்சாட்டினார்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்  அமுலுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,அதிலுள்ள நல்ல அம்சங்களை அரசு அதிகாரிகள்  சரிவர செயல்படுத்தவில்லை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நாலாவது பிரிவையே அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றார்.
தகவல் ஆணையருக்கு,  அமுல்படுத்தும் அணைத்து அதிகாரமும் கொடுத்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  விதிவிலக்கு இல்லாமல் உண்மையாக முழுமையாக அமுல்படுத்தினால். இந்தியாவின் அரசு அதிகாரவர்க்கத்தின் தூண்கள் அணைத்தும் “டாமால்டுமால்ஆகி காலி பெருங்காய டப்பாவாக ஆகிவிடும்.

65 ஆண்டுகால சுதந்திர நாட்டில் அரசியல் சட்டத்திலும் நீதிமன்ற சட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டத்தையே அமுல்படுத்தினாலே “ஏழு மலைக்கு அப்பால், ஏழுகடலுக்கு அப்பால் ஊழல் ஓடிவிடும்.
ஆனால், இந்திய சு(சூ) தந்திரம் துரோகத்தினால் விளைந்த காரணத்தினால் இந்திய அரசியல் சட்டங்களும் துரோகத்தனமாக ஓட்டைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.இதேபோல்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் …………

ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாய் இருப்பதும் அரசு அதிகாரிகள்தான், இந்நாட்டை ஆளுவதும் அதிகாரிகள்தான். தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களை வாட்டும் சட்டங்களை அமுல்படுத்துவதும் அதிகாரிகள்தான்.

ஊழிலை ஒழித்தால் அதிகாரிகளை ஒழிப்பதற்கு சம்ம். அதிகாரிகளே அதிகாரிகளை ஒழித்துவிடுவார்களா? பேருக்கு சில பூச்சாண்டி காட்டி சில ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆகவே, எந்த கட்சி ஆண்டாலும் எந்த அதிகாரி வந்தாலும் ஊழலை ஒழிக்கவும் முடியாது ஊழல் அதிகாரிகளை ஒழிக்கவும் முடியாது. இருக்க கூடிய சட்டத்தை பயனபடுத்தி நல்ல அதிகாரிகளையும் நல்ல கட்சிகளையும் வாயை மூட வைக்கலாம், கஞ்சா கேஸ்,அவதூறு கேஸ் இப்படிபொய் கேஸ்களை போட்டு மற்றவர்களை பயமுறுத்துவதும் அதிகாரிகள்தான.

புதிதாகவரவிருக்க்க்கூடியகொடியசட்டத்தையும்அமுல்
படுத்தக்கூடியவர்கள் அதிகாரிகள்தான். அவர்களால் நல்ல சட்ங்களை அமுல் படுத்தவே முடியாது பத்து பேரில் ஒன்பது பேர் நல்லவராக இருந்தால் கெட்டவரை அடக்கி நல்லவற்றை செய்வார்கள் என்று நம்பலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. பத்துப்பேரில் ஒன்பது பேர் கெட்டவர்கள் ஒருத்தர் மட்டும் நல்லவராக இருந்தால் அவரால் தலைமுடியைக்கூட புடுங்கமுடியாது.

தகவல் அறியும் சட்டம் வருவதற்கு முன் ஏகப்பட்ட ஊழல்கள்.அதிகாரமுறைகேடுகள் வெளி வந்து சந்தி சிரித்தன. அந்த வழக்குகளில் ஒருவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாறு கிடையாது.
 அதே மாதிரிதான் வராது வந்த மாமனியாலும் ஊழலின் ஒரு கிளையைக்கூட ஆட்டவோ. அசைக்கவோ முடியாது.ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் .டிஸ்மிஸ்ஸோ,தண்டனையோ எதிர்பார்க்க்கூடாது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் என்ன பலன் என்றால்.முன்பெல்லாம் மனு போட்டால் மனு என்னாச்சு என்றே தெரியாது. கேட்டாலும் முறையான பதிலும் கிடைக்காது. தகவல் அறியும் சட்டத்தினால் கொடுத்த மனு என்னாச்சு என்று தெரிஞ்சுக்கலாம், பத்து தடவை மனு போட்டு பதினோறாவது தடவையாக ஒரு நடவடிக்கையில் ஒரு  உத்தரவு மூலம் ஆறுதல் அடையலாம்.அவ்வளவே!! நடவடிக்கை சரியில்லையென்று நீதிமனறத்துக்கு போனால் அடுத்த நூற்றாண்டுவரை காத்து இருக்கவேண்டும். 

தகவல் அறியும் சட்டத்தில்கூட முடியும் முடியாது
என்று தகவல் தருவது கிடையாது, காலம் கடந்தது என்றும், 
விதி 8ய் சுட்டிக்காட்டுவதும் தலையை சுத்தி மூக்கை தொடும் தில்லாங்கடி போன்ற திசை திருப்பும் வேலையே அதிகம் நடக்கிறது. 

இரண்டாவது மேல் முறையீட்டில் தகவல் ஆணையரிடம் ஒரு பேச்சும், மனுதார்ரிடம் ஒரு பேச்சுமாக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.தகவல்ஆணையரின்உத்தரவை மதித்தாகவோ,
மதிக்காத காரணத்தால் தண்டனை பெற்றதாகவோ ஒரு வரலாறோ, ஒரு துண்டு துக்கானி நடவடிக்கையோ  செய்தியோ இல்லை.

ஒரு நல்லவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால்,.அதில் அதிகாரிகள் பத்து கெட்டவற்றை கண்டு பிடித்துவிடுவார்கள். அந்த நல்லவைகள் இருந்தஇடமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும் இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது இதில் அரசியல் வாதிகளுக்கு ஊழல் வழிகளையும் தப்பிக்கும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள்தான்,நல்லவற்றை ஒழித்து கட்டுவதில் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் இரட்டைகுழல் துப்பாக்கிகளாக செயல்படுகிறார்கள்.


 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....