வியாழன் 30 2014

கொள்ளைக்காரிகளை விட ..சிறந்த கொள்ளையர்கள்???

வங்கி எதிரேயுள்ள கட்டடத்தில் தோண்டப்பட்ட  சுரங்கப்பாதையை புகைப்படம் எடுக்கும் காவலர்.
படம்--தினமணி


வல்லரசாக போகிற இந்திய வரலாற்றில் முதன்முதலாக, வங்கிக் கொள்ளைக்காக கத்தி,அரிவாள், துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தாமல் எவரையும் கழுத்தறுத்து கொள்ளாமல் ,பெண்களை மானபங்கப்படுத்தாமல்,குறிப்பாக சொல்வதென்றால் ரத்தக் களறி ஏற்படாமல்...... செய்தி படித்த பலரும் வியக்கும் வண்ணம் சாதனை மிக்க ஒரு கொள்ளை நடந்துள்ளது.

முன்பு கேரளாவில் நடந்த 80 நீள சாதனையை முறியடித்து,ஒருகாலமாத சம்பளத்துக்கு வேலை பார்த்த மாதிரி திட்டமிட்டு.2.5 அகலத்துக்கும் 125 அடி நீளத்துக்கும் சுரங்கம் தோண்டி அரியாணவில்உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து சுமார் 100 கோடி மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள்.

தேர்தலில் நிற்காமல், பொய்யான வாக்குறுதிகள் கொடுக்காமல்,  கிறுக்கு பய கேனப் பய மக்களை ஏமாற்றி மூன்று முறையோ அய்ந்து முறையோ முதலமைச்சர் ஆகாமல்... அடுத்தவர்களை மிரட்டாமல், பழி தூற்றாமல்,   மற்றவர்களுக்கு இம்சை கொடுக்காமல், தங்களை வருத்திக் கொண்டு சுரங்கம் தோண்டி   கொள்ளை அடித்தார்கள்  பலே கில்லாடி கொள்ளயர்கள்


 66கோடியே 65 லட்சம் கொள்ளையடித்த கொள்ளைகாரிகளைவிட....... 18 வருடமாக வாய்தா வாங்கிய  வாய்தா ராணிகளைவிட.......நீதிபதி திரு. மைக்கேல் குன்ஹா அளித்த சரியான தீர்ப்பை மதிக்காமல் , தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய உச்சி குடுமி நீதிமன்றத்தைவிட ...........இந்தக் கொள்ளைக்காரர்கள்  சிறந்த கொள்ளையர்களாத்தான் தெரிகிறார்கள்


6 கருத்துகள்:

  1. இந்த கிரிமினல் கொள்ளையர்கள் பிடிபட்டால்,அவர்களிடம் நம்ம சிவில் எஞ்சினியர்களை அனுப்பி பாடம் படிக்க வைக்கலாமா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. கொள்ளைக்காரிகளை விட
    சிறந்த கொள்ளையர்களா
    2.5 அகலத்துக்கும்
    125 அடி நீளத்துக்கும் சுரங்கம் தோண்டியா
    அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  3. ஓ..தாராளமாக அனுப்பி வைக்கலாம் ஜீ அப்படியாவது. சிவில் எஞ்ஜினியர்கள் வேலை செய்வார்கள்ல...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    ஆட்சித் திருடர்களைவிட இந்த காட்சித் திருடர்கள் மேலானவர்களாத்தான் தெரிகிறார்கள்... ஆட்சியாளர்களுக்கு இது தெரிந்தால் அங்கே அவர்களைத் பின் தொடர்ந்தாலும் தொடரலாம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கு நன்றி! அய்யா. திரு. மனவை ஜேம்ஸ் அவர்களுக்கு..

    ஆட்சியில் இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக தொடரமாட்டார்கள் என்றே நிணைக்கிறேன் ஏனென்றால் அவர்களின் பங்கு குறைந்தால் காட்டி கொடுத்துவிடுவார்கள்..இல்லையென்றால் ரகசியமாக எதிர்கட்சிகாரர்களுக்கு போட்டுக் கொடுப்பார்கள.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...