சனி 25 2011

சமையல் வாயு,டீசல் விலை உயர்வு உடனடி அமல்.

முடியாது!முடியாது! முடியாது!!!
மதிப்பு கூட்டு வரியை குறைக்க
முடியாது,
நீ ஏன்? குறைக்கவில்லை
என்னை குறைக்கச் சொல்ல
உனக்கு யோக்கியதை இல்லை
விலை உயர்வை உடனடியாக 
திரும்பப் பெறவேண்டும்
ஆமாம் சொல்லிபுட்டேன்.


துணிவிருக்கா? உங்களுக்கு?
எங்கே! துணிவிருந்தால்
கூட்டணியில இருந்து
வெளியில வாங்க பார்ப்போம்
உண்மையிலே, .........
நாங்கதான் துணிவுள்ளவங்க!!
விலை உயர்வு மனிதா
பிமானற்றச்செயல்
மனிதாபிமானமுள்ள
அகண்டஇந்துஸ்தானின்
துணிவுள்ள கருத்து இது.


மூளை இருக்கா!
மூளை இல்லையா?
மூளை இருப்பவர்களைவிட
மூளை இருப்பவர்கள் 
பலமுறை நன்றாக
சிந்திக்க வேண்டும் 
விலை உயர்வு
மிகுந்த சிரமத்தை
உண்டாக்கும் ஆகவே,
சிந்திக்க வேண்டும்
என்னா?
நான் சொல்றது?


மாட்டோம்! மாட்டோம்! 
மாட்டோம்!! ஏற்றுக்
கொள்ளமாட்டோம்
என்ன?
கண்ணாமூச்சி விளை
யாடுறீங்களா? நாடு முழுவதும்
லெப்ட்-ரைட் நடத்துவோம்
நீங்களும்  வந்து கலந்துகுங்க!
ரெடியா??


அய்யோ, இன்னும்
கொஞ்ச நேரத்துல
கரண்ட கட்ஆகப்
போவுது சீக்கிரம்
பதிவேற்ற
முடியுமான்னு பாரு!-
எம்மனசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக