செவ்வாய் 14 2014

தேவையின் போது ...கிடைக்காததினால் வேண்டாமுன்னு சொன்ன தம்பி...



படம்--sinthanaiillathavan.blogspot.com

ஏப்பா.........தம்பி...

என்னா.......ண்ணே.....

நா.... ஒன்னு கேட்டா..
தப்பா நெணைக்க மாட்டியே...

என்னான்னு கேளுங்கண்ணே
தப்பா.... சரியான்னு பிறகு
நெணைக்கிறேன்.....ணே..

அது..... வேற ஒன்னுமில்ல தம்பி
ஒன்ன...பத்திதான்...தம்பி..........

என்னப்பத்தியா......அது
என்னான்னு... சொல்லுங்கண்ணே.

ஒனக்கு வயசு இம்பட்டு ஆகியும்
நீ கலியாணம் கிளியாணம்
முடிக்காமே இருக்கீயே........ஏந் தம்பி...

அதுவா..............ண்ணே
அது வேற ஒன்னுமில்லண்ணே
எனக்கு தேவைப் படும்போது
எதுவுமே கிடைக்கலண்ணே....அதனால
தேவைப்படும்போதே கிடைக்கலையே
அது இனி என்னாத்துக்குன்னு
விட்டுட்டேண்ணே...................

அட...என்னப்பா.....இது
அநியாயமா..... இருக்கு
எல்லாருக்கும் எல்லாதும்
தேவைப்படும்  போதா
கிடச்சிருக்கு...........

எல்லாருக்கும் எல்லாமும்
தேவைப்படுற நேரத்தில்
கிடைக்கட்டும் என்றுதாண்ணே
வேண்டாமுன்னு விட்டுட்டேன்

அட......போ்ப்பா...பெரியாரே!!
அறுபது வயசுல கலியாணம்
முடிச்சாரு... அது தெரியுமுல....

அவருக்கு தேவைப்படும்போது
கிடைத்தது அதனால் முடித்தாரு..
அதையே காரணம் காட்டி ...அவளோ
படி தாண்டா பத்தினியுமல்ல..நானோ
முற்றும் துறந்த முனிவருமல்ல..என்று
சொன்ன் பொழப்பு வாதியின் பிதாமகன்
 ஒருவர்.....வாந்தாரு... அது தெரியுமுல்ல

அது அதுக்கு ஒரு காரணம்
வச்சுயிருக்கியே.....தம்பி.....



2 கருத்துகள்:

  1. நீங்க சொல்ற அந்த தம்பி பேர் என்ன )
    கர்மவீரரின் வாரிசோ )
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. கர்ம வீரர் கலியாணமே முடிக்காத போது... அந்தத் தம்பி எப்படி அவரின் வாரிசாக இருக்க முடியும்...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...