திங்கள் 13 2014

சூது யாரைக் கவ்வும்????.........

படம் தமிழ்முரசு











பத்து வருடத்துக்கு முந்தி ஈழத்தமிழரை கொன்று ஒழித்த ராஜபக்சேவை எதிர்த்து ம.க.இ.க,புமாஇமு,விவிமு சார்பாக ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்ததில் மதுரை மாவட்ட நீதி மன்றதுக்கு  வழக்கு எதுவுமே இல்லாத மாதிரி, கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட அணைத்து தோழர்க்கும்  சம்மன் அனுப்பியதிலும்,  எந்த குட்டியையும் ஈனாத ஈழத்தாய் வழக்கை வாபஸ் வாங்கி ரத்து செய்யாததாலும் வெற்றிகரமாக மூன்றாவது வருடம் முடிந்து  நாண்காம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் வாய்தாவுக்கு “ உள்ளேன் அய்யா” என்று சொல்லி ஆஜர் ஆவதற்க்காக பஸ்ஸில் சென்று கொண்டு இருந்த பொழுது............

நீண்ட காலத்திற்குப்பின் “தவமாய் காத்திருந்து”  புதிதாய் வாங்கிய சாம்சாங் செல்போனில் வந்த அழைப்பை பேசிவிட்டு. மறதியாக மேல் சட்டையின் உள் பையில் வைப்பதற்கு பதிலாக வெளிப்பையில் வைத்துவிட்டேன்.

“தவமாய் காத்திருந்து” வாங்கிய புதிய செல்போன், பஸ்ஸில் எனக்கு அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவருக்கு பிடித்து போய்விட்டது.

நீங்கள் வைத்திருக்கும் செல்போன் எனக்கு பிடித்துவிட்டது. அதை என்னிடம் சும்மா கொடுத்துவிட்டு போங்கள் என்றால்“லூசுப்பயல்கூட தர மாட்டான் என்று அவருக்கு முன்பே அனுபவத்தில் தெரிந்திருப்பார் போலும்.

அதனால் என்னிடம் கேட்பதை தவிர்த்துவிட்டு.“என்னை நோட்டம் விட்டார்” என்னை நோட்டம் விட்டதில் அந்த வல்லுநரின் மூளை என்னை கேனப்பயல் என்று அறிவுறுத்திருக்கிறது.

அதனால் சந்தோசப்பட்ட அந்த  வல்லுநர். தன்னுடைய தொழில் திறமையை என்னிடம் மெது மெதுவாக காட்டினார்.

பஸ் சிம்மக்கல் நிறுத்தத்தில் நிற்கும்போது ஏறிய கூட்டமும் அவருக்கு மேலும் சாதகமாக இருந்தது. பஸ் பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் பொழுது

தொழில் வல்லுநர். என்தோள்பட்டையின் மீது பட்டும்படாமல் தன் கையை வைத்தார். என்னிடமிருந்து எந்தவித  எதிர்ப்பும் இல்லாததை  தெரிந்து கொண்ட அவர்,  சட்டென்று என் சட்டைப்பையில் இருந்த செல்போனை கைகளால கவ்வினார்.

கண்ணும் காதும் கோளாறாக இருந்தாலும். “தொடு உணர்ச்சி” கோளாறு அடையாததால்.  தொழில் வல்லுநர் என் செல்போனை தொட்டவுடன். என் இடது கை அணிச்சை செயலாக மேல் சட்டைப்பையை கவ்வி பிடிக்க.....

தொழில் நுட்பக் கோளறால் தொழில் வல்லுநர் தன் கையை என் பையிலிருந்து எடுக்க .. கைகளுக்குள் எந்தவித மோதலும் இல்லாமல் நடந்து  முடிந்து
விட்டது.

கவணித்துவிட்ட நான். அந்தத் திருடனாரை பார்த்து.“ அய்யா, தங்களுடைய தொழில் திறமையை இப்படிபட்ட இடத்தில்........என்னை மாதிரியான ஆட்களிடாமா காட்டவேண்டும். வேண்டாமய்யா...... நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ள முடியாவிட்டால் உங்கள் திறமைக்கு சவால் விடும் இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசிக் கொண்டே செல்போனை எடுத்து உள் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன்.

நீதி மன்றத்தில் இறங்கு வதற்கு முன் பஸ் அம்பேத்கர் சாலையில் வந்து கொண்டு இருக்கும்பொழுது தொழில்நுட்ப திருடானரை தேடியபோது  அவரை காணவில்லை.

தன்னுடைய தொழில் நுட்பக்கேளாறை  நொந்து கொண்டு, தல்லாகுளம் பஸ் நிறுத்தில் இறங்கியிருப்பார் என்று நிணைத்துக் கொண்டு நடையை கட்டினேன்.

அந்தக் கூட்டத்திலும் நான் அப்பாவியாக. திருடானரிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்ட ஒருவர். பஸ்ஸை விட்டு இறங்கியபின் “அவனை  அடிக்காமல் சும்மா விட்டுடீங்களே!!” என்று ஆதங்கப்பட்டார்.

திருடானாரை அடித்துவிட்டால், திருடனார் தப்பு செய்தற்கு தண்டனை வாங்கியாச்சுன்னு மனம் கோனாமல்  பெருந்தன்மையாக போய்விடுவாரா.........என்ன......???

படித்த நீங்கள் சொல்லுங்கள்.“ சூது யாரைக் கவ்வும்”???


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...