வியாழன் 08 2015

நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

படம்-மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் 




Prpc Milton Jimraj உடன் Jim Raj Milton
நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் (தமிழில்)

நமது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.

இவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.

நமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.

கருத்துரிமை அழிக்கப்பட்டதென்றால், அரசமைப்புச் சட்டமே அழிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என்றார் டாக்டர் அம்பேத்கர். உயர் நீதிமன்றங்களின் மாட்சிமை தங்கிய நீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜெர்மனியில் அதுதான் நடந்தது. இவர்கள் அரசமைப்பு குறித்து கொண்டிருக்கும் புரிதலின்மையையே இது காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையிலும் காந்தியின் படம் பெருமையுடன் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க டர்பன் நீதிமன்றத்தின் நீதிபதி, காந்தியிடம் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியபோது காந்தி அகற்ற மறுத்தாரே, அது நீதிமன்றத்தில் அவர் நிகழ்த்திய கலமில்லையா?

கிறித்தவ முறைப்படி அல்லாத திருமணங்கள் செல்லத்தக்கவையல்ல என்று தென்ஆப்பிரிக்க தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தனது மனைவியுடன் காந்தி கைது ஆனாரே அது ஏன்?

ஒரு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி கைது ஆனது தவறு என்றால், அவரது படத்தை நீதிமன்ற அறைகளிலிருந்து அகற்றி விடலாமே.

trichy-lawyers-meeting-banners-16ஒரு தீர்ப்பை விமரிசிப்பது என்ன வகையில் சட்ட விரோதமானது?

மதுரா வல்லுறவு வழக்கில் மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும்  விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படவில்லையா?

வல்லுறவு தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 376A சேர்க்கப்பட்டதே அந்த விமரிசனத்தின் விளைவுதான் என்பது உண்மையில்லையா?

திரு.ஏ.கே ராமசாமிக்கும், தர்மராஜுக்கும் எதிராக எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

பகத் சிங் செய்த தவறென்ன? தமிழகத்தின் நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அறைக்குள்ளே மவுனமான முறையில் கோரி நின்றது பாவச்செயலா?

நீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார்? வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா?

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் அவர் கண்ணீர் விட்டு அழவில்லையா? அப்போதெல்லாம் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லையே ஏன்?

வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த அவதூறுகள் அவசியமற்றவை. வேறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் காத்து நின்றவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

அனைத்திந்திய பார் கவுன்சில் சட்ட விரோதமான தற்காலிக நீக்கங்களில் அவசரம் அவசரமாக ஏன் ஈடுபடுகிறது?

நீதிபதிகளுக்குச் சளி பிடித்துக் கொண்டால், அனைத்திந்திய பார் கவுன்சில் எதற்காகத் தும்முகிறது?

– மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.லஜபதி ராய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்.
நன்றி : வினவு

14 கருத்துகள்:

  1. ஆளுக்கொரு நீதி வேறென்ன ? சொல்வது நண்பரே,,,,

    பதிலளிநீக்கு
  2. ஆளுக்கொரு நீதி இல்லை நண்பரே....ஆளுக்கேற்ற ..நீதி.....நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. பார் கவுன்சிலுக்கும் உண்டோ பூணூல் பேதம் ?

    பதிலளிநீக்கு
  4. சட்டம் சொல்லும் நீதி வேறு
    சட்டவாளர் கூறும் நீதி வேறு
    நம்ம நீதிமன்றில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம நீதி மன்றம் இல்லை நண்பரே..அவர்கள் நி(நீ)திமன்றம்..

      நீக்கு
  5. அவர்களுக்குள்ளேயே இவ்வளவு அபுரிதல் என்றால் பொதுமக்களின் கதி?

    பதிலளிநீக்கு
  6. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே தன்னுரிமை மட்டுமே செல்லும்.பிறருரிமை தடை செய்யப்பட்ட ஒன்று.ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நாம் நமது வார்டு கவுன்சிலரை கூட கேள்வி கேட்க முடிவதில்லை ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துவிட்டோம் .அதனால்தான் கேள்வி கேட்க முடியவில்லை..நண்பரே....

      நீக்கு
  7. நாந்தான் கடைசியா? உண்மையை சொல்லுங்க! பொது மக்களுக்கா நீதிமன்றம்?? இல்ல பொழுது போக்கு நதிமன்றமா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது மக்களையும பொது மக்களுக்காக போராடுபவர்களையும் ஒடுக்கும் மன்றம்...நண்பரே....

      நீக்கு
  8. இதைத்தான் சட்டம் ஒரு இருட்டறை என்கின்றார்களோ?!!1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருட்டு வீட்டுக்குள் மொரட்டு பூச்சாண்டிமாதிரி இருக்கிறார்கள் நீதிபதிகள் நண்பரே

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....