பக்கங்கள்

காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 03 2024

காதலின் அவதாரங்கள்..

 



தாஜ்மகால் காதலர்களுக்கு அது காவியம்

காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு   நினைவு சின்னம்

சங்கிக்கு  பதினாறு பொண்டாட்டி கட்டியவனின் மாட மாளிகை

சங்கி வெறியனுக்கு இராமர் என்பவன் ஒன்னுக்கு அடித்த இடம்

                                ------------------------------

     காதலின் அவதாரங்கள்


காதல்..

தனக்கு வந்தால் அது காவியம்

காதல்..

நண்பனுக்கு வந்தல் அட்வைஸ்..

 காதல்..

தங்கைக்கு வந்தால் கொலை வெறி!


காதல்..

தந்தைக்கு வந்தால் ஒழுக்க கேடு


வெள்ளி 01 2021

காதல் : சாதி வெறியர்கள் இப்போது அதிகம் புலம்புவது ஏன்?

காதல் : சாதி வெறியர்கள் இப்போது அதிகம் புலம்புவது ஏன்? Love Marriage | Villavan Ramadoss | ThinnaiTV

ஜாதிவெறியர்களின் பல ஆண்டுகால டெம்ப்ளேட் மீம் ஒன்றை துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் பகிர்ந்துள்ளார். அது திமுகவினரால்கூட பரவலாக கண்டிக்கப்பட்டது. இது ஒரு நபரின் சாதிவெறி என்று புரிந்துகொள்வது தவறானது.
சாதிவெறி இயக்கங்கள் முன்னெப்போதையும்விட இப்போது நிதி வலிமையோடு இருக்கின்றன. அவர்களால் சாதாரண மக்களிடையே செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதும் கசப்பான உண்மை. அவர்கள் காதல் மணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை முதல் லட்சியமாக வைத்திருக்கிறார்கள்.
மறுபுறம் சாதிகளுக்கு இடையே திருமணம் நடப்பது தவிர்க்க இயலாததாகி வருகிறது. பெரிய அரசியல் விரும்பம் இல்லாமல் இருக்கும் மக்கள் இந்த இருவேறு கள நிலவரங்களுக்கு இடையே அல்லாடுகிறார்கள்.
இவர்களுக்கு தேவைப்படும் வகையில், இவ்விவகாரத்தில் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பது பற்றி திண்ணை டிவி பக்கத்திற்கு தயாரித்த காணொளி. அரசியல் காணொளி அல்ல, ஆகவே அரசியல் பிடிக்காத பெற்றோர்களுக்கும் பரிந்துரைக்கலாம்.


புதன் 18 2015

தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த பாசமிகு அண்ணன்கள்..

1
படம்-வினவு
பாச மலர் படத்தில்..அண்ணன் தங்கையின் கணவனிடம் என் கண்களையே உன்னிடம் ஒபபடைக்கிறேன் என்று  கூறுவார்.அதே போல காதலுக்கு மரியாதை என்ற படத்திலும் தங்கையின் அண்ணன்கள் முதலில் தங்கையின்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின் தங்கையின் காதலை ஏற்று  காதலுக்கு மரியாதை செய்வார்கள்..இதுகள் தமிழ்ச சினிமாக்களில் மட்டுமே சுபம் பெறும்.. ஆனால் நிஜத்தில்........ வேறு மாதிரியாக நடக்கிறது.. நடந்து கொண்டு இருக்கிறது. 
அதில் ஒன்று தங்கைக்கு அவளது கணவனது பொணத்தை பரிசாக கொடுத்த அண்ணன் மார்களின்.. உண்மைககதை.
உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் அண்ணன்கள்..அவர்கள் யாரும்  வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தும இளைஞர்கள்தான் அவர்கள்.தமிழ் சினிமாவில் காட்டப்படும் காதல் படங்களை ரசித்தவர்கள்தான்..ஆனால் நிஜமோ  வேறு மாதிரியாகத்தான் நடந்து இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். 
இச்சூழ்நிலையில் இக்காதலர்கள்  சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்தார்கள
.காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.
இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.
தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் காதலித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும்.
நன்றி!

செவ்வாய் 06 2015

“மரியா”...காமத்தின் புதிய தேவதை...


puka6_sex_oct_15_wrapper
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு

உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015




புதன் 03 2015

அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.



படம்-மூவலூர் இராமாமிர்தம்


http://www.vinavu.com/2011/09/28/prostitution/

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.
தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.
இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.
இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.
அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.
இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.
பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.
சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.
இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.
மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.
ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.
பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.
அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.
மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.
சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.
8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.
மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?
முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.
பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.
மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.
சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.
நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.
அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?
காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!
காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.
ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.

சனி 01 2014

அப்போதும்------இப்போதும்.

அது அப்போது
             
                              எல்லோரையும் போலவே
                               வாழ ஆசைப்பட்டேன்
                                என்றான்.- அவளை
                                காண்பதற்கு முன்னால்

இது இப்போது

                                எல்லோரும் என்னைப்
                                            போல  வாழ
                                 ஆசைப படக்  கூடாது
                                  என்றான்-----அவளை
                                  காதலித்த  பின்னால்

வியாழன் 08 2013

இதனால்தான் சேரனும் திவ்யாவின் தாயும் புலம்புகிறார்கள்.......

.

சினிமாத் துறையில் பணமும் புகழும் பெற்ற சேரன். தன் மகளை மீட்க வேண்டும் என்று நீதிமன்ற வாயிலில் தொலைகாட்சிக்கு பேட்டியளிக் கிறார்.

திவ்யாவின் தாயார் தேன்மொழியும்.தன் காதலனுடன் திருமணம் முடிந்து கணவன் இளவரசன் வீட்டில் இருந்த  தன் மகளை  தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.

இரண்டும் வேறு  வேறு வழியில் வந்ததாக இருந்தாலும் ஒரே நோக்கத்துடனும் சுயநலத்துடனும் ஒரு வித ஆதங்கத்துடனும் கோபத்துடன்தான் செயல்பட்டார்கள்.

ஒன்று சாதிவெறி என்று பகிரங்கமாக தெரிந்தது.இன்னொன்று மோசடி,ஏமாற்று என்று வேறு முகமாக வருகிறது.

இதில்.இறந்துபோன இளவரசன், ஒரு சாப்ட்வேர் பொறியாளராக வெளி நாட்டில் வேலை பார்ப்பவராகவோ, அல்லது வேறு தொழில் அதிகாரியாகவோ இருந்திருந்தால், 

திவ்யாவின் தந்தை நாகராசனும், ஆட்கொணர்வு மனு போட்ட தேன்மொழியும்  சாதி வெறியர்களின் தூண்டுதல்களுக்கும் சாதிவெறிக்கும் பலியாகி இருப்பார்களா?. 

அட,திவ்யாவுதான் நான் அம்மாகூட இருப்பேன்னு சொல்லியிருக்குமா?

.இன்நேரம்.சாதிவெறிக்கும், தங்களை தூண்டிவிட்ட சாதி வெறியர் களுக்கும் பாடை கட்டி இருப்பார்கள். துள்ளி குதிக்கும் உள்ளுர் சாதி வெறியர்களுக்கு எதிராக, தனக்கு பிடித்த கணவருடன் வெளிநாட்டில் வாழும் என் மகளின் வாழ்வை கெடுக்கும் சாதி வெறியர்களை தண்டிக்க்கோரி புகாரும் கொடுத்து இருப்பார்கள்..

இங்கு சாதி வெறிக்கு மாற்றாக கொஞ்சம் பொருளாதாரம் மாற்றாக இருக்கிறது

சேரன் மகள் விசயத்திலும் பொருளாதாரம்தான் பிரதானமாக இருக்கிறது. தாமினியின் காதலன் சந்துரு. ஒரு அமைச்சரின் மகனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ, இல்லை.சேரன் சார்ந்திருக்கிற சினிமாவிலோ பிரபலமான இயக்குநகராகவேர், நடிகராகவே இருந்திருந்தால்,

சேரனும்.அமிரும் சொல்கின்ற  சந்துருவின் கெட்ட பழக்கவழக்க நடவடிக்கைகள்  பணக்காரரின் அந்தஸ்தாக மாற்றப்பட்டு இருக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டு இருக்கும்.

கேட்கும் வரதட்சனை கொடுத்தும், மனதுக்கு பிடித்த மாப்பிள்ளையை மணமுடித்தும், பெற்றொர்களால் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது.

அல்லது உயிர்க்கு உயிராக காதலித்து,காதலுக்கு எதிராக நின்ற பெரும் படையை எதிர்த்து திருமணம் முடித்தவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது. அல்லது தோன்றாமல்தான் இருக்கிறதா?

பிரச்சனையே இல்லாத மனிதர்கள்தான் உண்டா?? சமூகமும்தான் உண்டா? ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பஸ்தர் ஒருவர். தன் வீட்டுப் பெண்களை தன்னைப்போல் கஷ்டப்படும் நபருக்கு மணம் செய்து கொடுக்க  முன்வருவரா? வரமாட்டார். அப்படியே அவருக்கு மணம் வந்தால் அவருடைய துனைவியார், மணக்கபோகும் பிள்ளைகள் சம்மதிக்குமா??.

ஒரே சாதியில் உள்ள ஆதிக்கசாதிவெறியர் தன் மகளையோ, மகனையோ தன் சாதி வெறிக்கொடி வளர,  இல்லாத வீட்டிலுள்ளவர் நல்லவராக, தன்சாதிக்காக பாடுபவராக இருந்தாலும் அவர்களுக்கு  மணம்தான் செய்து கொடுப்பாரா??? இல்லை.அந்த வீட்டீல்தான் பெண் எடுப்பாரா ?

கஷ்டப்படுபவரே,தன் குடும்பத்தைவிட சற்று வசதிபடைத்த குடும்பத்தைதான் தேடுகிறார்கள். அது காதலாக இருந்தால் ரெம்பவும் வரவேற்று காதலுக்கு பச்சை கொடி காட்டி தாங்கள் காதலுக்கு ஆதரவாளராக காட்டி பீற்றிக் கொள்கிறார்கள்.இப்படித்தான் செல்வந்தர்களின் காதலும்,


இதுவன்றி,அவர்களுக்கு, தங்கள் எண்ணத்துக்கு விரோதமாகவா, எதிர்கால திட்டத்துக்கு மாறாகவோ, காதல் கீதல் என்று எதுவும் நடந்துவிட்டால், சிங்கமாக,புலியாக,சிறுத்தையாக மாறிவிடுவார்கள்.

சேரன்கூட தான் இயக்கிய பொற்காலம் படத்தில் முரளி தன் தங்கை ஊமைப் பெண்ணுக்கு தன் அந்தஸ்க்கு மேல்தான் மணமகன் பார்ப்பார். அந்தச் சிந்தனைதான் சேரனின் சொந்தப்பிரச்சனையிலும் தெரிகிறது.

பொற்கால படத்தில் முரளியுடன் இருக்கும் வடிவேலு முறை மாப்பிள்ளையாக இருந்தாலும், வடிவேலு பேசும் வசனங்கள் சேரனுக்கு சினிமாத்தனமாக தெரிகிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்கிறவர்கள்கூட, தங்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றபடி வசதியான குடும்பத்தில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது மாதரி....

புரட்சிகர கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் கூட கட்சிக்காக பாடுபடும் ஏழைத்தோழன் குடும்பத்துக்கும், வசதியானதோழனின் குடும்பத்துக்கும் திருமண சம்பந்தமும் சுலபத்தில் ஏற்ப்படுவதில்லை . 

இப்படித்தான் எல்லோரும் காதலுக்கு மரியாதை செலுத்து கிறார்கள.

கெட்டவனோ,கெட்டவளோ,புரிந்த காதலோ,புரியாத காதலோ,சாதிவெறியர்கள் சொல்லும் நாடகக்காதலோ, காசு பறிக்கும் காதலோ,உண்மைக் கதலோ, கள்ளக் காதலோ, அத்தகைய காதலை 

மனித நேயத்துடன் சீர் தூக்கி பார்த்து அங்கீகரிக்கும் அளவுக்கு நாகரிகமுள்ள  மேன் மக்கள் நிறைந்த அளவுக்கு வளர்ந்தவிட்டதாக சொல்லப்படும் சமூகத்தில். அந்த சமூகத்தில் வாழுபவர்களும் சரி,  மேன் மக்களும்சரி, இன்னமும் மனிதர்களாய் வளரவேயில்லை.

ஒரு ஏழையின் காதல் வளர்வதற்கும் உண்மைக்காதல்வெற்றி பெறுவதற்குமான ஒரு சமூகம்.

அப்படி,  எந்த ஒரு வேறுபாடு அற்ற சமூகம் வளர்வதற்கும், தோன்றுவதற்க்கும் எந்தவித அறிகுறியும்  தெரியவில்லை, 

இதனால்தான்  காதலித்து வெற்றி கண்டதாக சொல்பவர்களும்  களத்தில் குதித்து சாதிவெறியர்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக, காதலை எதிர்த்து புலம்புகிறார்கள்.  

இதனால்தான் உண்மைக்காதல் தொடர்ந்து பலியாகி வருகிறது. .உண்மைக்காதலர்களும்  பலியாடுகளாக இருக்கின்றனர். .



வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...