பக்கங்கள்

Wednesday, October 05, 2016

காரணம் தெரிந்துவிட்டது.......அண்ணே........

அண்ணே....அண்ணா. எம்ஜியார் போன்றவர்களை வெளி நாட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற மாதிரி  ஜெயை கொண்டு செல்ல வில்லையேண்ணே  ஏன்ண்ணே.....

அது மருத்துவ சட்ட சிக்கல்லுன்னு சொல்லிக்கிறாங்கடா.... உம் பொண்டாட்டிய பேரு காலத்துக்கு கொண்டு போனபோது..உன்கிட்ட கையேழுத்து வாங்கினது நிணவுல இருக்காடா.......

ஆமாண்ணே.... கையெழுத்து போட்ட பின்தானே  ஆப்ரேசனே செஞ்சாங்கண்ணே....

இத அப்படியே  நிணவுல வச்சுக்க..... இப்ப நா...சொல்றத  அமைதியா..கேட்டுட்டே வா....

சரிண்ணே.............

அண்ணாதுரைய வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு போனபோது.. அண்ணாதுரையின் வீட்டுக்காரம்மா சிகிச்சை பேரேட்டுல கையெழுத்து போட்டாங்க.... எம்ஜியாருக்கு ஜானகி கையெழுத்து போட்டதினால..அமெரிக்காவுக்கு கொண்டு போனாங்க.... ஜெ..க்கு கையெழுத்து போட  யாரு இருக்கா....

உடன் பிறவா  தோழி.... இருக்காங்கலண்ணே....

அவுக ரத்த உறவு முறை இல்லேடா... ரத்த உறவு முறை கொண்டவுகளுக்கு  மட்டும்தான்டா உரிமை இருக்கு.....

அப்போ..அண்ணன்..தம்பி..யாருமே இல்லையாண்ணே....

இல்லேன்னுதானே..... வெளி நாட்டுக்கு கொண்டு போகாம.... அப்பல்லோவில வச்சிருந்து லண்டன் டாக்டர... இங்கு வரவச்சு இருக்காங்க........

சே..... யாருமே..இல்லயா...  அனுபவிக்காம போறதுக்கா இம்புட்டு சொத்து சேத்து வச்சிருக்காங்க.... சாராயக் கடைய திறந்து தமிழ்நாட்டு மக்களை எல்லாம் நாசப்படுத்துனாங்க....

இருக்குற வரை சுகபோகமா..வாழ்ந்து போக வேண்டாமாடா.....

அப்போ..அப்பல்லோவுல சிகிச்சை செய்யிறது அவுக சொந்தப் பணமாண்ணே..

இல்லடா.... அரசு செலவுடா...... இப்போ..உனக்கு காரணம் தெரிந்துவிட்டதா..டா

காரணம்  தெரிந்துவிட்டது..அண்ணே.........

6 comments :

 1. எனக்கும் புரிந்து விட்டது நண்பரே

  ReplyDelete
 2. இந்த காரணம் உண்மைதானா ,அல்லது நீங்களே யூகித்ததா :)

  ReplyDelete
  Replies
  1. அதிமுகவை சேர்ந்தவர் கூறியது....

   Delete
 3. ஓ..! இப்படியும் இருக்கிறதோ..!?
  த ம 4

  ReplyDelete
 4. அருமையான கண்ணோட்டம்

  ReplyDelete
 5. அம்மாவிற்கு ஒரு சகோதரர் தி நகரில் இருப்பதாக எப்போதோ வாசித்த நினைவு...அப்படியென்றால் காரணம் உதைக்குதே இல்லையா...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!