திங்கள் 27 2011

நல்ல......... தம்பி

என்ன தம்பி !ஆளையே காணோம்.
பார்த்து ரெம்ப நாளாச்சு!
வெளியுர்க்கு போயிட்டீங்களா!
குடும்பம்,குட்டி எல்லாம்
சௌக்கியமா இருக்காங்களா?

உங்கள பாத்து ரெம்ப நாளாச்சு!
ஆளே,மாறிட்டிங்களே தம்பி!
வேல அதிகமோ தம்பி
என்ன செய்யறது நாம வாங்கி
வந்த வரம் அப்படி!!


ஆமா,தம்பி உங்க அம்மாவ
சைக்கிள்ல கூட்டிட்டு போவிங்கள
அவுங்க நல்லா இருங்காங்லா தம்பி?
நல்லா பாத்துகுங்க தம்பி!அவுங்கள
பாத்து ரெம்ப நாளாச்சு!  நா....ன்
கேட்டதா சொல்லுங்க தம்பி!


டீ.....  யா.வேணாம் தம்பி 
உங்கல பாத்ததே ரெமப
சந்தோஷம் தம்பி.நீங்க
டீ..குடிக்கிறது இல்லயா?
மாறாம இருக்கிறீங்க தம்பி!


காசா,அதெல்லாம் வேணாம்
தம்பி. நீங்க நல்லா இருந்தா
போதும் தம்பி!வயசாச்சுல!
 நடக்க முடியல அதான் இங்க
உட்காந்து இருக்கேன்.பஸ்சு
வந்துருச்சு தம்பி! நீங்க போங்க
நா.....பத்திரமா வீட்டுக்கு
போயிருவேன்  தம்பி!!!
கவலப்படாமா போங்க தம்பி!
......................................................
.......................................................
........................................................


பிச்சக்கார பயலே,எங்க ஊரு கார
தம்பிடா!!! நல்ல தம்பி.... 
நாம பிச்சையெடுக்கிறது
நல்லதம்பிக்கு தெரிய வேணான்டா????

 

2 கருத்துகள்:

 1. //பிச்சக்கார பயலே,எங்க ஊரு கார
  தம்பிடா!!! நல்ல தம்பி....
  நாம பிச்சையெடுக்கிறது
  நல்லதம்பிக்கு தெரிய வேணான்டா????//

  மொத்தமும் புரிந்தது ....

  அருமை ....

  அன்புடன்
  கருணா கார்த்திகேயன்

  பதிலளிநீக்கு