புதன், டிசம்பர் 14, 2011

வெண்ணெ திண்ணிகளும்,அவர்கள் வழங்கிய வௌக்கெண்ணெய் தீர்ப்பும்

முல்லை பெரியாறு போராட்டத்தில் தற்போது வழங்கிய உச்சிகுடுமி தீர்ப்பு உம்மன்சாண்டி,அச்சுதானந்தன் மற்றும் அவர்களின் வகையறாக்கள் நிறைந்த கேராளாவுக்கே சாதகமாக உள்ளது.

இந்த வெண்ண திண்ணிகளின் தீர்ப்பானது. தமிழனை இளிச்சவாயன்களாக, கேனையனாக, சுயமரியாதை இல்லாதவனாக நிணைத்துவழங்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால். அக்கம் பக்கம் பார்க்காமல். மிரண்டு ஓடாமல் இருப்பதற்க்காக குதிரையின் கண்களை மறைக்கும் மறைப்பாக உள்ளதுபோல் கேராளாவை மனதிற்க்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய தீர்ப்பில், 2006-ல் இதே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கணக்கில் சேர்க்காமல்.பரிசீலிக்காமல் .அந்தத்தீர்ப்பை நிறைவேற்றாமல் இருந்தற்கககான காரண காரியங்களைஆராயாமல்.142 அடி வரை தேக்கலாம் என்பதை இந்த வெண்ண திண்ணிகளே .கம்பக்கூட்டு மயிறுக்குகூட மதிக்காமல் ,2006ல் கூறிய தீர்ப்பை மறைத்து ,136 அடிவரை தேக்கலாம் என்ற வௌக்கெண்ணெய் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்

இவர்கள் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல் வியாபாரிகளாக நடந்து கொண்டு உள்ளார்கள். இனவெறி பிடித்த கேராளாவின் தேசியகட்சிகள் கூறியமாதிரி 120 அடிக்கு சொன்னாதாண்டா.142 அடிக்கு போகாமல் 136 அடிக்கு வருவான் என்ற அடிப்படையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவுக்கு ஏற்றமாதிரிதான் உச்சி குடுமி மன்றமும் 136அடிவரை தேக்கலாம் என்று தீர்ப்பு கூறிவிட்டு, 142.152அடியைப்பற்றி எதுவும் மூச்சுவிடாமல் திரும்பவும் ஆய்வு ,மட்டை,மண்ணாங்கட்டி என்று முதல் இடத்துக்கே தள்ளி விடுகிறார்கள்.  இந்த வௌக்கெண்ணெய் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சட்த்தையும் நீதியையும்,மனித உரிமையை
மதிக்காத புடுங்கிகள் கூறுகிறார்கள்.

தேசியக்கட்சிகளும், மாநில கட்சிகளும் மத்திய அரசும்,உச்சிகுடுமி நீதி மன்றமும் தமிழனக்கு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல் படுகின்றன.

136அடி தேக்கலாம் என்ற இந்த தீர்ப்பையே பின்னாளில்,142அடி 152அடி தேக்க தமிழகம் முயலும்போது நீதியை மதிப்பது போல் வேஷம்கட்டி கேரளாக்காரன் ஆடவும் வாய்ப்பிருக்.கிறது. அத்தகைய வாய்ப்பைதான் இந்த வெண்ணெய்
திண்ணிகள் வழங்கியிருக்கிறார்கள்

இறுதியாக,தமிழன் 2006-ல் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ப்படி 142அடியை
தேக்கவும்,தமிழக அரசு செலுத்திவரும் பெரியாற்றில் நீர் தேக்கும் பகுதியில்
முதன்முதலில் தன் சுய நலத்துக்காக பொய் செய்தி வெளியிட்ட மனோரமா, மணப்புரம்,முத்துாட் போன்ற முதலாளிகளின் மற்றும் கேரள அரசு உள்பட
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரியாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வும் ,தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க மத்திய பாதுபாப்பு படையை நிறுத்தமறுத்தால் அணையை கைப்பற்றவும். 2006-ல வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அரசு அமுல்படுத்துமவரை கேரள எல்லைகளை மூடவும்போராடவேண்டும். தண்ணீரின்றி(அனுஉலையாலும்) சாவதைவிட போராடி சாவோம்.

முல்லை பெரியாற்று போராட்டம் அய்ந்து மாவட்டங்களின் பிரச்சனை என்று
தமிழர்கள் இளிச்சவாயன்களாகாமல்,இனவெறிக்கு பலியாகமல் போராட வர
வேண்டும். இனியும் போராட மறுத்தால் ஒதுங்கி கொண்டால்.நாயைவிட
கேவலமான நிலைக்கு ஒவ்வொரு பிரச்சினையிலும் அடக்கி ஒடுக்கப்படும்
நிலையே ஏற்ப்படும்

நம்ம வீட்டு சோற திண்று நம்மலையே கடிக்கும் நாயாக தமிழ்நாட்டு பேலீசும் அடக்கி ஒடுக்கும். நாயைப்போல் வாழப்போறோம்மா?  சுயமரியாதையுள்ள மனிதநேயமுள்ள உரிமையை மீட்கும் அஞ்சாத தமிழனாக வாழப்போறேம்மா
ஒவ்வொரு தமிழனும் செயலாற்ற வேண்டிய நேரமிது!!!!!!!!.

.

4 கருத்துகள்:

 1. நாயாக தமிழ்நாட்டு பேலீசும் அடக்கி ஒடுக்கும். நாயைப்போல் வாழப்போறோம்மா? சுயமரியாதையுள்ள மனிதநேயமுள்ள உரிமையை மீட்கும் அஞ்சாத தமிழனாக வாழப்போறேம்மா
  ஒவ்வொரு தமிழனும் செயலாற்ற வேண்டிய நேரமிது!!!!!!!!.
  /// கண்டிப்பா தோழரே.. இதுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கு..

  பதிலளிநீக்கு
 2. நியாயத்திற்காக எந்த மயிரையும் பிடுங்காமல் துரோகம் ஒன்றையே தமிழ்மக்கள் மீது திணிக்கும் நரிகளை எதிர்த்து நமது உரிமைக்கு போராடி சாவதே மேல்,பதிவுக்கு ஒரு சல்யூட் வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 3. நியாயத்திற்காக எந்த மயிரையும் பிடுங்காமல் துரோகம் ஒன்றையே தமிழ்மக்கள் மீது திணிக்கும் நரிகளை எதிர்த்து நமது உரிமைக்கு போராடி சாவதே மேல்,பதிவுக்கு ஒரு சல்யூட் வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 4. இதில் இன்னொரு விஷயத்தை பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்கள்... அது கேரளா மக்களின் அச்சம் நியாயமானது என்றும் பரிசீலிக்க பட வேண்டியது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

  பதிலளிநீக்கு