பக்கங்கள்

Tuesday, May 12, 2015

தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக வரலாறு இல்லை.


jaya-acquited-cartoon
படம்- வினவு

படிக்க---கொள்ளைக்காரி ஜெயா விடுதலை .ஏன்?


அடிமைகள் தெய்வத்திடம்
வேண்டினார்கள் எங்கள்
தெய்வம் விடுதலையாக
வேண்டும் எங்களை
ஆள வேண்டும்
என்று. பரிகாரமாக
 மொட்டைகள் விரதங்கள்
யாகங்கள், காவடிகள்
காணிக்கைகள்  மேலும்
பல கட்ட போராட்டங்கள்

சாதரண பக்தனுக்கு
கண்மூடி தவமிருக்கும்
தெய்வம் அடிமை
பக்தர்களின் பக்தியில்
உச்சி மகிழ்ந்து
உள்ளம் பூரித்து
திருவாய் பொழிந்தது.

தெய்வத்தை தெய்வம்
தண்டித்ததாக வரலாறு
இல்லை. அந்த
வரலாற்றை முன்
மாதிரியாகக் கொண்டு
தெய்வத்தையே  தெய்வம்
தண்டிக்காது. தண்டிக்கவும்
செய்யாது....பக்தா.....

பல தெய்வங்களில்
பல அவதாரங்கள்
போல இதுவும்
தெய்வத்தின் ஒரு
அவதாரம் என்றது


32 comments :

 1. //தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக வரலாறு இல்லை.//

  Wow....what a Title!!!
  Super.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 2. //தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக வரலாறு இல்லை.//
  சரியாக சொன்னீர்கள்.
  ஒரு தெய்வத்திற்காக இன்னொரு தெய்வத்திடம் மன்றாடி வேண்டி, மண் சோறு சாப்பிட்ட தமிழக பக்தன் உலகிலேயே உயர்ந்து விட்டான்.

  ReplyDelete
  Replies
  1. பக்தியில் தமிழக பக்தனை மிஞ்ச முடியுமா??? அவன் யாரு? கல்தோன்றா மண் தோன்றா. காலத்தே தோன்றிவனா...ச்சே.....

   Delete
 3. ~பேய் அரசாளும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள்~
  எனும் குரல் கேட்கிறது உங்கள் கவிதையினூடே...........
  அது என் பிழையாயும் இருக்கலாம்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பிழை எதுவுமில்லை தாங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.....

   Delete
 4. ஆரம்பித்துவிட்டீர்களா? ஏன் தெரிந்த செய்திகளை திரும்ப ,,,,,,,,,,,,,,,,, அப்புறம் தெய்வ அவதாரம் என்று தாங்கள் ஒத்துக்கொள்வது பொல்,,,,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் அம்மா தெய்வ பக்தியில் மிதக்கும் பொழுது ..நான் மட்டும் எப்படி... பாட்டி வடை சுட்டக் கதையையா சொல்லிக் கொண்டு இருக்கமுடியும்.. .

   Delete
 5. உண்மைதான் இதனால் தெய்வம் உலகுக்கு தெரிவிப்பது என்னவென்றால் கொள்ளையடியுங்கள், ஆனால் நிறைய அடியுங்கள், பின்னர் தெயவத்தை சரிகட்டிக்கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. கொள்ளை யடித்ததில் தப்பிப்பதற்காக தெய்வத்தை வேண்டி நின்று அன்னதானமோ, இத்தனை ஜோடிகளுக்கு திருமணமோ முடித்து வைத்தோ பரிகாரம் செய்தால்.. மீண்டும் கொள்ளையடிக்கலாம் . பின்னர் தாங்கள் சொல்வது போல் பின்னர் தெய்வத்தை சரிகட்டிக்கொள்ளலாம்.

   Delete
 6. வானம் சற்று மேக மூட்டமாகக் காணப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

  என்ன சார் பண்ணுறது? நீங்க எழுதுனது ஒண்ணுமே புரியலை. அதுனாலத்தான் வானிலை அறிக்கை படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என்ன சார் இது பெரிய அநியாயமா..இருக்கு....!!! புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொல்லுங்கள்

   Delete
 7. எல்லாம் அவனின் திருவிளையாடலே நண்பா.... மாயா மாய சாயா சாயா ஒரு சாயா இருந்தால் தாயா....

  ReplyDelete
  Replies
  1. கொலை செய்தவர்களை தப்பிக்க வைப்பதும் கொள்ளை அடித்தவர் களை விடுதலை செய்வதும் எல்லாம் அவனின் திருவிளையாடல்தான்..என்றால் அந்த விளையாட்டா இருக்காதே.....

   Delete
 8. Replies
  1. பயப்படாதீர்கள்....!!அரசன் அன்றே சிறை வைப்பான். தெய்வம் நின்றே விடுதலை செய்யும்.

   Delete
 9. பெரியார் கொள்கை நிரூபிக்கப் பட்டு விட்டது ,கடவுள் இல்லை ,இல்லவே இல்லை :)

  ReplyDelete
  Replies
  1. கடவுள் இல்லைதான்...ஆனால் தெய்வம் இருக்கிறதே....

   Delete
 10. "தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக வரலாறு இல்லை".
  தெய்வம் என்றால் அது தெய்வம்
  சிலை என்றால் வெறும் சிலைதான்!
  குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி
  என்பது ஏது தோழா!
  த ம 8
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. இங்கு குற்றம் புரியாதவர்களுக்கே வாழ்க்கையில் நிம்மதி இல்லை நண்பரே......

   Delete
 11. ஏன் நீங்கள் எல்லாம் பழைய திருவிளையாடல் படமே பாக்கலையோ இல்லை மறந்து விட்டீர்களா............. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...... தலைப்பை சொன்னேன்................

  ReplyDelete
  Replies
  1. அட..ஆமங்க......அதுல ஆம்பள சாமி...பொம்பள அடக்கி தன் அதிகாரத்தை செலுத்தியதால் அது ஆணாதிக்கசாமி படமுங்க.... நம்ம தலப்பு வேறுங்க.......

   Delete
  2. இது வேறயா ஐயா சாமி ஆள விடுங்கப்பா, இப்பத்தான் குமாரசாமி கல்குலேட்டர் இணையத்தில் இடி சிரிப்பு வழங்கி வருகிறது, இதுல ஆணாதிக தீர்பு வேறவா.........இதுல தருமி தளத்தில நல்லா அடிவாங்கின சொம்பு என்ற பெயர் வேற சிரிச்சு சிரிச்சு முடியலப்பா. பாவம் குமாரு, அவருடைய மைன்டு வாய்சுல அளுதுருவேன்னு வடிவேல் குரல் இங்க வரைக்கும் கேட்குதே, பாவம். அன்று பாத்திமா பீவின்னு ஒருதர இப்படி தான் ஊரைவிட்டே அனுப்பினார்கள் அவமான படுத்தி இன்றைக்கு குமாரு தொடரட்டும் உங்கள் பணி/சேவை...........அவங்களை சொன்னேன்.....

   Delete
  3. இப்பத்தான் கிடச்சிருக்கிங்க..... அதுக்குள்ள...இப்படியா ..???

   Delete
 12. வீராணம் புராணம்
  வீழ்ச்சியில் வீழ்ந்ததோ?
  அம்மா புராணம்
  அகிலமே படித்ததோ?
  (தோழரே தங்களது புராணக் கருத்து
  குழலின்னிசையில் தென்படுவது இல்லையே ஏன்?)
  த ம 9
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் நண்பரே........வேறு சில காரணங்களால்..கணனியில் உட்காருவதற்கு தடை ஏற்பட்டு உள்ளதால் தென்படவில்லை.... இனி குழலின்சையில் தென்படுகிறேன் நண்பரே.....

   Delete
 13. எத்தனையோ பேர் தம் ஒருநாள் உழைப்பை விட்டுவிட்டு வந்து தெருவில் கொள்ளைக்காரருக்கு கொடி பிடிப்பதை பார்த்தல் வருத்தமாக உள்ளது. உங்களை நம்பி உங்கள் வருமானத்தை நம்பி கொஞ்ச சீவன்கள் வீட்டில் காத்திருப்பார்கள் என்பதை மறந்து இப்படி அநியாயத்துக்கு கொடிபிடிப்பது நியாயமா....

  ReplyDelete
  Replies
  1. நானுந்தான் உங்களை கேட்கிறேன்.. வாழ வழியற்று இருப்பவர்களுக்கு ஒரு நீதி..... கோடிகோடியாய் குவித்து வைத்தவர்களுக்கும் ஒரு நீதியா...??? இது நியாயமா.? இது தர்மமா...?

   Delete
 14. தெய்வத்தை தெய்வம் தண்டித்ததாக
  வரலாறு இல்லை என்றால்
  தெய்வத்தை மனிதன் தண்டித்ததாக
  வரலாறு எழுதப்படலாம்!

  ReplyDelete
  Replies
  1. தெய்வத்தை மனிதன் தண்டிக்கவேயில்லையே...பிறகு எப்படி வரலாறு எழுதப்படுவது..... பாட்டி சுட்ட வடையை எப்படி காக்கா தூக்கிக் கொண்டு ஓடியது என்று வேண்டுமானால் இந்தக் காலத்துக்கு ஏற்ப கதை எழுதலாம்.

   Delete
 15. Replies
  1. தங்களின் வாக்குக்கும் வாழ்த்துக்கும்நன்றி! அய்யா

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com