பக்கங்கள்

போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 07 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -90.....

 




ஏரோட்டும் உழவர்

போராட்டம் வெல்க !

><><><><><><><><><><><><><><

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக முகங்கள் தெரிகிறதா ?


□ பி. அய்யாக்கண்ணு (தமிழக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்)

□ கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு)

□ பி.ஆர்.பாண்டியன் (விவசாய சங்கத் தலைவர்)

□ என்.எஸ். பழனிச்சாமி 

(கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர்)

□ இராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்கம்)

□ கே.பி.இராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)


□ ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)

□ அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)

□ இளங்கீரன் 

(காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)

□ கிருஷ்ணன் 

(ஏரிநீர்ப்பாசனச் சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

□ பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)


□ கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).

□ சரவணன்

(இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)

□ வெங்கடபதி (தனியார் சக்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)

□ விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)

□ நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)


□ இராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)

□ ஜெனார்த்தனன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

□ சுதர்சனம் 

(படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

□ சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசனச் சங்கம், இராமநாதபுரம்)

□ செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)


□ அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ இராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை)

□ இரகுபதி 

(ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சக்கரை ஆலை).

□ லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்,

திருப்புலிவனம்) 


□ திருவேங்கடம் (அனைத்துப் பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).

□ சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சக்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).

□ ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)

□ மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)

□ ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்)


தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் முகம் தெரிகிறதா ?  தேடிப்பாருங்கள்.

ஞாயிறு 10 2015

அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்...???..

படம்-ttnnews.com

தொழிலாளி என்றால் போனசுக்கு போராடுவார்.
அரசு ஊழியர் என்றால் பஞ்சபடிக்கு போராடுவார்
நடுத்தர விவசாயி என்றால்.உரம்,பூச்சி மருந்து
விலை குறைக்க போராடுவார்
கூலி விவசாயி என்றால் கூலி உயர்வுக்கு போராடுவார்.

இப்படி ஒவ்வொருத்தரும் தங்கள் --பிறர் நலன் சார்ந்து போராடும்போது
தமிழ்நாட்டு  அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்????



வியாழன் 12 2012

மாவீரர்பகத்சிங்-ன் அறுபத்துமூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம்


1929ஆண்டு சூலை12தேதி, லாகூர் சதி வழக்கில் சந்திரசேகர் ஆசாத்
தவிர பகத்சிங் உள்பட பல முக்கிய தோழர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர். இந்த லதகூர் சதி வழக்கானது,அகிம்சாவழி மற்றும்
மதவழி போராடியவர்கள் மீது போடப்பட்டவேறு எந்த வழக்குகளை
காட்டிலும் இந்திய மக்களின் அனைவரின் கவனத்தையும் அதிகம்
கவர்ந்த வழக்காகும்.
இன்றைய சிறைசாலையைப்போல்தான் அன்றைய சிறைச்சாலையில்
இளம் தேசப்பக்த வீர்ர்கள் கடும் சித்தரவதை செய்யப்பட்டனர், மற்ற
சாத்வீகமாக போராடிய கைதிகளும் விதிவலக்காக தப்பவில்லை.இங்
நிலையில் பகத்சிங் தனக்காக இல்லாமல் அனைத்து அரசியல் கைதிக
ளுக்கும் விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்
1.அரசியல் கைதிகளை தனிமைச்சிறையில்-தனிக் கொட்ட்டியில் அடைக்
க்க்கூடாது.ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.கைதிகளுக்கு சாப்பிட தகந்த நல்ல உணவு அளிக்கப்பட வேண்டும்.
3. புத்தகங்கள்,செய்தித்தாள்கள் படிக்க அனுமதிக்க வேண்டும்.
4.அரசியல் கைதிகளை சமூக விரோதிகளாக கருதி கொடுமையான பணி
களில் இடுபடுத்தக்கூடாது
5. தண்டனை காலம் முடிந்தவடன் கைதிகள் விடுதலை செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,சித்திரவதை செய்யப்
பட்ட அரசியல் கைதிகளின் உரிமைக்களுக்காகவும்,வெள்ளை வெறியர்
களின் கொடுஞ்செயல்களை கண்டித்தும் 1926 ஆண்டு சூலை 12ம்நாள்
தொடங்கி அறுபத்து மூன்று நாட்கள வரை சிறை கொட்டடி வளாகத்தில்
 நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வரலாறு படைத்த 
போராட்டமாக நடைபெற்றது.


புதன் 14 2011

வெண்ணெ திண்ணிகளும்,அவர்கள் வழங்கிய வௌக்கெண்ணெய் தீர்ப்பும்

முல்லை பெரியாறு போராட்டத்தில் தற்போது வழங்கிய உச்சிகுடுமி தீர்ப்பு உம்மன்சாண்டி,அச்சுதானந்தன் மற்றும் அவர்களின் வகையறாக்கள் நிறைந்த கேராளாவுக்கே சாதகமாக உள்ளது.

இந்த வெண்ண திண்ணிகளின் தீர்ப்பானது. தமிழனை இளிச்சவாயன்களாக, கேனையனாக, சுயமரியாதை இல்லாதவனாக நிணைத்துவழங்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால். அக்கம் பக்கம் பார்க்காமல். மிரண்டு ஓடாமல் இருப்பதற்க்காக குதிரையின் கண்களை மறைக்கும் மறைப்பாக உள்ளதுபோல் கேராளாவை மனதிற்க்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய தீர்ப்பில், 2006-ல் இதே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கணக்கில் சேர்க்காமல்.பரிசீலிக்காமல் .அந்தத்தீர்ப்பை நிறைவேற்றாமல் இருந்தற்கககான காரண காரியங்களைஆராயாமல்.142 அடி வரை தேக்கலாம் என்பதை இந்த வெண்ண திண்ணிகளே .கம்பக்கூட்டு மயிறுக்குகூட மதிக்காமல் ,2006ல் கூறிய தீர்ப்பை மறைத்து ,136 அடிவரை தேக்கலாம் என்ற வௌக்கெண்ணெய் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்

இவர்கள் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல் வியாபாரிகளாக நடந்து கொண்டு உள்ளார்கள். இனவெறி பிடித்த கேராளாவின் தேசியகட்சிகள் கூறியமாதிரி 120 அடிக்கு சொன்னாதாண்டா.142 அடிக்கு போகாமல் 136 அடிக்கு வருவான் என்ற அடிப்படையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவுக்கு ஏற்றமாதிரிதான் உச்சி குடுமி மன்றமும் 136அடிவரை தேக்கலாம் என்று தீர்ப்பு கூறிவிட்டு, 142.152அடியைப்பற்றி எதுவும் மூச்சுவிடாமல் திரும்பவும் ஆய்வு ,மட்டை,மண்ணாங்கட்டி என்று முதல் இடத்துக்கே தள்ளி விடுகிறார்கள்.  இந்த வௌக்கெண்ணெய் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சட்த்தையும் நீதியையும்,மனித உரிமையை
மதிக்காத புடுங்கிகள் கூறுகிறார்கள்.

தேசியக்கட்சிகளும், மாநில கட்சிகளும் மத்திய அரசும்,உச்சிகுடுமி நீதி மன்றமும் தமிழனக்கு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல் படுகின்றன.

136அடி தேக்கலாம் என்ற இந்த தீர்ப்பையே பின்னாளில்,142அடி 152அடி தேக்க தமிழகம் முயலும்போது நீதியை மதிப்பது போல் வேஷம்கட்டி கேரளாக்காரன் ஆடவும் வாய்ப்பிருக்.கிறது. அத்தகைய வாய்ப்பைதான் இந்த வெண்ணெய்
திண்ணிகள் வழங்கியிருக்கிறார்கள்

இறுதியாக,தமிழன் 2006-ல் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ப்படி 142அடியை
தேக்கவும்,தமிழக அரசு செலுத்திவரும் பெரியாற்றில் நீர் தேக்கும் பகுதியில்
முதன்முதலில் தன் சுய நலத்துக்காக பொய் செய்தி வெளியிட்ட மனோரமா, மணப்புரம்,முத்துாட் போன்ற முதலாளிகளின் மற்றும் கேரள அரசு உள்பட
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரியாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வும் ,தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க மத்திய பாதுபாப்பு படையை நிறுத்தமறுத்தால் அணையை கைப்பற்றவும். 2006-ல வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அரசு அமுல்படுத்துமவரை கேரள எல்லைகளை மூடவும்போராடவேண்டும். தண்ணீரின்றி(அனுஉலையாலும்) சாவதைவிட போராடி சாவோம்.

முல்லை பெரியாற்று போராட்டம் அய்ந்து மாவட்டங்களின் பிரச்சனை என்று
தமிழர்கள் இளிச்சவாயன்களாகாமல்,இனவெறிக்கு பலியாகமல் போராட வர
வேண்டும். இனியும் போராட மறுத்தால் ஒதுங்கி கொண்டால்.நாயைவிட
கேவலமான நிலைக்கு ஒவ்வொரு பிரச்சினையிலும் அடக்கி ஒடுக்கப்படும்
நிலையே ஏற்ப்படும்

நம்ம வீட்டு சோற திண்று நம்மலையே கடிக்கும் நாயாக தமிழ்நாட்டு பேலீசும் அடக்கி ஒடுக்கும். நாயைப்போல் வாழப்போறோம்மா?  சுயமரியாதையுள்ள மனிதநேயமுள்ள உரிமையை மீட்கும் அஞ்சாத தமிழனாக வாழப்போறேம்மா
ஒவ்வொரு தமிழனும் செயலாற்ற வேண்டிய நேரமிது!!!!!!!!.

.

செவ்வாய் 02 2011

போராடடத்தில் தோழர்கள்.............................

தமிழகத்து கார்பரேட் கல்வி முதலாளிகளின் காவல்தெய்வம்,
சிறிரங்கத்து ரங்கநாயகி, சமச்சீர்கல்வி தெடர்பான எந்த சட்டத்தையும்
நீதியையும்,உத்திரவையும் மதித்து அமுல் படுத்த மறுக்கும்
அடங்காபிடாரி,நாய்தின்ன மறுக்கும் ரேஷன் அரிசியை
இலவசமாக்கியதால் பெயரெடுத்த அன்னபுரணி

சும்மா விளையாட்டுக்கா சொன்னார்கள் வினவு தோழர்கள்
முன்னது பேயாட்சி,பின்னது பிசாசு ஆட்சிஎன்று!

நாற்காலியில் அமர்ந்து முதுகை சாய்ந்து கொள்வதற்கு
முன்னமே பிசாசு தன் ஆட்டத்தை தொடங்கி விட்டது.
பேய்க்கும் பிசாசுக்கும் மக்களை ஏயப்பதிலும் ஏமாற்றுவதிலும்
ஒடுக்குவதிலும் ஒற்றுமை இருந்தாலும் நேரடியாக பேய்க்கும்
பிசாசுக்கும் பிடிக்காது.ஜென்மப் பகை.

முன்பு  இருண்ட காலத்தில் பிசாசு போட்ட ஆட்டம் பிடிக்காமல்
பேயனாது பிசாசை உலுக்கோன்னு  உலுக்கிவிட்டது. இன்று
நாற்காலியில் பிசாசு அமர்ந்தவுடன் பழைய காட்டுவாசி
ஆட்டம் போடாமல்  டவுன் ஆட்டம் போடுகிறது.

இந்த ஆட்டத்துக்கு பலியாவது படிக்கும் கல்வி மாணவர்களும்
படிக்க வைக்கும்பெற்றோர்களும்தான்.

படிக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைகழிக்கும்
பிசாசு ஆட்சிக்கு எதிராக.புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னனி
மனித உரிமை பாதுகாப்பு மையமும்,பெற்றோர்மாணவர்சங்கமும்
சமச்சீர் கல்வியை அமுல்படுத்து! உச்சநீதிமன்ற உத்திரவின்படி
சமச்சீர் புத்தகத்தை வழங்கு என்று போராடுகிறார்கள்

போராடினால் அமைதிபுங்காவான பிசாசுக்கு பொறுக்காதே!
காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும்
ஏவல் மூலம் போராடும் தோழர்களை அடக்குகிறது.

கல்யாணம் செய்து நாலுனென்ன,ரெண்டு பிள்ளய பெத்து
படிக்க வச்சா,கல்வி வள்ளல்களின் கொள்ளை  தெரியும்
செல்வியா இருக்கும் பிசாசுக்கு எப்படி புரியும். பிசாசு
படித்து வந்ததோ அதி உயர்ந்த கான்வெண்ட் பள்ளி.
நாய்க்கு தெரியுமா? இது நல்ல நாள் பனை என்று!
கழுதைக்கு தெரியுமா? கற்புர வாசனை! உழைக்கும்
மக்களுக்குத்தான சமச்சீர் கல்வியின் அவசியம் தெரியும்

இந்த கல்வியில்கூட சமத்துவம் வந்துவிடக்கூடாது.
என்பதற்குத்தான் செல்வி பிசாசு அடங்க மறுத்து
அத்து மீறுகிறது.

உலக நீதி பேசும் உச்சி (அ)நீதி மனறமோ, சட்டத்துக்கு
முன் அனைவரும் சமம் என்று மக்களிடம் போதனை
சொல்லி , பல்லை கடிக்காமல்,எச்சிலை சத்தமில்லாமல்
விழுங்கி,செம்பை எடுத்து வெளியில் வைக்கிறது.

போராடும் தோழர்களோ!  மக்களை உடனே புரட்சி
செய்ய வாங்க என்று அழைக்கவில்லை.மாணவர்களை
அறிவுள்ள மனிதனாக ஆக்குவதற்கு, கல்வி ஆய்வாளர்கள்
பலர் ஒன்றுகூடி ஆராய்ந்து படைத்த சமச்சீர்கல்வியை
அமுல்படுத்து என்று கோரி போராடுகிறார்கள்.

சமச்சீர்கல்விக்கு உத்திரவிட்ட பேயாட்சியோ! சமச்சீர்
கல்வியை முழுவதுமாக அமுல்படுத்தாமல். அடுத்தும்
நாம்தானே! என்ற மப்பில் இருநததினால் மாணவர்களின்
கல்வி இழு இழு ன்னு இழுத்து செல்கிறது.

பிசாசோ,சட்டத்தின் சந்து பொந்துகளில் சென்று கறாராக
அமுல்படுத்த மறுக்கிறது. சமச்சீர் கல்வியை நான்தான்
கொண்டுவந்தேன் என்று பெருமை பேசும் பேயோ போராடாது.
அது பிசாசின் சாட்டையடிக்கு  தப்பிப்பதுக்குத்தான் போராடும்

குள்ளநரி கூட்டமும் ஓரிரு ஊளையுடன் நின்றுவிடும்.
அடுத்து சொரி நாய்களும் அடுத்த தேர்தலுக்கு ஆதாயமாக
குரைத்துவிட்டு அடங்கிவிடும்

விடாப்பிடியாக போராடுபவர்கள் யாரென்றால் தோழர்கள்தான்
பத்திரிக்கை துாண்கள் எல்லாம் தங்கள் சுதந்திரத்தை போலீஸ்
அறிக்கையைக் கொண்டு வெளியிடும்.;மெத்த படித்த மே தாவிகளோ
அமைதிப்புங்காவை குழப்புவதற்காகவே  போராடுகிறார்கள் என்று
கருத்துரை வழங்குவார்கள்.செயல் வீரர்களோ வேலை வெட்டி
இல்லாததால் இப்படி என்பார்கள். அட மடசாம்பிரானிகளே!!!

நீதி வேண்டும் என்றால் போராடவேண்டும்,சமச்சீர்கல்வி
வேண்டுமென்றால் போராடவேண்டும்..அச்சம்,அறியாமை
அகல வேண்டுமென்றால் போராடவேண்டும்.அநீதிகளை
எதிர்க்க வீரம் வேண்டும். வீரம் வேண்மென்றால் போராட
வேண்டும். போராட்டமே! வாழ்க்கையின் விதி!

அந்த விதியால் சமச்சீர் கல்வி போராட்டத்தில் 
தோழர்களுடன்  குதித்தேன். காலையில் கைது செய்து
மாலையில் விட்டுவிடுவார்கள் என்று நினைத்து அல்ல
அச்சமும்.ஒதுங்கும்போக்கும் அகல......

மாலையில் விடவில்லை. அடைத்தார்கள.சென்ட்ரல்
சிறையில் அதிகாலை மூன்று மணிக்கு. சிறை வாயிலில்
முழக்கம் போட்டதற்க்காக காவல் நாய் ஒன்று முழக்கமிட்ட
தோழரை கடிக்க பாய்ந்தது. கூட்டாக தோழர்கள் பாய்ந்ததால்
பதுங்கி ஓடிவிட்டது.அஞசாத தோழர்களின் முழக்கத்தால்
சிறை அதிர்ந்தது.மூன்று இரவும் நான்கு பகலும் சிறையில்
படிப்பதிலும் விவாதிப்பதிலும். வழக்கறிஞர் தோழர்களால்
பினையில் வந்தபோது  அச்சம் அகன்றது. போராட்ட வீரம்
விளைந்தது. அடுத்த போராட்டத்தில் தோழர்கள்.............................
நர்னும்தான் !



தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...